| 245 |
: |
_ _ |a திருநறையூர் நம்பி பெருமாள் கோயில் - |
| 246 |
: |
_ _ |a மணிமாடம், நாச்சியார் கோயில் |
| 520 |
: |
_ _ |a திருமங்கையாழ்வாரிடம் மடல் பரிசு பெற்றது இத்தலத்திற்குண்டான தனிச் சிறப்பாகும். 108 திவ்யதேசங்களில் இத்தகு சிறப்பு வேறெந்த தலத்திற்கும் இல்லை. திவ்ய தேசத்தின் பெயரோடு நம்பி என்று சேர்த்தழைக்கப்படும் திவ்ய தேசங்களுள் இதுவும் ஒன்று. இவ்வகையில் திருக்குறுங்குடி நம்பியும், திருநறையூர் நம்பியும் மிகு புகழ் பெற்றவர்கள். இப்பெருமானை நம்பி என்று மொழிந்தார் திருமங்கையாழ்வார். நம்பி என்றால் பூரணர் என்பது பொருள். நற்குணங்களால் நிறைந்தவர் என்பதும் பொருள். வைணவசம்பிரதாயத்தில் நம்பி என்னும் சொல் ஆச்சாரியர்களைக் குறிக்கும். இத்திருப்பெயரை முதலி மதுரகவியாழ்வார் தமது ஆச்சார்யரான நம்மாழ்வாருக்குச் சூட்டினார். “நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால் அன்னிக்கே அமுதூறும் என் நாவுக்கே” என்றார். |
| 653 |
: |
_ _ |a கோயில், வைணவம், பெருமாள், மங்களாசாசனம், திவ்யதேசம், திருநறையூர், நம்பி பெருமாள் கோயில், திருமங்கையாழ்வார், வ்யூக வாசுதேவன், மணிமாடக் கோயில், மாடக்கோயில், கோச்செங்கணான், கும்பகோணம், தஞ்சாவூர், நாச்சியார் கோயில், ஸ்ரீனிவாசம் |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு / பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர-நாயக்கர் |
| 909 |
: |
_ _ |a 2 |
| 910 |
: |
_ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி. |
| 914 |
: |
_ _ |a 10.9230269 |
| 915 |
: |
_ _ |a 79.4408526 |
| 916 |
: |
_ _ |a திருநறையூர் நம்பி, ஸ்ரீனிவாசன், வ்யூகவாசுதேவன், சுகந்தவனநாதன் |
| 917 |
: |
_ _ |a திருநறையூர் நம்பி, ஸ்ரீனிவாசன், வ்யூகவாசுதேவன், சுகந்தவனநாதன் |
| 918 |
: |
_ _ |a வஞ்சுளவல்லி, நம்பிக்கை நாச்சியார் |
| 922 |
: |
_ _ |a வில்வ விருட்சம், வகுளம் எனப்படும் மகிழ மரம் |
| 923 |
: |
_ _ |a மணிமுத்தா புஷ்கரணி, ஸங்கர்ஷன தீர்த்தம், பிரத்யுமன தீர்த்தம், அனிருத்தன் தீர்த்தம், ஸாம்ப தீர்த்தம் |
| 925 |
: |
_ _ |a நான்கு கால பூசை |
| 926 |
: |
_ _ |a பெரிய திருவடி தரிசனம் என்ற கருடசேவை |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 930 |
: |
_ _ |a கோச்செங்கண் என்னும் சோழமன்னன் மிகச் சிறந்த சிவ பக்தன். 63 நாயன்மார்களில் சோழ நாயனார் என்னும் திருப்பெயர் பூண்டவன். இவன் மாற்றாரிடம் தோற்று நாடு இழந்து, மறைந்து வாழும் போது மணி முத்தா நதியிலிருந்த முனிவர்களால் இந்நம்பியை வழிபடுமாறு உபதேசம் பெற்று மணிமுத்தா நதியில் நீராடி, மூழ்கி எழுந்திருக்கையில் தெய்வ வாளினைப் பெற்று எதிரிகளோடு பொருதி அவர்களை சின்னாபின்னமாக்கி நாட்டை மீட்டு முடிசூடி வைணவ பக்தனாகவும் மாறினான். இத்தலத்தில் தன் பெயரில் திருமண மண்டபம் ஒன்றும் கட்டுவித்தான். இப்பெருமானின் முக்கிய பூஜைக்கு நிலம் அளித்தான். தங்கத்தால் விமானம் அமைத்தான். இம்மன்னன் நம்பியின் மீது பக்திகொண்டதையும், தெய்வவாள் பெற்றதையும் திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழியில் கூறுகிறார். 