MARC காட்சி

Back
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில்
245 : _ _ |a லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் -
246 : _ _ |a திருத்தவத்துறை, லால்குடி
520 : _ _ |a திருச்சி, லால்குடியில் அமைந்துள்ள இத்தலம் தேவார வைப்புத்தலமாகும். இக்கோயில் சப்தரிஷிகளோடு தொடர்புடையதாக தலபுராணம் கூறுகிறது. சோழர்காலத்தின் கலைப்பாணியைக் கொண்டு கற்றளியாக விளங்கும் இக்கோயில் ஹொய்சாள மன்னர்களின் கலைப்பாணியையும் மண்டபம் மற்றும் தூண் வேலைப்பாடுகளில் கொண்டுள்ளது.
653 : _ _ |a கோயில், சைவம், சிவன், சோழர், சோழர் கலைப்பாணி, கலைக் கோயில், தொல்லியல் துறை மரபுச் சின்னம், சோழர் காலக் கோயில், லால்குடி, இலால்குடி, திருச்சி, திருச்சிராப்பள்ளி, சப்தரிஷீஸ்வரர் கோயில், மகாசம்பத் கௌரி
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a திரு. பெரியசாமி ஆறுமுகம்
902 : _ _ |a 0431-2541329
905 : _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், முற்காலச் சோழர், விசயநகரர்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவார வைப்புத்தலம்.
914 : _ _ |a 10.87031185
915 : _ _ |a 78.82012367
916 : _ _ |a சப்தபுரிஷீஸ்வரர்
917 : _ _ |a தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடனர்
918 : _ _ |a மகாசம்பத் கௌரி, பெரிய நாயகி, மகாலட்சுமி, பைரவி (காளி).
924 : _ _ |a சிவாகமம்
925 : _ _ |a ஆறு கால பூசை
926 : _ _ |a சித்ராபவுர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, கந்தசஷ்டி, சோமவாரம், திருவாதிரை, தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம்
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் சிவலிங்க வடிவாக எழுந்தருளியுள்ளார் சப்தரிஷீஸ்வரர். தமிழகத்தில் இக்கோயிலிலும், காஞ்சி ஏகாம்பர நாதர் கோயிலிலும், வாலீஸ்வரர் கோயிலிலும் கட்வங்கம் ஆயுதத்துடன் சிவ வடிவங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலில் விநாயகர், முருகன் உடன் வள்ளி தெய்வானை, ஐயப்பன், தட்சணாமூர்த்தி, கால பைரவர், விஷ்ணு துர்க்கை, சரஸ்வதி, பிரம்மன், 63 நாயன்மார்கள், ஆஞ்சநேயர் , நவகிரகங்கள் ஆகியோர் உள்ளனர்.
930 : _ _ |a ஒரு காலத்தில் தாரகன் என்னும் அசுரனைக் கொன்று தேவர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் திருவருளால் முருகக் கடவுள் அவதாரஞ்செய்து குழந்தையாகத் தோன்றினார். சப்தரிஷிகள் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கௌதமர், ஆங்கீரசர், மரிசி ஆகியோர் அந்த ஏழு முனிவர்கள் ஆவர்கள். சப்த ரிஷிகளின் ஆசிரமம் அருகே உள்ள தாமரைப் பொய்கை அருகே, தனித்து விடப்பட்ட குழந்தை ஒன்று அழுது கொண்டு இருந்தது. அந்த குழைந்தைக்கு பாலுட்டுமாறு தனது பத்தினியான அருந்ததியிடம் வசிஷ்டர் கூறினார். பூஜைக்கு மலர் பறிக்க சென்று கொண்டு இருந்ததால், அருந்ததி குழந்தைக்கு பால் கொடுக்கவில்லை. கோபம் கொண்ட வசிஷ்டர் தனது மனைவியை தனிமைப்படுத்தி தண்டித்தார். மற்ற ரிஷி பத்தினிகள் அனைவரும் அருந்ததியை சார்ந்தும், ரிஷிகள் வசிஷ்டரை சார்ந்தும் வாதிட்டார்கள். ரிஷி பத்தினிகளுள் ஒருவரான அருந்ததி குழந்தைக்குப் பால் கொடுக்க மறுக்கவே கார்த்திகை பெண்கள் அறுவரும் குழந்தைக்குப் பால் கொடுத்தனர். இச்செய்தியை ஏழு முனிவர்கள் கேட்டு மனைவிமார்களைச் சபித்து விட்டார்கள். குழந்தை ஆறுமுகனாக மாறி முனிவர்களைச் சபித்தார். இதனால் முனிவர்கள் தன் சாபம் நீங்கும் பொருட்டுத் இத்தலத்துக்கு வந்து தவம் செய்தனர். ஏழு ரிஷிகள் கடுந்தவம் புரிந்ததால், அவர்களுக்கு அருள் செய்ய தன் சிவப்பேரொளியில் அவர்களை ஐக்கியப்படுத்திக் கொண்டார் ஈசன். தன் லிங்கத் திருமேனியில் ஏழு ரிஷிகளும் ஐக்கியமானதால், இத்தலத்திலுள்ள சிவலிங்கத் திருமேனியில் ஏழு புள்ளிகள் தோன்றின. மேலும் ஏழு ரிஷிகள் தவமிருந்த இடமே திருத்தவத்துறை ஆயிற்று. ஏழு முனிவருக்கும் அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், இத்தலத்துக்கு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூர்பக்கம் படையெடுத்து வந்த முகமதிய மாலிக் காபூர் மன்னன், இத்திருக்கோயிலின் சிவப்பு கோபுரத்தை கண்டு உருதுமொழியில் லால்குடி (லால் – சிவப்பு, குடி – கோபுரம்) என்று அழைக்க, இவ்வூருக்கு அதுவே பெயராகி அழைக்கபடுகிறது. இத்தலத்துள் உறையும் அம்மனுக்கு பெருந்திருப்பிராட்டியார் என்னும் பெயர் வழங்கப்படுகிறது. சப்த ரிஷிகளான வசிட்டர், அத்ரி, பிருகு, புலத்தியர், கௌதமர், ஆங்கீரசர், மரீசி முதலியோர் வழிபட்டுள்ளனர்.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a மலைக்கோட்டை குடைவரைக் கோயில்கள், மாற்றுரைவரதீஸ்வரர் கோயில், ஆதிமூலேசுவரர் கோயில்
935 : _ _ |a திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 18கிமீ தொலைவில் கோவில் (லால்குடி) உள்ளது.பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1கிமீ தொலைவில் உள்ளது.திருச்சி -நாமக்கல்-சேலம் நெடுஞ்சாலையில் இந்த ஊர் உள்ளது .
936 : _ _ |a காலை 5.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு  8.30 மணி வரை
937 : _ _ |a லால்குடி
938 : _ _ |a லால்குடி
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a திருச்சி நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000246
barcode : TVA_TEM_000246
book category : சைவம்
cover images TVA_TEM_000246/TVA_TEM_000246_லால்குடி_சப்தரிஷீசுவரர்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000246/TVA_TEM_000246_லால்குடி_சப்தரிஷீசுவரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000246/TVA_TEM_000246_லால்குடி_சப்தரிஷீசுவரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000246/TVA_TEM_000246_லால்குடி_சப்தரிஷீசுவரர்-கோயில்-0003.jpg