| 245 |
: |
_ _ |a விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில் - |
| 246 |
: |
_ _ |a திருவிளமர், திருவடி க்ஷேத்திரம், சிவபாத ஸ்தலம் |
| 520 |
: |
_ _ |a திருவிளமர் என்ற இவ்வூர் தற்போது விளமல் என்றழைக்கப்படுகிறது. விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் 90ஆவது தேவாரத்தலமாகும். திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. பதஞ்சலி முனிவரோடு தொடர்புடைய திருத்தலமாக இக்கோயில் தலபுராணத்தின் வழி அறியப்படுகிறது. |
| 653 |
: |
_ _ |a கோயில், சைவம், சிவன், சோழர், சோழர் கலைப்பாணி, கலைக் கோயில், தொல்லியல் துறை மரபுச் சின்னம், சோழர் காலக் கோயில், தேவாரப் பாடல் பெற்ற தலம், விளமல், திருவாரூர், திருவிளமர், பதஞ்சலி மனோகரர் கோயில், திருஞானசம்பந்தர் |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a திரு.கடம்பூர் விஜய் |
| 902 |
: |
_ _ |a 9489479896, 9942881778 |
| 905 |
: |
_ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், முற்காலச் சோழர், விசயநகரர், சம்புவராயர் |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். சோழர் கால கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. |
| 914 |
: |
_ _ |a 10.772597 |
| 915 |
: |
_ _ |a 79.612325 |
| 916 |
: |
_ _ |a பதஞ்சலி மனோகரர் |
| 917 |
: |
_ _ |a விளமர், விமலன் |
| 918 |
: |
_ _ |a யாழினும் மென்மொழியம்மை, மதுரபாஷினி |
| 922 |
: |
_ _ |a வில்வம், கிளுவை |
| 923 |
: |
_ _ |a அக்னி தீர்த்தம் |
| 924 |
: |
_ _ |a சிவாகமம் |
| 925 |
: |
_ _ |a நான்கு கால பூசை |
| 926 |
: |
_ _ |a மார்கழி திருவாதிரை, ஆடிப்பூரம், நவராத்திரி, புரட்டாசி அமாவாசை, ஐப்பசி அன்னாபிஷேகம் |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கோபுர வாயிலின் இருபுறமும் விநாயகரும் முருகனும் வீற்றிருக்கின்றனர். உள்ளே நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். கோயில் முன் மண்டபத்தில் பதஞ்சலி முனிவரின் திருவுருவம் உள்ளது. வியாக்ரபாத முனிவர், சூரியன் ஆகியோர் சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன. இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை தேவகோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு மற்றும் அர்த்தமண்டப கோட்டங்களில் கணபதி, துர்க்கை ஆகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
| 930 |
: |
_ _ |a சிவபெருமானின் ஆடலை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே இருப்பவர் பதஞ்சலி முனிவர். அவர் தினமும் நடராஜப் பெருமானின் நடனத்தைக் கண்டபின்தான் உணவு உட்கொள்வார். அதுமட்டுமன்றி இறைவனுக்கு தினமும் மரத்தில் ஏறிப் பூ பறிப்பதற்காக புலியின் கால்களை வேண்டி வரமாகப் பெற்றவர். இவரும் வியாக்ரபாத முனிவரும் இறைவனின் அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண வேண்டி வழிபட்டனர். மேலும் திருவடி தரிசனத்தை காண்பித்து அருள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இவர்கள் இருவருக்கும் இத்தலத்தில் சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி நடனம் ஆடியருளினார். இந்த தரிசனத்தை விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள் கண்டு களித்தனர். சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்திற்கு இன்றளவும் தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம் திருவடி க்ஷேத்திரம் என்றும், சிவபாத ஸ்தலம் என்றும் போற்றப்படுகிறது. |
| 932 |
: |
_ _ |a இக்கோயிலின் கருவறை விமானம் தாங்குதளம் முதல் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், தளப்பகுதி சுதையாலும் அமைந்துள்ளது. கோயில் திருச்சுற்றில் பிற்காலத்திய சிறு சன்னதிகள் அமைந்துள்ளன. தளங்களற்ற கோபுர அடித்தளம் முகப்புத் தோரண வாயிலாக உள்ளது. அக்னி தீர்த்தக் குளம் கோயிலின் முன் காணப்படுகிறது. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a திருவாரூர் தியாகராஜர் கோயில், திருக்குவளை, திருக்கண்ணமங்கை, திருவலிவலம் |
| 935 |
: |
_ _ |a திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில் திருவாரூரில் இருந்து 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. விளமல் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே கோவில் உள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 7.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை |
| 937 |
: |
_ _ |a விளமல் |
| 938 |
: |
_ _ |a திருவாரூர் |
| 939 |
: |
_ _ |a திருச்சி |
| 940 |
: |
_ _ |a திருவாரூர் வட்டார விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000243 |
| barcode |
: |
TVA_TEM_000243 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000243/TVA_TEM_000243_விளமல்-சிவன்-கோயில்_உபசன்னதி-0011.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000243/TVA_TEM_000243_விளமல்-சிவன்-கோயில்_குளம்-0013.jpg
TVA_TEM_000243/TVA_TEM_000243_விளமல்-சிவன்-கோயில்_நுழைவாயில்-0001.jpg
TVA_TEM_000243/TVA_TEM_000243_விளமல்-சிவன்-கோயில்_நுழைவாயில்-0002.jpg
TVA_TEM_000243/TVA_TEM_000243_விளமல்-சிவன்-கோயில்_நந்தி-0003.jpg
TVA_TEM_000243/TVA_TEM_000243_விளமல்-சிவன்-கோயில்_கருவறை-விமானம்-0004.jpg
TVA_TEM_000243/TVA_TEM_000243_விளமல்-சிவன்-கோயில்_மண்டபம்-0005.jpg
TVA_TEM_000243/TVA_TEM_000243_விளமல்-சிவன்-கோயில்_திருச்சுற்று-0006.jpg
TVA_TEM_000243/TVA_TEM_000243_விளமல்-சிவன்-கோயில்_அதிட்டானம்-0007.jpg
TVA_TEM_000243/TVA_TEM_000243_விளமல்-சிவன்-கோயில்_கல்வெட்டு-0008.jpg
TVA_TEM_000243/TVA_TEM_000243_விளமல்-சிவன்-கோயில்_கருவறை-திருச்சுற்று-0009.jpg
TVA_TEM_000243/TVA_TEM_000243_விளமல்-சிவன்-கோயில்_உபசன்னதி-0010.jpg
TVA_TEM_000243/TVA_TEM_000243_விளமல்-சிவன்-கோயில்_உபசன்னதி-0011.jpg
TVA_TEM_000243/TVA_TEM_000243_விளமல்-சிவன்-கோயில்_உபசன்னதி-0012.jpg
TVA_TEM_000243/TVA_TEM_000243_விளமல்-சிவன்-கோயில்_யானை-வாகனம்-0014.jpg
|