000 |
: |
nam a22 7a 4500 |
008 |
: |
200206b ii 000 0 tam d |
245 |
: |
_ _ |a நரசிம்மர் |
300 |
: |
_ _ |a வைணவம் |
340 |
: |
_ _ |a கருங்கல் |
500 |
: |
_ _ |a நரசிம்மர் எட்டுக் கைகளுடன் காட்சியளிக்கிறார். சிறிய கிரீட மகுடம் தலையை அலங்கரிக்க, சிங்க முகத்தினை பிடரி அலங்கரிக்க, ஓங்கி உயர்ந்த நெடியவராய், வலது காலை ஊன்றி, இடது காலை மடக்கி உயர்த்தி மடியில் இரண்யனை கிடத்தியுள்ளார். அரையாடை அணிந்து, கால்களில் தண்டையும், பாடகமும் அணிசெய்ய, எண்கைகளில் மேலிரு கைகளை உயர்த்தியும், அடுத்த இரு கைகளில் சங்கமும் சக்கரமும் கொண்டும், மற்ற இரு கைகள் கொண்டு திமிறிக் கொண்டு ஓட எத்தனிக்கும் இரண்யனின் காலையும், கையையும் பிடித்தவாறும் உள்ளார். இச்சிற்பக் காட்சி வதம் செய்யும் நிலைக்கு முந்தையக் காட்சியாகக் கொள்ளலாம். இரண்யனின் தலையை கிரீட மகுடம் அலங்கரிக்கிறது. பத்ரகுண்டலங்கள் அணிந்து, அரசனுக்குரிய ஆடையணிகள் கொண்டுள்ளான். முகத்தில் மீசை காணப்படுகிறது. சிறந்த வீரனின் உடல்வாகும், தோற்றப்பொலிவும் காட்டப்பட்டுள்ளது. |
510 |
: |
_ _ |a ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 . |
520 |
: |
_ _ |a அழகர் கோயிலின் நுழைவாயில் முதன்மை கோபுரத்தையடுத்து அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. வரிசையாக இருபுறமும் உள்ள தூண்களில் அளவில் பெரியனவாக இச்சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நரசிம்ம அவதாரச் சிற்பங்கள் இரண்டு வடிக்கப்பட்டுள்ளன. நரசிங்கர் இரண்யனை வதம் செய்யும் காட்சி இரண்டு தூண் சிற்பங்களிலும் காட்டப்பட்டுள்ளன. ஆனால் இரு நரசிம்மரின் உருவமைதியும் வேறுபட்டுள்ளன. |
653 |
: |
_ _ |a அழகர் கோயில், அழகர்மலை, மதுரை, கள்ளழகர், சித்திரைத் திருவிழா, அழகர் ஆற்றில் இறங்குதல், நூபுரகங்கை, சித்ரா பௌர்ணமி, சுந்தரராஜப் பெருமாள், வையை, வைகை, சிற்பங்கள், கற்சிற்பங்கள், நாயக்கர், திருமலை நாயக்கர், கலைப்பாணி, தூண் சிற்பங்கள், நரசிங்கர், நரசிம்மர், விஷ்ணு, தசாவதாரம் |
700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
752 |
: |
_ _ |a அழகர்கோயில் |b அழகர் கோயில் |c அழகர்கோயில் |d மதுரை |f மேலூர் |
905 |
: |
_ _ |a கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு |
914 |
: |
_ _ |a 10.0723104 |
915 |
: |
_ _ |a 78.2139874 |
995 |
: |
_ _ |a TVA_SCL_001384 |
barcode |
: |
TVA_SCL_001384 |
book category |
: |
கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_001384/TVA_SCL_001384_மதுரை_அழகர்கோயில்-002.jpg |
: |
|
Primary File |
: |
TVA_SCL_001384/TVA_SCL_001384_மதுரை_அழகர்கோயில்-001.jpg
TVA_SCL_001384/TVA_SCL_001384_மதுரை_அழகர்கோயில்-002.jpg
|