| 245 |
: |
_ _ |a திருக்குளந்தை மாயக்கூத்தன் திருக்கோயில் - |
| 246 |
: |
_ _ |a அருள்மிகு மாயக்கூத்தன் பெருமாள் திருக்கோயில், திருக்குளந்தை, தூத்துக்குடி |
| 520 |
: |
_ _ |a நம்மாழ்வாரால் பாடப்பட்டது இத்திருத்தலம்.திருக்குளந்தை யென்றால் யாருக்கும் தெரியாது பெருங்குளம் என்று சொன்னால்தான் எல்லோருக்கும் எளிதில் விளங்கும். பெருங்குளம் பெருமாள் கோவில் என்றே இங்கு உறைவோர் கூறுகின்றனர்.இங்கிருந்து கருடாழ்வார் மீது பெருமான் புறப்பட்டு இமயம் சென்றதால் கருடன் இங்கு “உற்சவராகவே” எழுந்தருளியுள்ளார். நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம். இத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூரோடு ஒப்பு நோக்கத்தக்கதாகும். அங்கு ஆண்டாள் அவதரித்து எம்பெருமானுக்கே மாலையிடுவேன் என்று மணங்கொண்டாள். அதேபோல் இங்கு கமலாவதி அவதரித்து எம்பெருமானை மணங்கொண்டாள். அங்கு வேதப்பிரான் ஆண்டாளுக்கு தகப்பனராயிருந்தார். இங்கு வேதசாரன் கமலாவிற்கு தகப்பனாயிருந்தார். |
| 653 |
: |
_ _ |a கோயில், வைணவம், பெருமாள், விஷ்ணு, திவ்யதேசம், மங்களாசாசனம், ஸ்ரீவைகுண்டம், திருக்குளந்தை, மாயக்கூத்தன் கோயில், பெருங்குளம் பெருமாள் கோயில், தடாகவனம், சோரநாதன், குளந்தை வல்லி, நம்மாழ்வார் |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர் |
| 909 |
: |
_ _ |a 2 |
| 910 |
: |
_ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. |
| 914 |
: |
_ _ |a 8.6412502 |
| 915 |
: |
_ _ |a 77.996306 |
| 916 |
: |
_ _ |a சோர நாதன், ஸ்ரீனிவாஸன் |
| 917 |
: |
_ _ |a மாயக்கூத்தன் |
| 918 |
: |
_ _ |a குளந்தை வல்லித்தாயார் (கமலாதேவி) அலமேலு மங்கைத் தாயார் |
| 923 |
: |
_ _ |a பெருங்குளம் |
| 925 |
: |
_ _ |a நான்கு கால பூசை |
| 926 |
: |
_ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நரசிம்ம ஜெயந்தி |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 930 |
: |
_ _ |a ஸ்ரீ பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றியும் கூறுகிறது. இவ்விடம் ஒரு காலத்தில் தடாகவனம் என்றழைக்கப்பட்டது. அவ்விடத்து ஒரு ஸ்தலமும் இருந்தது. அவ்வனத்தில் வாழ்ந்து வந்த வேதசாரன் என்னும் அந்தணன், தனது மனைவி குமுத வல்லியுடன் தனக்குப் புத்திரப்பேறு வேண்டுமென்று இந்த தடாகத்தில் உள்ள பொய்கையில் நீராடி நாள் தோறும் பகவானை வேண்டி வந்தான். பெருமாளின் திருவருளால் ஒரு பெண் மகவு பிறக்க அதற்கு “கமலாவதி” என்று பெயரிட்டு நாளொரு மேனியும் பொழுதொ வண்ணமுமாக வளர்த்து வரலாயினர். தக்க பருவம் அடைந்த அவள் தான் மானிடரை மணந்து சாதாரண வாழ்க்கை வாழ மாட்டேன். மணந்தால் பகவானையே மணப்பேன் என்று கூறி கானகம் சென்று கடுந்தவமியற்றத் தொடங்கினாள். யார் சொல்லியும் கேளாது தவத்திலேயே லயித்துப்போன கமலாவதிக்கு