| 245 |
: |
_ _ |a திருக்கருகாவூர் வெள்விடைநாதர்கோயில் - |
| 246 |
: |
_ _ |a மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி |
| 520 |
: |
_ _ |a திருக்கருக்காவூர் - திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலம் சிவன் கோவிலாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் காவிரி வெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 18-ஆவது சிவத்தலமாகும். |
| 653 |
: |
_ _ |a கோயில், தமிழ்நாட்டு சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், காவிரி வடகரைத் தலங்கள், சிவன் கோயில், திருக்கருகாவூர், வெள்விடைநாதர் கோயில், சீர்காழி வட்டாரக் கோயில்கள், நாகப்பட்டினம் மாவட்டக் கோயில்கள் |
| 700 |
: |
_ _ |a திரு.வேலுதரன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 902 |
: |
_ _ |a 04374 - 273502 , 273423 |
| 905 |
: |
_ _ |a கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள் |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற தலம். |
| 914 |
: |
_ _ |a 11.244465 |
| 915 |
: |
_ _ |a 79.780896 |
| 922 |
: |
_ _ |a முல்லை |
| 923 |
: |
_ _ |a பாற்குளம், க்ஷீரகுண்டம், சத்திய கூபம், பிரமதீர்த்தம் |
| 925 |
: |
_ _ |a நான்கு கால பூசை |
| 926 |
: |
_ _ |a மகா சிவராத்திரி, மாசி மகம், மார்கழி திருவாதிரை. |
| 927 |
: |
_ _ |a இக்கோயிலில் சோழர்கள் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன. முதலாம் இராசராசன் கல்வெட்டில் "நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் " என்று தலம் குறிக்கப்படுகின்றது. |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கருவறை விமானத்தின் தேவகோட்டங்களில் மேற்கில் உமையொருபாகரும், தெற்கில் தென்முகக்கடவுளரும் சோழர்கால கலைப்பாணியில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் ஆகும் இக்கோயிலில் இரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த லிங்கமும் உள்ளது. மூலவர் சுயம்பு இலிங்கமாக புற்று மண்ணாலாகியது. அம்மன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். கற்பக விநாயகர் சிற்பம் இங்கு சிறப்புப் பெற்றது. இங்குள்ள நந்தி - உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர். |
| 930 |
: |
_ _ |a திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடி)யை தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கரு, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது. இத்தலத்தைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மூன்று அடி நடந்தால் முதலாவது அடியால் பாவ வினைகள் முழுதும் அகலும் என்றும், இரண்டாவது அடியால், அமரர் உலகையும் பெறலாம் என்றும், மூன்றாவது அடியால் சிவசாயுஜ்ஜியம் பெறலாம் என்றும் தலபுராணம் குறிப்பிடுகிறது. இத்தலத்தை நினைத்தாலும், இதன் பெயரைச்சொன்னாலும் , அதனைக் கண்டாலும், அங்கு வசித்தாலும், இதன் வழியாகப் பிற ஊர்களுக்குச் சென்றாலும் பாவங்கள் நீங்கப்பெற்று, போகங்கள் யாவும் பெற்று, நிறைவாக இறைவன் கழலடியை அடைவர் என்கிறது தலபுராணம். வடக்கு பிராகாரத்தில் ஸ்தல விருக்ஷமான முல்லை உள்ளது. சபா மண்டபம் குதிரை பூட்டிய ரத வடிவில் உள்ளது. இங்கு நித்துருவர்,கார்க்கியர், சங்குகர்ணன் ஆகியோர் பூஜித்த சிவலிங்கங்கள் உள்ளன. நிருத்துருவமுனிவரின் பத்தினி வேதிகை, கர்பகாலத்தில் நேர்ந்த அயர்ச்சியால், அங்கு வந்த ஊர்த்துவபாத முனிவரை உபசரிக்க இயலாமல் போகவே, கோபம் கொண்ட முனிவர், அவளது கர்ப்பம் சிதையுமாறு சபித்தார். அதனால் துயரமுற்ற தம்பதியர்,இறைவனையும் இறைவியையும் சரணடைந்து துதிக்கவே, வேதிகையின் கரு சிதையாமல் அம்பாள் காத்து ரக்ஷித்தபடியால் கர்ப்ப ரக்ஷாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். அகந்தையால் படைப்புத் தொழிலை இழந்த பிரமன் இங்கு வந்து,தன் பெயரால் தீர்த்தம் அமைத்து,இறைவனை வழிபட்டு மீண்டும் படைப்புத் தொழிலைக் கைவரப்பெற்றான். கேரள தேசத்தைச் சேர்ந்த சுவர்நாகரன் என்பவன் சாபத்தால் பைசாச வடிவம் கொண்டு பல பிறவிகள் துன்புற்ற பின்னர், கார்க்கிய முனிவரின் அறிவுரைப்படி இத்தலத்திற்கு வந்து,பிரம தீர்த்தத்தில் நீராடி,இறைவனை வழிபட்டதால் பழைய வடிவை மீண்டும் பெற்றான். கோஹத்தி தோஷம் நீங்க வேண்டி கௌதம முனிவர் இத்தல இறைவனை வழிபட்டு,நற்கதி பெற்றார். சாபத்தினால் புலி வடிவம் கொண்ட குஜத்வஜன் என்ற மன்னன் கார்த்திகை ஞாயிறுகளில் இறைவனை வழிபட்டுப் பழைய வடிவம் பெற்று, வைகாசியில் பிரம்மோற்சவ விழா நடத்தினான். குரு சாபத்தால் பேய் உருவம் பெற்ற சங்கு கர்ணன் என்பவன் முல்லைவன நாதரை மார்கழித் திருவாதிரையன்று வழிபட்டுப் பழைய உருவம் பெற்றான். தக்ஷ சாபம் நீங்க வேண்டிச் சந்திரன் வழிபட்டான். |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a சீர்காழி பிரமாபுரம், திருமுல்லைவாசல் |
| 935 |
: |
_ _ |a கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ள தலம். இத்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன. |
| 936 |
: |
_ _ |a காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை |
| 937 |
: |
_ _ |a திருக்கருகாவூர் |
| 938 |
: |
_ _ |a சீர்காழி |
| 939 |
: |
_ _ |a திருச்சி |
| 940 |
: |
_ _ |a சீர்காழி வட்டார விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000333 |
| barcode |
: |
TVA_TEM_000333 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000333/TVA_TEM_000333_திருக்கருகாவூர்_வெள்விடைநாதர்-கோயில்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000333/TVA_TEM_000333_திருக்கருகாவூர்_வெள்விடைநாதர்-கோயில்-0001.jpg
TVA_TEM_000333/TVA_TEM_000333_திருக்கருகாவூர்_வெள்விடைநாதர்-கோயில்-0002.jpg
TVA_TEM_000333/TVA_TEM_000333_திருக்கருகாவூர்_வெள்விடைநாதர்-கோயில்-0003.jpg
TVA_TEM_000333/TVA_TEM_000333_திருக்கருகாவூர்_வெள்விடைநாதர்-கோயில்-0004.jpg
TVA_TEM_000333/TVA_TEM_000333_திருக்கருகாவூர்_வெள்விடைநாதர்-கோயில்-0005.jpg
TVA_TEM_000333/TVA_TEM_000333_திருக்கருகாவூர்_வெள்விடைநாதர்-கோயில்-0006.jpg
|