5. திருமங்கையாழ்வாரால் மட்டும் பெரிய திருமொழியில் 100 பாசுரங்களால் மங்களாசாசனம். நூற்றுக்கும் அதிகமான பாசுரங்களை திருமங்கையாழ்வார் அள்ளிப் பொழிந்தது இவர் ஒருவருக்கு மட்டும்தான். பெரிய திருமொழி மட்டுமின்றி, திருநெடுந்தாண்டகத்திலும் பெரிய திருமடல், சிறிய திருமடலிலும் இத்தலத்தினை மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தலத்தோடும் இப்பெருமானோடும் திருமங்கைக்கு உள்ள சம்பந்தத்தை விவரித்து தனிப்பெரும் நூலொன்றை யாத்துவிடலாம். திருமங்கையாழ்வார் நீலன் என்ற பெயரில் சோழ மன்னனின் படைத்தளபதியாயிருந்தார் (கப்பம் கட்டும் குறுநில மன்னனாக இருந்தார் என்னும் ஒரு கருத்தும் உண்டு) அப்போது திருவெள்ளக் குளத்தில் குமுதமலர் கொய்து செல்ல வந்த தேவ மகளான பெண்ணொருத்தி குமுத மலரைக் கொய்து செல்ல வேண்டிய குறிப்பிட்ட நேரம் கடந்து விட்டபடியால், விண்ணுக்கு செல்ல முடியாது. திருவெள்ளக் குளத்திலேயே நின்று பூவுலகில் வாழும் தன்மை பெற்றாள். பேரழகு பொலிந்த தெய்வநங்கையான இவள் குமுத மலருடன் நின்றதால் குமுதவல்லி எனப்பட்டாள். இந்நங்கையைப் பற்றிச் செவி மடுத்த திருமங்கையாழ்வார் குமுதவல்லியைப் பெண் கேட்டு வந்தார். நான் வைணவ இலச்சிணைகளைத் தாங்கி வைணவ லட்சணத்துடன் திகழும் ஒருவனுக்கு மாலையிடுவேன். எனவே நீர் வைணவ இலச்சிணை தரித்தே வரவேண்டுமெனக் கூற திருமங்கையாழ்வார் திருநறையூர் நம்பியிடம் தமக்கு வைணவ அடையாளமிட வேண்டுமென்று கேட்க வைணவ லட்சணமான பஞ்ச ஸமஸ்காரங்களை இப்பெருமாளே திருமங்கைக்கு செய்வித்தார். 6. பஞ்ச ஸமஸ்காரம் செய்து கொண்ட பின்பு திருமங்கையாழ்வார் மீண்டும் குமுதவல்லியை பெண்கேட்டு வந்த போது ஒருவருட காலத்திற்குத் தினந்தோறும் ஆயிரம் ஸ்ரீவைணவர்கட்கு அமுது படைத்து ததியாராதனம் செய்தால்தான் மணம் புரிந்து கொள்வேன் எனக் கூற இதற்கு மேல் நிபந்தனை எதுவும் விதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்ட திருமங்கையாழ்வார் ததியாராதனம் செய்யத் தொடங்கினார். (ததி என்றால் அடியார்கள் என்பது பொருள். ஆராதனம் – என்பது அடியார்களுக்கு அன்னமிடுவதைக் குறிக்கும்) கையிலிருந்த பணம் எல்லாம் தீர்ந்து போக ததியாராதனம் செய்ய என்ன செய்வதென்ற நிலை வந்தபோது, சோழ மன்னனுக்காக வசூலித்த கப்பத் தொகையை எல்லாம் ததியாராதனத்திற்கே செலவிட்டார். (இவர் ததியாராதனம் நடத்திய இடம் மங்கை மடம் என்ற பெயரில் இன்றும் ஒரு அழகிய ஊராகத் திகழ்கிறது) தனக்குச் செலுத்த வேண்டிய கப்பப் பணத்தை இவ்வாறு செலவு செய்வதைக் கண்ட சோழன் திருமங்கையாழ்வாரைச் சிறைப் பிடித்தான். இந்த நாச்சியார் கோவிலில் சிறை வைத்தான். மூன்று நாள் அன்ன ஆகாரமின்றி இருந்தார். அன்றைய நாள் இரவில் எம்பெருமானிடம் மனம் உருகி வேண்டிக்கொண்டார். திருமங்கையின் கனவில் வந்த நறையூரான் “காஞ்சிபுரம் வேகவதி நதியில் நிதியை