முன் எம்பெருமான் தோன்றி, நின் கடுந்தவத்தை மெச்சினோம், வேண்டிய வரங்கேள் என்றார். கமலாவதி தனது எண்ணத்தைத் தெரிவித்து மீண்டும் அதையே கேட்பாள் போன்று தவத்தினில் மூழ்க ஆரம்பித்தாள். இவள் தவத்தை பெரிதும் மெச்சிய பகவான் தம் கௌஸ்துப மணியோடு அவளை ஆலிங்கனம் செய்து நெஞ்சில் ஏற்றுக் கொண்டார். பாலிகை (கன்னிகை) தவம் செய்த வனமாகையால் பாலிகாவனமாயிற்று. தனது புதல்விக்கு கிடைத்த பெரும் பாக்கியத்தை நினைத்து பெருமிதம் அடைந்த வேதசாரன் அங்கெழுந்தருளிய பெருமான் மீது பெரிதும் பக்தி கொண்டு தினந்தவறாது ஆராதனையில் ஈடுபட்டிருந்தார். இவ்விதமிருக்கையில் ஒரு நாள் குமுதவல்லி நீராடச் சென்றவிடத்து அஸ்மாசரன் என்னும் அரக்கன் அவளைக் கவர்ந்து சென்று இமயமலைக் குகையில் சிறைவைத்தான். விஷயமறிந்த வேதசாரன் பூசநட்சத்திரம் கலந்த தை மாத பௌர்ணமியில் பெருமாளைக் குறித்து திருமஞ்சனம் செய்வித்து தனது மனக் குறையை தெரிவித்து அருள்புரிய வேண்டி நின்றான். உடனே பெருமாள் கருட வாகனத்தின் மேலேறி இமயஞ் சென்று குமுதவல்லியை மீட்டு வந்தார். இதனை உணர்ந்த அஸ்மாசரன் பாலிகாவனம் வந்து பகவானுடன் கடும் யுத்தம் செய்தான். பகவான் அவனது இரு கால்களையும் பிடித்து தரையில் அடித்து அவன் மீதுநின்று நர்த்தனம் புரிந்தார். சோரனான (அஸ்மாசரன் மீது) நர்த்தனம் புரிந்ததால் இப்பெருமானுக்கு ஸோரநாதன் (ஸோர நாட்டியன்) என்ற திருநாமம் ஏற்பட்டது. தூய தமிழில் மாயக் கூத்தன் என்றாயிற்று. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a திருப்புளிங்குடி காய்சினவேந்தர் பெருமாள் கோயில், ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோயில், ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோயில் |
| 935 |
: |
_ _ |a இத்திருத்தலம் திருப்புளிங்குடியிலிருந்து. நேராகச் செல்லும் சாலையில் சுமார் 6 மைல் தொலைவில் உள்ளது. ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 7 மைல் தூரம் ஏரல் செல்லும் பேருந்தில் சென்றும் இறங்கலாம். |
| 936 |
: |
_ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
| 937 |
: |
_ _ |a பெருங்குளம் |
| 938 |
: |
_ _ |a தூத்துக்குடி |
| 939 |
: |
_ _ |a மதுரை |
| 940 |
: |
_ _ |a ஸ்ரீவைகுண்டம் விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000215 |
| barcode |
: |
TVA_TEM_000215 |
| book category |
: |
வைணவம் |
| cover images TVA_TEM_000215/TVA_TEM_000215_திருக்குளந்தை_மாயக்கூத்தன்-கோயில்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
cg103v029.mp4
TVA_TEM_000215/TVA_TEM_000215_திருக்குளந்தை_மாயக்கூத்தன்-கோயில்-0001.jpg
TVA_TEM_000215/TVA_TEM_000215_திருக்குளந்தை_மாயக்கூத்தன்-கோயில்-0002.jpg
TVA_TEM_000215/TVA_TEM_000215_திருக்குளந்தை_மாயக்கூத்தன்-கோயில்-0003.jpg
|