| 245 |
: |
_ _ |a ஜார்ஜ் கோட்டை புனித மேரி தேவாலயம் - |
| 246 |
: |
_ _ |a புனித மேரி தேவாலயம் |
| 520 |
: |
_ _ |a புனித மேரி கிறித்தவ ஆலயம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தென்பகுதியில் காணப்படும் மிகத் தொன்மையான கிறித்தவ ஆலயம் ஆகும். ஆங்கிலத் திருச்சபையினருக்குரிய ஆலயங்களில் இந்தியாவில் முதன்முதலில் எழுப்பப்பட்ட ஆலயமாகும். கி. பி. 1680 இல் கிழக்கிந்திய கம்பெனியாரால் இவ்வாலயம் எழுப்பப்பட்டது. இவ்வாலயத்தில் இறந்த பல ஆங்கிலேயர்களின் நினைவாகப் பல பதிப்புக் கற்பலகைகள் உள்ளன. புனித மேரி ஆலயத்தினுள் இங்கிலாந்து நாட்டுச் சிற்பிகளின் கைவண்ணத்தைக் காட்டும் பல சலவைக்கல் சிற்பங்கள் உள்ளன. இவை அரிய கலைப்படைப்புகளாகும். இவ்வாலயத்தில் தான் இராபர்ட் கிளைவ் மற்றும் ஆளுநர் எலிஹுஹேல் என்பவர்களின் திருமணம் நடைபெற்றது. |
| 653 |
: |
_ _ |a கிறித்துவம், கிறிஸ்துவம், தேவாலயம், சர்ச், தமிழ்நாடு, சென்னை, கிறித்துவ திருத்தலம், புனித ஜார்ஜ் கோட்டை, புனித மேரி தேவாலயம், புனித மேரி சர்ச், ஜார்ஜ் கோட்டை |
| 700 |
: |
_ _ |a திரு.வேலுதரன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி. பி. 1680 |
| 909 |
: |
_ _ |a 8 |
| 910 |
: |
_ _ |a 300 ஆண்டுகள் பழமையானது. |
| 914 |
: |
_ _ |a 13.079192 |
| 915 |
: |
_ _ |a 80.286583 |
| 922 |
: |
_ _ |a கிறிஸ்துமஸ் மரம் |
| 924 |
: |
_ _ |a வேதாகமம் |
| 926 |
: |
_ _ |a கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு |
| 928 |
: |
_ _ |a உள்ளே அமைந்துள்ள ஓவியங்கள் பல. அவற்றில் பெயர் தெரியாத ஓவியரால் உருவாக்கப்பட்ட ‘கடைசி இரவு உணவு’ ஓவியம் நெஞ்சை அள்ளக்கூடியது. |
| 930 |
: |
_ _ |a சென்னை செயின் ஜார்ஜ் கோட்டையிலுள்ள செயின்ட் மேரி தேவாலயம் தன் பின்னணியில் மிகப்பெரிய வரலாற்றைக் கொண்டிருக்கிறது. வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் இது மிகவும் பிடித்தமான இடமாகவும் அமைந்துள்ளது. தனக்கெனத் தனிச் சிறப்பிடத்தைப் பெற்றுள்ள இந்த ஆலயம் ‘வெஸ்ட்மினிஸ்டர் அப்பே’ தேவாலயத்திற்கு இணையாகச் சொல்லப்படுகிறது. கிழக்குநாடுகளின் ‘வெஸ்ட் மினிஸ்டர் அப்பே’ எனவும் குறிப்பிடப்படுகிறது. சென்னையிலுள்ள மிகப்பழமையான கட்டிடங்களில் ஒன்று இது. ஆசியாவில் உருவான முதல் ஆங்கிலிகன் தேவாலயம் இதுதான். செயின்ட் மேரியின் பெயரில் அமைந்துள்ள இந்த ஆலயப்பணி கன்னிமரியாளிடம் தேவதூதர் வந்து ஏசுவின் பிறப்பை உணர்த்திய புனித நாளில் தொடங்கப்பட்டது. இந்த ஆலயத்தை எட்வர்ட் பவுலே என்ற கட்டிடக்கலை நிபுணர் வடிவமைத்தார். இதனை வில்லியம் டிக்சன் என்பவர் கட்டினார். |
