MARC காட்சி

Back
கற்குடைய அய்யனார் கோயில்
245 : _ _ |a கற்குடைய அய்யனார் கோயில் -
246 : _ _ |a அய்யனார் கோயில்
520 : _ _ |a மிகவும் பழைமையான கற்குடைய அய்யனார் கோயிலை சீரமைத்து கோபுரத்துடன் கோயில் கட்டியவர் ஏழுஅப்பச்சி என்பவர் ஆவார். மூலவரான ஐயனார் சைவம். கோயில் வளாகத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்ற கருப்பன், சின்னகருப்பன், பெரியகருப்பன் போன்ற காவல் தெய்வங்களுக்கு கிடா பலியிடுவதும், சேவல் நேர்ந்துவிடுவதும் உண்டு. ஐயனாருக்கு ஐப்பசி கடைசி வெள்ளி திருவிழா நடக்கும். கல்யானை கரும்பு தின்ற அற்புதம் நடந்த தலம். ஐப்பசித் திருவிழாவில் புரவி எடுப்பு சிறப்பாக நடக்கும்.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல் தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், அய்யனார் வழிபாடு, ஐயனார், அய்யனார், அய்யன், அய்யனார் கோயில், கற்குடைய அய்யனார் கோயில், கற்குடைய ஐயனார், உப்பாறு, மாணிக்கம்பட்டி, மேலூர் வட்டம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a செல்வராஜா, அஜித்குமார், ஷியாமி சிவா, மேடி மாதவ், மதுப்ரகாஷ், மணிகண்டன் அ., நாகராஜன், இராஜசேகரன் சேவுகன், இரவிச்சந்திரன், பி.கே.சந்தானம், ஸ்ரீராம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 097874 94470
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a கல்யானை கரும்பு தின்ற அற்புதம் நடந்த தலம். புரவி எடுப்பு திருவிழா புகழ்பெற்றது.
914 : _ _ |a 9.9635786
915 : _ _ |a 78.3300086
923 : _ _ |a காஞ்சரங்கோட்டை கண்மாய்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a நுழைவாயிலில் சுதைச்சிற்பங்களாக அய்யன் மற்றும் பரிவாரத் தெய்வங்கள் காட்டப்பட்டுள்ளனர். கோயில் வளாகத்தில் பெரிய அளவில் யானைச் சிற்பம் உள்ளது. தொடர்ந்து காவல் பூதங்கள் இரண்டு கையில் வாளை ஓங்கிய நிலையில் நிற்கின்றன. கருவறையில் அய்யன் வீற்றிருக்கிறார். கோயில் திருச்சுற்றில் பரிவாரத் தெய்வங்களுக்கான சிறு சிறு சந்நிதிகள் அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளன. நேர்த்திக்கடனாக மக்கள் செலுத்தும் புரவிகள் வரிசையாக நிற்கின்றன. கருவறை விமானத்தில் அய்யன் மற்றும் கருப்பசாமியின் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையின் வலதுபுறத்தில் சேமக்குதிரை முன்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு பாய்கிறது. தூக்கிய முன்னங்கால்களை பெருவீரர்கள் இருவர் தங்கள் தலையில் தாங்கியுள்ளனர். இச்சிற்பங்கள் யாவும் சுதைச்சிற்பங்களாக வடிக்கப்பட்டு வண்ணந்தீட்டப்பட்டுள்ளன.
