| 245 | : | _ _ |a வரிச்சியூர் உதயகிரீஸ்வரர் கோயில் - |
| 246 | : | _ _ |a உதயகிரீஸ்வரர் கோயில் |
| 520 | : | _ _ |a வரிச்சியூர் மலையின் கிழக்குச் சரிவில் ஒரு குடைவரைக் கோயில் வெட்டப்பட்டுள்ளது. சிறிய கருவறை கொண்டுள்ள இச்சிவன் கோயில் எளிமையான அமைப்புடையது. இது முற்காலப் பாண்டியர் காலக் குடைவரைக்குச் சான்றாக விளங்குகிறது. உட்புறம் சிவலிங்கம் மட்டும் இயற்கையான பாறையில் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய மலையாக இருப்பதால் இக்கோயில் இறைவன் உதயகிரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். முகமண்டபத்தில் வலதுபுறம் கைகட்டிய நிலையில் அடியவர் ஒருவர் நின்ற நிலையிலும், இடதுபுறம் வாயிற்காவலர் ஒருவரும் உள்ளனர். முகப்பில் நந்தி அமைந்துள்ளது. |
| 653 | : | _ _ |a உதயகிரீஸ்வரர் கோயில், வரிச்சியூர் குடைவரைக் கோயில், மதுரை மாவட்டக் குடைவரைகள், பாண்டியர் காலக் குடைவரைகள், முற்காலப் பாண்டியர் குடைவரை, குன்றத்தூர் குடைவரை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மரபுச் சின்னங்கள், மதுரை கோயில்கள் |
| 905 | : | _ _ |a கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர் |
| 909 | : | _ _ |a 1 |
| 910 | : | _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. முற்காலப் பாண்டியர் கலைப்பாணியைக் காட்டுகின்றது. |
| 914 | : | _ _ |a 9.90271127 |
| 915 | : | _ _ |a 78.25181991 |
| 916 | : | _ _ |a உதயகிரீஸ்வரர் |
| 928 | : | _ _ |a இல்லை |
| 929 | : | _ _ |a கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். முகமண்டபத்தில் வலதுபுறம் கைகட்டிய நிலையில் அடியவர் ஒருவர் நின்ற நிலையிலும், இடதுபுறம் வாயிற்காவலர் ஒருவரும் உள்ளனர். முகப்பில் நந்தி அமைந்துள்ளது. |
| 932 | : | _ _ |a ஒரு சிறிய கருவறை மற்றும் ஒரு சிறிய முகமண்டபம் மட்டும் கொண்டுள்ளது. எளிமையான அமைப்புடையது. கிழக்கு நோக்கிய மலையாக இருப்பதால் இக்கோயில் உதயகிரீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. உட்புறம் சிவலிங்கம் இயற்கையான பாறையில் அமைக்கப்பட்டுள்ளது. |
| 933 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| 934 | : | _ _ |a வரிச்சியூர் அஸ்தகிரீஸ்வரர் கோயில், நீலகண்டேஸ்வரர் கோயில், தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு, கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சப்தமாதர்கள் சிற்பங்கள் |
| 935 | : | _ _ |a வரிச்சியூர் மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் மதுரை (வடக்கு) வட்டத்தில் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வரிச்சியூர் செல்லலாம். |
| 936 | : | _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
| 937 | : | _ _ |a வரிச்சியூர் |
| 938 | : | _ _ |a மதுரை |
| 939 | : | _ _ |a மதுரை |
| 940 | : | _ _ |a மதுரை, மேலூர் விடுதிகள் |
| 995 | : | _ _ |a TVA_TEM_000023 |
| barcode | : | TVA_TEM_000023 |
| book category | : | சைவம் |
| cover images TVA_TEM_000023/TVA_TEM_000023_உதயகிரீஸ்வரர்-கோயில்_மலை-தோற்றம்-0001.jpg | : |
|
| Primary File | : |