| 932 |
: |
_ _ |a சென்னை செயின் ஜார்ஜ் கோட்டையிலுள்ள செயின்ட் மேரி தேவாலயம் குண்டுகளால் சிதைக்கப்பட முடியாத கட்டிட அமைப்பைக்கொண்டது. இதன் மேற்பூச்சு பளபளப்பாக அமைந்துள்ளது. கட்டப்பட்ட மூல வடிவத்துடன் ஒட்டிப் பிற்காலத்தில் கட்டிடம் வளர்க்கப்பட்டது. நடுவிலுள்ள கோபுரம், ஆடைகள் வைப்பதற்கான அறை, புனித அறை, பிறபக்கக்கோபுரங்கள், கூர்மையான கோபுரம் ஆகியன கட்டப்பட்டன. ஆலயத்தின் உட்புறம் மரவேலைப்பாடுகளையும் கண்ணாடி வேலைப்பாடுகளையும் கொண்டுள்ளது. |
| 933 |
: |
_ _ |a சென்னை உயர் மறை மாவட்ட திருச்சபை |
| 934 |
: |
_ _ |a சாந்தோம் தேவாலயம், சாந்தோர் புனித மேரி தேவாலயம், லஸ் சர்ச் |
| 935 |
: |
_ _ |a சென்னை எழும்பூர் இரயில் நிலையிலிருந்து புறநகர் இரயில் மூலம் சென்னைக் கோட்டையை அடையலாம். |
| 936 |
: |
_ _ |a காலை 9.00 மணி முதல் பிற்பகல் 5:30 மணி வரை |
| 937 |
: |
_ _ |a ஜார்ஜ் கோட்டை |
| 938 |
: |
_ _ |a ஜார்ஜ் கோட்டை |
| 939 |
: |
_ _ |a சென்னை மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a சென்னை மாநகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000355 |
| barcode |
: |
TVA_TEM_000355 |
| book category |
: |
கிறித்துவம் |
| cover images TVA_TEM_000355/TVA_TEM_000355_சென்னை_ஜார்ஜ்-கோட்டை_புனித-மேரி-தேவாலயம்-0006.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000355/TVA_TEM_000355_சென்னை_ஜார்ஜ்-கோட்டை_புனித-மேரி-தேவாலயம்-0001.jpg
TVA_TEM_000355/TVA_TEM_000355_சென்னை_ஜார்ஜ்-கோட்டை_புனித-மேரி-தேவாலயம்-0002.jpg
TVA_TEM_000355/TVA_TEM_000355_சென்னை_ஜார்ஜ்-கோட்டை_புனித-மேரி-தேவாலயம்-0003.jpg
TVA_TEM_000355/TVA_TEM_000355_சென்னை_ஜார்ஜ்-கோட்டை_புனித-மேரி-தேவாலயம்-0004.jpg
TVA_TEM_000355/TVA_TEM_000355_சென்னை_ஜார்ஜ்-கோட்டை_புனித-மேரி-தேவாலயம்-0005.jpg
TVA_TEM_000355/TVA_TEM_000355_சென்னை_ஜார்ஜ்-கோட்டை_புனித-மேரி-தேவாலயம்-0006.jpg
TVA_TEM_000355/TVA_TEM_000355_சென்னை_ஜார்ஜ்-கோட்டை_புனித-மேரி-தேவாலயம்-0007.jpg
TVA_TEM_000355/TVA_TEM_000355_சென்னை_ஜார்ஜ்-கோட்டை_புனித-மேரி-தேவாலயம்-0008.jpg
TVA_TEM_000355/TVA_TEM_000355_சென்னை_ஜார்ஜ்-கோட்டை_புனித-மேரி-தேவாலயம்-0009.jpg
TVA_TEM_000355/TVA_TEM_000355_சென்னை_ஜார்ஜ்-கோட்டை_புனித-மேரி-தேவாலயம்-0010.jpg
TVA_TEM_000355/TVA_TEM_000355_சென்னை_ஜார்ஜ்-கோட்டை_புனித-மேரி-தேவாலயம்-0011.jpg
TVA_TEM_000355/TVA_TEM_000355_சென்னை_ஜார்ஜ்-கோட்டை_புனித-மேரி-தேவாலயம்-0012.jpg
|