930 : _ _ |a கல் யானை கரும்பு தின்ற கதையை. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் நிகழ்த்திய திருவிளையாடலைப் போலவே, மதுரை மேலூருக்கு அருகில் உள்ள கொட்டக்குடி கிராமத்தில் அமைந்திருக்கும் கற்குடைய ஐயனார் கோயிலிலும் கல் யானை கரும்பு தின்ற அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. பச்சைப்பசேல் என்று பசுமை சூழ்ந்து காணப்பட்ட வயல்வெளிகளுக்கு இடையில் அமைந்திருக்கிறது கற்குடை ஐயனார் கோயில். கொட்டக்குடியைச் சேர்ந்த ஒருவர் இக்கோயிலின் வழியாக பால் கொண்டு போனார். இவ்விடத்தில் வந்ததும் கால் இடறி பால் கொட்டிவிட்டது. நாள்தோறும் இவ்வாறே நடந்து வந்தது. நடந்ததை ஊர் மக்களிடம் தெரிவித்தார். ஊர் மக்கள் வந்த பார்த்தபொழுது இவ்விடத்தில் அய்யனார் காவல் தெய்வமாக எழுந்தருளியிருந்தாகவும், கூடவே அய்யன் எதிரில் கல்யானையும் இருந்தது என்றும் ஊர்மக்கள் தலபுராணம் கூறுகிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒருநாள் ஆங்கிலேயர் ஒருவர் கல்யானை கரும்பு தின்னுமா என்று அவ்வூரைச் சேர்ந்த கக்கன் என்பவரிடம் கேலியாகக் கேட்டுள்ளார். அவரது கேலியைப் பொறுக்காத கக்கன் 'அடே, இந்த யானை 7 வண்டி கரும்பைச் சாப்பிடும்'ன்னு சொல்லியிருக்கார். யானையை சோதிச்சுப் பார்க்க நெனைச்ச அந்த வெள்ளைக்காரர், மறுநாளே 7 வண்டி நெறைய கரும்புகளைக்கொண்டு வந்து எறக்கிவிட்டார். 'இந்தக் கரும்பு மொத்தத்தையும் யானை தின்னுட்டால், நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கறேன். இல்லைன்னா நான் சொல்றதை நீங்கக் கேட்கணும்' என்று சவால் விட்டுவிட்டுப் போனார். அடுத்த நாள் அங்கே வந்து பார்த்த வெள்ளைக்காரர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கல்யானை 7 வண்டி கரும்பைத் தின்றது மட்டுமில்லாமல், சக்கையை தன்னைச் சுற்றிப் பரப்பி வைத்துவிட்டு சாணமும் போட்டிருந்தது. வெள்ளைக்காரர் பயந்துபோய் அங்கிருந்து ஓடினார். அவர் ஊர் எல்லையைக் கடப்பதற்குள் ஒரு யானை வந்து மிதித்துக் கொன்று விட்டது. அன்றிலிருந்து கல் யானைக்குக் கல்லாணைன்னு பேர் வைத்து மக்கள் வழிபட ஆரம்பித்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த ஊரில் பிறக்கின்ற பிள்ளைகளுக்கு கல்லாணை, மதயானை, பொன்னையன், ஐயனார் என்று பெயர் வைத்தனர் என்கின்றனர் இவ்வூர் மக்கள்.
932 : _ _ |a கொட்டக்குடி அய்யனார கோயில் நுழைவாயில் தோரண முகப்பு கோபுரத்துடன் விளங்குகிறது. இதனைத் தாண்டி உள்ளே சென்றால் அய்யனின் வாகனமான யானை சிற்பம் காணப்படுகிறது. தொடர்ந்து இரு பூதங்கள் கோயில் வாயிலின் இருபுறமும் ஓங்கிய வாளுடன் நிற்கின்றனர். தொடர்ந்து உள்ளே சென்றால் மண்டபத்துடன் கூடிய கருவறையும், அதன்மேல் விமானமும் காட்சியளிக்கிறது. கோயிலின் கருவறையின் வலதுபுறம் சேமக்குதிரை பாய்ந்த நிலையில் உள்ளது. நேர்த்திக்கடன் புரவிகள் வரிசையாக நிற்கின்றன. காவல் தெய்வங்களான கருப்பசாமிக்கு சிறு சந்நிதி அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளத.
933 : _ _ |a தனியார்
934 : _ _ |a திருவாதவூர் சிவன் கோயில், ஸ்ரீமுத்துப்பிடாரி அம்மன் கோயில், மாணிக்கம்பட்டி காளியம்மன் கோயில்
935 : _ _ |a மதுரையிலிருந்து மேலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றால் சுமார் 25 கி.மீ. தொலைவில் உப்பாற்றின் கரையில் இவ்வூர் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
937 : _ _ |a கொட்டக்குடி
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மேலூர் நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00409
barcode : TVA_TEM_00409
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0001.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0002.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0003.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0004.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0005.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0006.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0007.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0008.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0009.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0010.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0011.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0012.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0013.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0014.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0015.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0016.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0017.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0018.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0019.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0020.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0021.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0022.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0023.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0024.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0025.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0026.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0027.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0028.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0029.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0030.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0031.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0032.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0033.jpg

TVA_TEM_00409/TVA_TEM_00409_மதுரை_கொட்டக்குடி_கற்குடைய-அய்யனார்-கோயில்-0034.jpg