MARC காட்சி

Back
நல்லமறம் கருப்பசாமி கோயில்
245 : _ _ |a நல்லமறம் கருப்பசாமி கோயில் -
246 : _ _ |a கருப்பர் கோயில்
520 : _ _ |a பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் தம்பி நன்மாறன் பெயரால் இவ்வூர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். நல்லமாறன் என்ற பெயரே காலப்போக்கில் நல்லமாறன் என மருவி, பின்னர் நல்லமறமாக நிலைத்துவிட்டது. மதுரை மாவட்டத்தில் சங்ககால பாண்டிய மன்னனின் பெயரைத் தாங்கிய ஒரே சிற்றூராக நல்லமறம் திகழ்கிறது. நாயக்கர் காலம் வரை மிகப்பெரிய ஊராக நல்லமறம் திகழ்ந்துள்ளது. இங்குள்ள அய்யனார் கோயிலில் கி.பி. 946-966 வரையிலான காலத்தில் வாழ்ந்த சோழன் தலை கொண்ட வீரபாண்டிய மன்னனின் பெயரைக் குறிப்பிடும் கல்வெட்டு உள்ளது. மேலும், ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழைய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் கோடாரிகள் உள்ளிட்ட சான்றுகள் இவ்வூரில் கிடைத்துள்ளன. வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் அருகே நூறாண்டுகளுக்கு முந்தைய கல்லால் ஆன எண்ணெய்ச் செக்குகள் கல்வெட்டுடன் காணப்படுவது இவ்வூரின் தனிச்சிறப்பாகும். இங்குள்ள கருப்பசாமி கோயில் இவ்வூரின் காவல் தெய்வமாகும்.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், காவல் தெய்வங்கள், நல்லமறம் கருப்பசாமி கோயில், நல்லமறம், கருப்புக் கோயில், கருப்பர், கருப்பசாமி, பேரையூர் வட்டம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a கே.மதன்குமார், டாக்டர் அர்ஜூன் கருப்பையன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a பாண்டியர் காலத்தில் உருவான ஊர். இங்குள்ள கருப்பசாமி வழிபாடு தொன்மையானது.
914 : _ _ |a 9.698491
915 : _ _ |a 77.8618508
923 : _ _ |a நல்லமறம் ஊர்க் கண்மாய்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a நல்லமறம் கருப்பசாமி கோயிலில் திறந்த வெளியில் கருப்பசாமியின் நின்ற நிலை சிற்பம் காணப்படுகின்றது. சுமார் ஆறடி உயரத்திற்கு ஓங்கிய அரிவாளுடன் நிற்கும் கருப்பசாமி சிற்பம் கல்லால் ஆனது. கருப்பசாமிக்கு அருகில் பெண் தெய்வ சிற்பம் ஒன்று நின்றநிலையில் கையில் சூலாயுதத்தை ஓங்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. கருப்பசாமி சிற்பத்தை விட இப்பெண் தெய்வ சிற்பம் உயரம் குறைந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. இவ்விரு சிற்பங்களும் பீடத்தின் மேல் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளன. கருப்பசாமி வீராவேசம் உடையவராய், நெரித்த புருவத்தினராய், உருட்டிய விழிகளுடன், பெரிய மீசையுடன், இடது கையை சுக்குமாந்தடியில் ஊன்றியபடி காட்டப்பட்டுள்ளார். கருப்பசாமி அருகிலுள்ள பெண்தெய்வமும் முத்தலை சூலத்தை ஓங்கியபடி நின்றாலும் முகத்தில் அமைதி தவழ்கிறது. இக்கோயிலில் அய்யனார் பூரனை, புஷ்கலையுடன் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளார்.
932 : _ _ |a கோயில் அமைப்பு ஒன்றும் இல்லை. திறந்தவெளியில் மரத்தினடியில் கருப்பசாமி, பெண்தெய்வம், அய்யனார் ஆகிய கற்சிற்பங்களும், குதிரை மேல் அமர்ந்த கருப்பசாமியின் பெரிய அளவிலான சுதைச்சிற்பமும் திறந்த வெளியிடையே வழிபாட்டில் உள்ளன.
933 : _ _ |a ஊர் நிர்வாகம்
934 : _ _ |a நல்லமறம் கிருஷ்ணன் கோயில், நல்லமறம் அய்யனார் கோயில்
935 : _ _ |a தி.கல்லுப்பட்டியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் நல்லமறம் அமைந்துள்ளது. தி.கல்லுப்பட்டியிலிருந்து மறவப்பட்டி செல்லும் சாலையில் சென்றால் நல்லமறத்தை அடையலாம்.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
937 : _ _ |a நல்லமறம்
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a திருமங்கலம், மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00426
barcode : TVA_TEM_00426
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00426/TVA_TEM_00426_மதுரை_நல்லமறம்_நல்லமறம்-கருப்பசாமி-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_00426/TVA_TEM_00426_மதுரை_நல்லமறம்_நல்லமறம்-கருப்பசாமி-கோயில்-0001.jpg

TVA_TEM_00426/TVA_TEM_00426_மதுரை_நல்லமறம்_நல்லமறம்-கருப்பசாமி-கோயில்-0002.jpg

TVA_TEM_00426/TVA_TEM_00426_மதுரை_நல்லமறம்_நல்லமறம்-கருப்பசாமி-கோயில்-0003.jpg

TVA_TEM_00426/TVA_TEM_00426_மதுரை_நல்லமறம்_நல்லமறம்-கருப்பசாமி-கோயில்-0004.jpg

TVA_TEM_00426/TVA_TEM_00426_மதுரை_நல்லமறம்_நல்லமறம்-கருப்பசாமி-கோயில்-0005.jpg