MARC காட்சி

Back
பெருமுக்கல் முக்தியாலீஸ்வரர் கோயில்
245 : _ _ |a பெருமுக்கல் முக்தியாலீஸ்வரர் கோயில் -
246 : _ _ |a திருவான்மிகை ஈஸ்வரமுடையார், பெருமுக்கல் உடையார், முக்யாசலேசுவரர்
520 : _ _ |a இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் உத்தமச் சோழன் காலம் முதல் தொடர்ச்சியான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. விக்கிரமச்சோழன் காலத்தில் கற்றளியாக்கப்பட்டுள்ளது. இவ்வூரைச் சுற்றி மூன்று பெரிய குன்றுகள் இருப்பதால் பெருமுக்கல் (மூன்று பெரிய கற்கள்) என்ற பெயர் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இக்கோயில் அமைந்துள்ள மலையின் மேற்புறச் சரிவில் இயற்கையான குகை போன்றதோர் பகுதி உள்ளது. இதனை ஊரார் சீதாப்பிராட்டி குகை என்று அழைப்பர். இங்கு பாறையில் கீறல் பொறிப்புடன் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ளது. கீறல் வளைவுகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகும். இங்குள்ள கல்வெட்டு பெருந்தச்சன் என்பவனால் எழுதப்பட்டுள்ளது. இவை கி.பி.6-7 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ளது எனலாம்.
653 : _ _ |a பெருமுக்கல், முக்தியாலீஸ்வரர் கோயில், சீதாகுகை, திருவான்மிகை ஈஸ்வரமுடையார் கோயில், பெருமுக்கல் உடையார் கோயில், முக்யாசலேசுவரர் கோயில், மரக்காணம் கோயில், திண்டிவனம் கோயில்கள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மரபுச் சின்னங்கள்,
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
905 : _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு / விக்கிரம சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 800ஆண்டுகள் பழமையானது. பிற்கால சோழர் கால கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது.
914 : _ _ |a 12.20836046
915 : _ _ |a 79.72952632
916 : _ _ |a முக்தியாலீஸ்வரர்
927 : _ _ |a கோயிற்சுவர்களிலும், பாறைகளிலும் 60-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவ்வூர்க் கல்வெட்டுகள் பல சுவையான செய்திகளைத் தருகின்றன. கோயில் நிலங்கள் ஏலம் கூறி விற்கப்பட்டன. 12 அடி கோலால் நிலங்கள் அளக்கப்பட்டன.கோயிலுக்கென தேவரடியார்கள் நியமிக்கப்பட்டனர். அனுமன் கோயிலில் உள்ள பலகைக் கல்லில் உத்தமசோழன் காலத்தில் அம்பலவன் கண்டாரதித்தன் என்பவன் ஒரு கோயில் கட்டிய விபரம் உள்ளது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a தென்முகக் கடவுள், தூண் புடைப்புச் சிற்பங்கள்
932 : _ _ |a பெருமுக்கல் ஊரின் மலை மேல் உள்ள இறைவனுக்கு எடுப்பிக்கப்பட்ட கோயில் திருவான்மிகை ஈஸ்வரமுடையார் கோயில் எனவும், பெருமுக்கல் உடையார் கோயில் எனவும், முக்யாசலேசுவரர் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இராஜகோபுரமும், திருச்சுற்றும், மண்டபங்களும், கருவறையும் கொண்ட இக்கோயில் தொன்மை வாய்ந்ததாகும். முதல் குலோத்துங்கன் காலம் வரை செங்கல் கோயிலாக இருந்த இந்த சிவன் கோயில் விக்கிரமச் சோழன் காலத்தில் கற்றளியாக்கப்பட்டுள்ளது.
933 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a பெருமுக்கல் சீதாகுகை, உலகாபுரம் சிவன் கோயில், உலகாபுரம் விஷ்ணு கோயில், கண்டராதித்தப் பேரேரி, காலகண்ட பேரேரி, ஷகாளி கோயில், அய்யனார் கோயில்
935 : _ _ |a சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 11 கி.மீ. தொலைவில் பெருமுக்கல் உள்ளது.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a பெருமுக்கல்
938 : _ _ |a திண்டிவனம், விழுப்புரம்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a திண்டிவனம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000030
barcode : TVA_TEM_000030
book category : சைவம்
cover images TVA_TEM_000030/TVA_TEM_000030_முக்தியாலீஸ்வரர்-கோயில்_கோயில்-தோற்றம்-0002.jpg :
Primary File :

TVA_TEM_000030/TVA_TEM_000030_முக்தியாலீஸ்வரர்-கோயில்_கோயில்-தோற்றம்-0001.jpg

TVA_TEM_000030/TVA_TEM_000030_முக்தியாலீஸ்வரர்-கோயில்_கோயில்-தோற்றம்-0002.jpg

TVA_TEM_000030/TVA_TEM_000030_முக்தியாலீஸ்வரர்-கோயில்_முகப்புத்தோற்றம்-0003.jpg

TVA_TEM_000030/TVA_TEM_000030_முக்தியாலீஸ்வரர்-கோயில்_கருவறை-முகப்பு-0004.jpg

TVA_TEM_000030/TVA_TEM_000030_முக்தியாலீஸ்வரர்-கோயில்_முகமண்டபம்-0005.jpg

TVA_TEM_000030/TVA_TEM_000030_முக்தியாலீஸ்வரர்-கோயில்_தட்சிணாமூர்த்தி-0006.jpg

TVA_TEM_000030/TVA_TEM_000030_முக்தியாலீஸ்வரர்-கோயில்_தாங்குதளம்-0007.jpg

TVA_TEM_000030/TVA_TEM_000030_முக்தியாலீஸ்வரர்-கோயில்_திருச்சுற்று-0008.jpg