எடுத்து பகுதிப் பணத்தை செலுத்தி சிறைவீடு செய்து கொள்ளும்” என்று திருவாய் மலர்ந்தருளினார். கப்பம் கேட்க நான்காம் நாள் காலையில் சேவகர்கள் வந்து கேட்ட போது “காஞ்சிபுரத்திற்கு வாரும் மாதனம் காட்டுகிறோம்” என்று சொல்ல சோழனும் அவ்வாறாயின் உண்மை நிலையைச் சென்று கண்டு வருக என்று படைத் தளபதியை அனுப்ப, வேகவதி ஆற்றங்கரையில் பெரும் புதையலைக் காட்டி கப்பம் தீர்த்தார். இங்ஙனம் பஞ்ச ஸமஸ்காரம் செய்துவித்தது மட்டுமின்றி ததியாராதனத்திற்கும் திருநறையூரானே வழிவகுத்தான். |
| 932 |
: |
_ _ |a இத்தலம் சிறிதும் பெரிதுமான 16 கோபுரங்களை உடையது. ராஜகோபுரம் 5 அடுக்கும் 76 அடி உயரமும் கொண்டதாகும். மூலஸ்தானத்திற்கு (கருவறைக்கு) மேல் உள்ள மானமும், கோபுர வடிவிலேயே அமைந்திருக்கிறது. இது போன்ற அமைப்பினை வேறு திவ்ய தேசங்களில் அதிகமாக காணமுடியாது. கருவறைக்கு மேல் உள்ள விமானம் கோபுரம் போல் அமைந்திருப்பது இங்கும் திருவல்லிக்கேணியிலும் மட்டுமே. இத்தலம் மாடக்கோவில் அமைப்பில் உள்ளது. கோபுர வாயிலினின்று நோக்கினால் இப்பெருமான் ஒரு மாடத்தின் மேல் பொலிந்து நிற்பது போன்று தெரியும். இக்கருவறையின் அமைப்பும் அதில் பெருமாள் எழுந்தருளியிருக்கும் தோற்றமும் ஒரு சிறிய வடிவமைக்கப்பட்ட மலைமேல் எழுந்தருளியிருப்பது போல் திருமங்கைக்கு காட்சியானது அதனால் திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் மன்னும் மணி மாடக் கோயில் என்று இத்தலத்தை புகழ்கிறார். |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a தண்டலம் சிவன் கோயில், திருப்பாண்துறை, விசலூர் பெருமாள் கோயில் |
| 935 |
: |
_ _ |a இத்தலம் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் 4 மைல் தொலைவில் அமைந்துள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
| 937 |
: |
_ _ |a திருநறையூர் |
| 938 |
: |
_ _ |a கும்பகோணம் |
| 939 |
: |
_ _ |a திருச்சி |
| 940 |
: |
_ _ |a கும்பகோணம் நகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000190 |
| barcode |
: |
TVA_TEM_000190 |
| book category |
: |
வைணவம் |
| cover |
: |
|
| Primary File |
: |
cg103v067.mp4
TVA_TEM_000190/TVA_TEM_000190_திருநறையூர்_நம்பி-பெருமாள்-கோயில்-0001.jpg
TVA_TEM_000190/TVA_TEM_000190_திருநறையூர்_நம்பி-பெருமாள்-கோயில்-0002.jpg
TVA_TEM_000190/TVA_TEM_000190_திருநறையூர்_நம்பி-பெருமாள்-கோயில்-0003.jpg
TVA_TEM_000190/TVA_TEM_000190_திருநறையூர்_நம்பி-பெருமாள்-கோயில்-0004.jpg
TVA_TEM_000190/TVA_TEM_000190_திருநறையூர்_நம்பி-பெருமாள்-கோயில்-0005.jpg
TVA_TEM_000190/TVA_TEM_000190_திருநறையூர்_நம்பி-பெருமாள்-கோயில்-0006.jpg
TVA_TEM_000190/TVA_TEM_000190_திருநறையூர்_நம்பி-பெருமாள்-கோயில்-0007.jpg
TVA_TEM_000190/TVA_TEM_000190_திருநறையூர்_நம்பி-பெருமாள்-கோயில்-0008.jpg
TVA_TEM_000190/TVA_TEM_000190_திருநறையூர்_நம்பி-பெருமாள்-கோயில்-0009.jpg
|