| 245 |
: |
_ _ |a திருவேளுக்கை முகுந்த நாயகன் கோயில் - |
| 246 |
: |
_ _ |a மண்ணகரன் மாமாட வேளுக்கை, காமாஷிகா நரசிம்ம சன்னதி |
| 520 |
: |
_ _ |a மூலவருக்கு ஆள் அரி என்ற அழகு தமிழ்ச்சொல்லால் திருநாமம் அமைந்துள்ளது, ஒரு தனிச் சிறப்பாகும். ‘மன்னு மதிட்கச்சி வேளுக்கை ஆள் அரி’ என்பது திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம். யோக நரசிம்மராக எழுந்தருளியிருக்கும் இவர் சிறந்த வரப்பிரசாதி. இவரை விட இங்கிருக்கும் உற்சவர் பேரழகு பொருந்தியவர். புராண வரலாற்றின்படி பிருகு மஹரிஷிக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீஹம். தற்போது நரசிம்மனாகயோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம். இம்மாற்றத்திற்கான காரணம் அறியுமாறில்லை. பேயாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம். பேயாழ்வார் 3 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். பேய்பிடித்தவர் போல் பகவான் மீது பற்றுக் கொண்டு, பாசுரம் பாடுபவர் என்பது பாடலாலே விளங்கும். ஸ்ரீஸ்வாமி தேசிகன் இப்பெருமாள் மீது ‘காமாஸி காஷ்டாகம்’ அருளிச் செய்துள்ளார். நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதியில் பிள்ளைப் பெருமாளையங்கார். |
| 653 |
: |
_ _ |a கோயில், வைணவம், பெருமாள், விஷ்ணு, திவ்யதேசம், மங்களாசாசனம், பேயாழ்வார், காஞ்சிபுரம், திருவேளுக்கை, தொண்டை நாட்டுத் திருத்தலம், முகுந்த நாயகன் கோயில், அழகிய சிங்கர், நரசிம்மர், ஆள் அரி, திருமங்கையாழ்வார், ஸ்ரீஸ்வாமி தேசிகன், காமாஸி காஷ்டாகம் |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பல்லவர், சோழர், விசயநகரர் |
| 909 |
: |
_ _ |a 2 |
| 910 |
: |
_ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். பேயாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. |
| 914 |
: |
_ _ |a 12.8221867 |
| 915 |
: |
_ _ |a 79.7064824 |
| 916 |
: |
_ _ |a அழகிய சிங்கர், நரசிம்மர், ஆள் அரி, முகுந்த நாயகன் |
| 917 |
: |
_ _ |a முகுந்த நாயகன் |
| 918 |
: |
_ _ |a வேளுக்கை வல்லி, அம்ருதவல்லி, தனிக்கோயில் நாச்சியார் |
| 923 |
: |
_ _ |a கனக ஸரஸ், ஹேம சரஸ் |
| 925 |
: |
_ _ |a நான்கு கால பூசை |
| 926 |
: |
_ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நரசிம்ம ஜெயந்தி |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கருவறையில் ஆள்அரி எனும் மூலவர் மேற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் காட்டப்பட்டுள்ளார். |
| 930 |
: |
_ _ |a வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள். நரசிம்ம மூர்த்தி இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் வேளிருக்கை என்றாகி காலப் போக்கில் வேளுக்கை ஆகிவிட்டது. எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த காலை ஹஸ்திசைலம் என்னும் குகையிலிருந்து புறப்பட்டு இரண்யனது மாளிகையின் தூணிலிருந்து வெளிப்பட்டபோது வேறொரு நரசிம்ம வடிவங்கொண்டு தம்மைத் தாக்க வந்த அசுரங்களை விரட்டிக் கொண்டே செல்ல இவ்விடத்திற்கு வந்தது அசுரக் கூட்டங்கள் கண்காணா இடத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டதால், இனி அசுரர்கள் வந்தாலும் அவர்களை எதிர்ப்பதற்கு இவ்விடமே பொருத்தமானது என்றெண்ணி, இவ்விடத்தின் எழிலில் பற்றுக் கொண்டு இங்கேயே இருக்க ஆசைப்பட்டார். இவ்விடத்திலேயே யோக நரசிம்மராகி அமர்ந்து விட்டார். காமாஷிகா நரசிம்ம சன்னதி என்றும் இதற்கொரு பெயருண்டு. |
| 932 |
: |
_ _ |a இக்கோயிலின் விமானம் கனக விமானம் என்னும் அமைப்பைக் கொண்டது. மாமாட வேளுக்கை என்ற மங்களாசாசனத்தால் ஒரு காலத்தில் இத்தலம் அமைந்திருந்த பகுதி மாட மாளிகைகளுடன் கூடின பிரம்மாண்டமான தோற்றத்தோடு, பெரிய அளவிற்கான பரப்பளவை உள்ளடக்கியதாக இருந்திருக்க வேண்டும். சிதிலமடைந்து, சிறிய கோவிலாக மாறிவிட்ட இத்தலம் சமீபகாலத்தில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணி செய்யப் பெற்று திகழ்கிறது. இங்கு பெருமாள், தாயார், கருடன், ஆகியோருக்கும் சன்னதி உண்டு. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a விளக்கொளி பெருமாள் கோயில், அட்டபுயக்கரத்தான் கோயில், திருநீரகம், திருக்காரகம், திருக்கார்வானம் |
| 935 |
: |
_ _ |a காஞ்சிபுரத்திலேயே விளக்கொளி பெருமாளின் திருக்கோவிலிலிருந்து இடதுபுறம் செல்லக்கூடிய சாலையில், மூன்று தெருக்களைக் கடந்து பிரகாசமாகத் தென்படுகிறது. அட்டபுயக்கரத்தான் சன்னதியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
| 937 |
: |
_ _ |a காஞ்சிபுரம் |
| 938 |
: |
_ _ |a காஞ்சிபுரம் |
| 939 |
: |
_ _ |a சென்னை - மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a காஞ்சிபுரம் நகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000216 |
| barcode |
: |
TVA_TEM_000216 |
| book category |
: |
வைணவம் |
| cover images TVA_TEM_000216/TVA_TEM_000216_திருவேளுக்கை_முகுந்தநாயகன்-கோயில்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
cg103v090.mp4
TVA_TEM_000216/TVA_TEM_000216_திருவேளுக்கை_முகுந்தநாயகன்-கோயில்-0003.jpg
TVA_TEM_000216/TVA_TEM_000216_திருவேளுக்கை_முகுந்தநாயகன்-கோயில்-0001.jpg
TVA_TEM_000216/TVA_TEM_000216_திருவேளுக்கை_முகுந்தநாயகன்-கோயில்-0002.jpg
TVA_TEM_000216/TVA_TEM_000216_திருவேளுக்கை_முகுந்தநாயகன்-கோயில்-0004.jpg
|