MARC காட்சி

Back
திருமணிக்குன்றப் பெருமாள் கோயில்
245 : _ _ |a திருமணிக்குன்றப் பெருமாள் கோயில் -
246 : _ _ |a பராசர சேத்ரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர்
520 : _ _ |a பெருமாள் இங்கு எழுந்தருளியதும் குபேரன் விஸ்வகர்மாவை (தேவசிற்பி) அழைத்து இங்கு ஒரு நகரை நிர்மானம் பண்ணச்சொல்ல கருடன் பறப்பதுபோல் அவர் இந்நகரத்தைச் சிருஷ்டித்தார். இந்நகரில் கருடனின் சக்தி இருப்பதாகவும், கருடன் பறந்து இந்நகரத்தை காப்பதாகவும் ஐதீகம். எனவேகருடன் பறப்பதால் இந்நகரில் பாம்பு கடிக்காது என்பதும் பழமொழி. ஸ்ரீநீலமேகன், ஸ்ரீமணிக்குன்னன், ஸ்ரீவீரசிங்கப்பெருமாள் இம்மூவரும் முறையே ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவியின் மயக்கிற்பட்டு இவ்விடத்திலிருந்து பக்தர்கட்கு அருளுவதாகவும் மரபு. “வெட்டுங்கலியன் வேல் வலியால் மந்திரத்தைத் தட்டிப் பறித்த மணங்கொல்லை” என்று திருமங்கை ஆழ்வார் பகவானிடம் மந்திரத்தை தட்டிப்பறித்த வெண்ணாற்றங் கரையில் தான் இத்தலம் அமைந்துள்ளது. இது ஒரு கோடியிலும் அது ஒரு கோடியிலும் உள்ளது. இங்கு விண்ணாறு எனப்படுகிறது. அங்கு(நதி துவங்குமிடத்து) வெண்ணாறு எனப்படுகிறது.
653 : _ _ |a கோயில், வைணவம், பெருமாள், விஷ்ணு, பராசர சேத்திரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர், தஞ்சை மாமணிக்கோயில், மணிக்குன்றப் பெருமாள், வெண்ணாறு, விரஜாநதி, திருநாங்கூர், நாகப்பட்டினம், கோயில், திவ்யதேசம், மங்களாசாசனம்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 2
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
914 : _ _ |a 10.81687737
915 : _ _ |a 79.13725734
916 : _ _ |a மணிக்குன்றப் பெருமாள்
918 : _ _ |a அம்புச வல்லி
923 : _ _ |a ஸ்ரீராம தீர்த்தம்
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் மணிக்குன்றப் பெருமாள் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் உள்ளார்.
930 : _ _ |a இத்தலம் பற்றியும், இந்நகர் பற்றியும்பிரம்மாண்ட புராணம் விளக்குகிறது. கிரேதாயுகத்தில் மது என்னும் அரசனது மரபில் தஞ்சகன், தண்டகன், கஜமுகன் என்னும் அசுரர் மூவர் பிறந்து சிவனைக் குறித்து கடுந்தவம் செய்ய சிவன் தோன்றி என்ன வரவேண்டுமெனக் கேட்க அதற்கம்மூவரும் சாகா வரம் வேண்டுமென்று கேட்டனர். சாகா வரமளிக்கும் வல்லமை திருமால் ஒருவருக்கே உண்டு என்றும், என்னால் உங்கள் மூவருக்கும் மரணமில்லை என்றும் சிவன் அருளி மறைந்தார். இதனால் இம்மூவரும் மிகவும் செருக்குற்று இந்திரலோகத்தையும் அச்சுறுத்தி, முனிவர்களின் தவத்தையும் சிதைத்து கொடுமைகள் புரிந்துவந்தனர். அப்போது பராசுரர் என்னும் முனிவர் இவ்விடத்தில் தவம் செய்து வந்தார். அப்போது நாடெங்கும் கடும் பஞ்சம் உண்டாகி குடிப்பதற்கும் நீரின்றிப் போனது. ஆனால் பராசர முனிவர் தவமிருக்கும் இடத்திற்கு அருகில் மட்டும் ஒரு சுனையில் நன்னீர் இருந்தது. இம்மூவரும் வந்து அந்த தண்ணீரைப் பருகிக் கொண்டு அவ்வனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் பராசரரின் தவத்தைக் கண்டதும் அவரைத் துன்புறுத்தி