MARC காட்சி

Back
மணிமங்கலம் தருமேசுவரர் கோயில்
245 : _ _ |a மணிமங்கலம் தருமேசுவரர் கோயில் -
246 : _ _ |a வேதமங்கலம்
520 : _ _ |a மணிமங்கலம் தருமேசுவரர் கோயில் தருமேசுவரர் கோயில் பழமையானது. மணிமங்கலம் நரசிம்ம வர்மப் பல்லவனுக்கும் மேலைச் சாளுக்கியன் இரண்டாம் புலிகேசிக்கும் முதல் போர் நடந்த இடம். இப்போரில் பல்லவ மன்னன் வென்றான்.
653 : _ _ |a கோயில், சைவம், சிவபெருமான், சிவன், தர்மேசுவரர், தர்மேஸ்வரர், மணிமங்கலம், காஞ்சிபுரம், நிறைமணிக் காட்சி, மத்தியத் தொல்லியல் துறை, இந்தியத் தொல்லியல் துறை
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a திரு.சேஷாத்திரி ஸ்ரீதரன்
902 : _ _ |a +91- 44 – 2717 8157, 98400 24594
905 : _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு / முதலாம் நரசிம்மவர்மப் பல்லவன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 500 ஆண்டுகள் பழமையானது. தெலுங்கு யாதவராயர் காலத்தியது.
914 : _ _ |a 12.91572755
915 : _ _ |a 80.04368305
916 : _ _ |a தர்மேஸ்வரர்
918 : _ _ |a வேதாம்பிகை
922 : _ _ |a சரக்கொன்றை
923 : _ _ |a சிவபுஷ்கரிணி
924 : _ _ |a சிவாகமம்
926 : _ _ |a ஆடிப்பூரம், நவராத்திரி, சிவராத்திரி
927 : _ _ |a கண்டகோபாலன் மதுராந்தக பொத்தப்பி சோழன் மணிமங்கலத்து வாரியனும் கரணத்தானும் தன்னை நேரில் கண்டு தங்களூரில் பல கோவில் தெய்வங்களுக்கு பன்னிரண்டு வேலி நிலங்கள் உள்ளன என்றனர். அதோடு தை மாதம் இரண்டாம் நாள் முதல் பொன்வரி, ஆயம், பட்டி குற்றம் என இப்படி உள்ள எல்லா வரிகளும் தமக்கு கீழ்ப்படிந்த ( மகனார் > மூன்றாம் அதிகார நிலை அரையர்) நீலகங்கரையர் தம்முடைய ஊரான மணிமங்கலத்தின் திருப்பணிக்கு கொடுத்தோம். ஓலை ஆணை இட்ட இந்நாள் முதலே ஊருடன் இணைந்து போவதாகச் சொல்லினோம். இப்படி செய்யவேண்டும் என்று ஆணையிட்டு கண்டகோபாலன் எழுதியது. இரண்டாம் நிலை அதிகார கண்டகோபால மன்னனிடம் வரிச்சலுகைக் காண ஆணை பெற்றதும் அந்த ஆணைக்கு துணை ஆணையாக மூன்றாம் அதிகார நிலை அரையனான நீலகங்கரையன் ஒரு ஆணை வெளியிடுகிறான். மணிமங்கலம் நீலகங்கரையனின் ஊர் ஆகும். இவ்விரண்டு கல்வெட்டுகளும் ஒரே சிற்பியால் வெட்டப்பட்டுள்ளன என்பதோடு இரண்டின் வாக்கிய அமைப்பும் ஒன்றாகவே உள்ளன. மதுராந்தக பொத்தப்பி சோழன் மூன்றாம் இராசராச சோழனுக்கு அடங்கி அவனது ஆட்சிக்கு காலத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இரண்டிற்கும் தை -ஆனி மாத இடைவெளி உள்ளதாகத் தெரிகிறது. இக்கல்வெட்டில் மண்டலம், கோட்டம், நாடு குறிக்கப்படவில்லை. மணிமங்கலத்து ஈசன் கோவிலில் கைக்கோளரும் (செங்குந்தர் படையும்) அதன் தலைவரும் கூடியிருக்கின்றனர் மன்னன் ஸ்ரீரங்கநாத யாதவராயன் பிறந்த நாளில் முன்னைய ஆண்டு நோய் அல்லது நிலை ஒழிந்து புதுமையான தோற்றத்தோடு இவ்வாண்டு அவன் இங்கு வந்து ஆணை இட்டபடி திருப்பணி நடைபெற நாரணித்தண்டில் இருநூறு குழி நிலம் தானம் செய்கிறான். இவனது 17 ஆட்சி ஆண்டில் (1353 A D) இக்கல்வெட்டு வெட்டப்பட்டது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a சிவன் சன்னதி, அம்பாள் சன்னதிகள் தனித்தனி கோயில் போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. சதுர்வேத விநாயகர் , பைரவர், சனீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகன், அனுக்கை விநாயகர், சுந்தரர், நாவுக்கரசர் மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளனர்.
930 : _ _ |a முற்காலத்தில் இப்பகுதியை பல்லவ மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். சிவபக்தனான அம்மன்னன், தானதர்மங்கள் செய்வதில் சிறந்தவனாகத் திகழ்ந்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக, சிவாலயம் எழுப்பி வழிபட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால், எவ்விடத்தில், எப்படி கோயில் அமைப்பது என அவனுக்குத் தெரியவில்லை. ஒருசமயம் சிவன், அடியார் வேடத்தில் அவனிடம் சென்றார். தான் பரம ஏழை என்றும், தனக்கு ஏதாவது தர்மம் செய்யும்படியும் வேண்டி நின்றார். மன்னன், அவருக்கு தானம் செய்ய முயன்றான். அப்போது அவர், ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு ஒரு சிவன் கோயில் கட்டி தானமாக தரும்படி கேட்டார். மன்னன் வியந்து நின்றான். அப்போது, அடியாராக வந்த சிவன் சுயரூபம் காட்டியருளினார். மகிழ்ந்த மன்னன், சிவன் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் கோயில் எழுப்பினான். சுவாமிக்கு, “தர்மேஸ்வரர்’ என்றே பெயர் சூட்டினான்.
933 : _ _ |a இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை
934 : _ _ |a அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் கோயில், கச்சி அனேகதங்காவதேசுவரர் கோயில், ஓணகாந்தன்தளி
935 : _ _ |a மணிமங்கலம் தாம்பரத்தில் இருந்து 15 கி.மி. தொலைவில் உள்ளது
936 : _ _ |a காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை 
937 : _ _ |a மணிமங்கலம்
938 : _ _ |a காஞ்சிபுரம்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a காஞ்சிபுரம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000236
barcode : TVA_TEM_000236
book category : சைவம்
cover images TVA_TEM_000236/TVA_TEM_000236_மணிமங்கலம்_அதிட்டானம்-0010.jpg :
Primary File :

