MARC காட்சி

Back
ஸ்ரீமாவடி கருப்பசாமி கோயில்
245 : _ _ |a ஸ்ரீமாவடி கருப்பசாமி கோயில் -
246 : _ _ |a கருப்பசாமி கோயில்
520 : _ _ |a மதுரை மாநகரம் கூடல்நகரில் ஸ்ரீமாவடி கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. கருப்பசாமி வழிபாடு இங்கு பல காலமாக நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இங்குள்ள கருப்பசாமி கோயில் கட்டிட அமைப்பில்லாது திறந்த வெளியில் அமைந்துள்ளது. படிகளுடன் கூடிய பீடத்தின் மீது கருப்பசாமியின் சிலையை வைத்து வணங்குகிறார்கள். காவல் தெய்வமாகிய கருப்பசாமிகள் பலர். இங்குள்ள கருப்பசாமி தெய்வம் ஸ்ரீமாவடி கருப்பசாமி என்று பெயர் பெறுகிறார். ஊர்க்காவல் தெய்வமாகிய கருப்பசாமி வழிபாடு தென்தமிழகம் எங்கும் குறிப்பாக மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகின்றது.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், காவல் தெய்வங்கள், ஸ்ரீமாவடி கருப்பசாமி கோயில், கருப்பசாமி, கருப்புசாமி, கருப்பு, கருப்பணசாமி, கூடல்நகர், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a அஜித், ஜீவானந்தம், ஏபிஎஸ் ஹாலிடேஸ்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.17-ஆம் நூற்றாண்டு/நாயக்கர் காலம்
909 : _ _ |a 5
910 : _ _ |a மதுரை நகருக்குள் அமைந்த காவல்தெய்வக் கோயிலாகும். கருப்பசாமி ஊர்க்காவல், எல்லைக்காவல் முதலியவற்றிற்காக வழிபடப்பெறுகிறார்.
914 : _ _ |a 9.9588493567145
915 : _ _ |a 78.100783750725
923 : _ _ |a வைகை ஆறு
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a ஸ்ரீமாவடி கருப்பசாமி கோயிலில் மாவடி கருப்பசாமி நின்ற நிலையில் கற்சிற்பமாகவும், சுதைச் சிற்பங்களாகவும் காட்சியளிக்கிறார். கருப்பசாமியின் சுதைச்சிற்பங்கள் பெரிய அளவில் ஒன்றும், சிறிய அளவில் ஒன்றுமாய் இரண்டு சிற்பங்களாக பீடத்தின் மீது நின்ற நிலையில் உள்ளன. கருப்பசாமி ஓங்கிய வீச்சரிவாளுடனும், நீண்ட முறுக்கிய மீசையுடனும், உருட்டிய விழிகளும், நெரித்த புருவமும் கொண்டவராய், தீயோருக்கு அச்சம் ஊட்டுபவராய் காணப்படுகிறார்.
932 : _ _ |a ஸ்ரீமாவடி கருப்பசாமி கோயில் கட்டிட அமைப்பு இன்றி உள்ள ஒரு வழிபாட்டுத் தலமாகும். படிகளுடன் கூடிய பீடத்தின் மீது கருப்பசாமி சிலை வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. கருப்பசாமியின் முன்னால் இரு உயரமான கற்கள் தூண் போன்று நடப்பட்டு, அவற்றில் மணிகள் கட்டப்பட்டுள்ளன. பீடத்தின் மீது கருப்பசாமி மூன்று வடிவத்தில் காணப்படுகிறார். ஒன்று கற்சிற்பமாகவும், மற்றவை இரண்டும் சுதையாலான உருவங்களும் ஆகும். கூடல் நகர் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். இப்பகுதியில் பண்டைய காலத்தில் வேளாண்மை செழித்திருந்தது. எனவே நிலத்தை, பயிர்களை, கால்நடைகளை காக்கும் தெய்வமாக இங்கு ஸ்ரீமாவடி கருப்பசாமி வழிபடப்பெற்றும், தற்போது வரை அவ்வழிபாட்டு மரபு தொடர்கிறது.
933 : _ _ |a தனியார்
934 : _ _ |a மதுரை மீனாட்சியம்மன் கோயில், கூடல் அழகர் பெருமாள் கோயில், கோச்சடை முத்தையா கோயில்
935 : _ _ |a மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கூடல்நகருக்கு பேருந்தில் செல்லலாம்.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
937 : _ _ |a கூடல்நகர்
938 : _ _ |a கூடல்நகர்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரைநகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00428
barcode : TVA_TEM_00428
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00428/TVA_TEM_00428_மதுரை_கூடல்நகர்_ஸ்ரீ-மாவடி-கருப்பசாமி-கோயில்-0002.jpg :
Primary File :

TVA_TEM_00428/TVA_TEM_00428_மதுரை_கூடல்நகர்_ஸ்ரீ-மாவடி-கருப்பசாமி-கோயில்-0001.jpg

TVA_TEM_00428/TVA_TEM_00428_மதுரை_கூடல்நகர்_ஸ்ரீ-மாவடி-கருப்பசாமி-கோயில்-0002.jpg

TVA_TEM_00428/TVA_TEM_00428_மதுரை_கூடல்நகர்_ஸ்ரீ-மாவடி-கருப்பசாமி-கோயில்-0003.jpg

TVA_TEM_00428/TVA_TEM_00428_மதுரை_கூடல்நகர்_ஸ்ரீ-மாவடி-கருப்பசாமி-கோயில்-0004.jpg