அழிக்கலாயினர். பராசரர் ஹரி, ஹரி என்று அரியை அழைக்க, பக்தருக்கு இரங்கும் பரந்தாமன் தனது வாகனமான கருடனை அனுப்ப அம்மூவருக்குத் துணை நின்ற அரக்கர்களையெல்லாம் கருடன் அழித்துவிட அம்மூவர் மட்டும் எஞ்சி நின்றனர். இந்நிலைகண்ட எம்பெருமான் தானே நேரில் வந்து தஞ்சகன் என்னும் அரக்கனை தனது சக்ராயுதத்தால் தலையைச் சீவினார். தவறுணர்ந்த தஞ்சகன் தன்னை மன்னிக்குமாறு வேண்டி தன் பெயரிலேயே இந்நகரம் திகழவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான் (எனவே தஞ்சகனூர் ஆகி தஞ்சகூராகி, தஞ்சாவூராயிற்று) இதன் பிறகு கஜமுகன் என்னும் அரக்கன் யானை வடிவம் கொண்டு திருமாலைத் தாக்க அவர் நரசிம்ம ரூபமெடுத்து அவனைக் கொல்ல இறக்கும் தருவாயில் தனக்குத் திருநாடு வேண்டுமெனக் கேட்க அவனுக்கும் திருநாடருளினார். இந்த தஞ்சையில் யாளியாகிய நரசிம்ம ரூபத்தில் நின்றதால் தஞ்சையாளி என்றே பெயராயிற்று. இவ்வாறு இரண்டு சகோதரர்களும் மாண்டுவிட்டதைக் கண்ட தண்டகாசுரன் மிக்க சினத்துடன் திருமாலுடன் பொருதி பாதாளத்திற்குள் புகுந்து மறைந்து கொண்டான். திருமால் உடனே வராக உருவங்கொண்டு பூமியைக் கீண்டு அவனைப் பின் தொடர்ந்து சென்று தன் முகக் கோட்டால் அவனது தலையைக் கிழித்து எறிந்தார். அவனும் தனது இறுதிக் காலம் வந்துற்றதையெண்ணி எம்பெருமானின் பாதங்களில் வீழ்ந்து இவ்விடமும் தன் பெயரால் வழங்கப்படவேண்டுமென வேண்டிக்கொள்ள அவ்வனம் “தண்டகாரண்யம்” ஆயிற்று. அதன் நடுவே திருமுட்டம் (ஸ்ரீமுஷ்ணம்) என்னும் திவ்ய ஷேத்திரத்தில் நிலத்தினின்று எழுந்த வண்ணம் ஸ்ரீபூவராகப் பெருமாள் சுயம்பு வடிவாய் காட்சி தந்தார்.
932 : _ _ |a இக்கோயில் குன்று போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மணிக்கூட விமானம் என்ற கட்டடக்கலை வடிவமைப்பு இக்கோயில் கருவறை விமானம் அமைந்துள்ளது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a திருக்கண்டியூர், திருவேள்விக்குடி, திருச்சோற்றுத்துறை, ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்
935 : _ _ |a இத்தலம் தஞ்சை நகரைத் தாண்டியதும் அமைந்துள்ள வெண்ணாற்றங்கரை மீது அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a மணிக்குன்றம்
938 : _ _ |a திருவையாறு
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a தஞ்சாவூர் நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000210
barcode : TVA_TEM_000210
book category : வைணவம்
cover images TVA_TEM_000210/TVA_TEM_000210_மாமணிக்கோயில்_மணிக்குன்றப்பெருமாள்-கோயில்-0001.jpg :
Primary File :

cg103v038.mp4

TVA_TEM_000210/TVA_TEM_000210_மாமணிக்கோயில்_மணிக்குன்றப்பெருமாள்-கோயில்-0001.jpg

TVA_TEM_000210/TVA_TEM_000210_மாமணிக்கோயில்_மணிக்குன்றப்பெருமாள்-கோயில்-0002.jpg

TVA_TEM_000210/TVA_TEM_000210_மாமணிக்கோயில்_மணிக்குன்றப்பெருமாள்-கோயில்-0003.jpg

TVA_TEM_000210/TVA_TEM_000210_மாமணிக்கோயில்_மணிக்குன்றப்பெருமாள்-கோயில்-0004.jpg