TVA_TEM_000236/TVA_TEM_000236_மணிமங்கலம்_சிற்பம்-0001.jpg

TVA_TEM_000236/TVA_TEM_000236_மணிமங்கலம்_கோயில்_திருச்சுற்று-0002.jpg

TVA_TEM_000236/TVA_TEM_000236_மணிமங்கலம்_கோயில்_திருச்சுற்று-0003.jpg

TVA_TEM_000236/TVA_TEM_000236_மணிமங்கலம்_கல்வெட்டு-0004.jpg

TVA_TEM_000236/TVA_TEM_000236_மணிமங்கலம்_கல்வெட்டு-0005.jpg

TVA_TEM_000236/TVA_TEM_000236_மணிமங்கலம்_கல்வெட்டு-0006.jpg

TVA_TEM_000236/TVA_TEM_000236_மணிமங்கலம்_கல்வெட்டு-0007.jpg

TVA_TEM_000236/TVA_TEM_000236_மணிமங்கலம்_கல்வெட்டு-0008.jpg

TVA_TEM_000236/TVA_TEM_000236_மணிமங்கலம்_கல்வெட்டு-0009.jpg

TVA_TEM_000236/TVA_TEM_000236_மணிமங்கலம்_அதிட்டானம்-0010.jpg

TVA_TEM_000236/TVA_TEM_000236_மணிமங்கலம்_தாங்குதளம்-0011.jpg