MARC காட்சி

Back
திருக்காவளம் பாடி கோபாலகிருஷ்ணப் பெருமாள் கோயில்
245 : _ _ |a திருக்காவளம் பாடி கோபாலகிருஷ்ணப் பெருமாள் கோயில் -
246 : _ _ |a திருக்காவளம் பாடி
520 : _ _ |a துவாரகாபுரியிலிருந்து கண்ணபிரான் சத்தியபாமாவுடன் இங்கு வந்ததால் இது துவாரகைக்குச் சமமான ஸ்தலம். காவளம் என்னும் சொல்லிற் கொப்ப அழகிய பொழில்கள் சூழ்ந்து துவாரகாபுரியைப் போலவே செழித்து திகழ்கிறது. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரின் அவதார ஸ்தலமான குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்க்கு ததீயாராதனம் (அன்னதானம்) நடத்திய மங்கை மடம் இந்த ஸ்தலத்திற்கு மிகவும் அருகாமையிலேயே அமைந்துள்ளது. திருநாங்கூரின் கருட சேவைக்கு இந்த துவாரகாபுரி நாதனும் எழுந்தருள்வார். இங்கு நாச்சியாரின் திருநாமம் இனிக்கும் தமிழ்ச் சொல்லான “மடவரல் மங்கை” என்பதாகும். இதனைத் திருமங்கையாழ்வார், “படவரவுச்சி தன் மேல் பாய்ந்து பல்நடங்கள் செய்து மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தினானே“ என்று தம்பாடலில் எழுத்தாண்டுள்ளார். சத்தியபாமாவுக்காக கண்ணன் இந்திரலோகத்திலிருந்து பாரி ஜாத மலரைக் கொணர்ந்ததை பெரியாழ்வார் நினைவு கூர்கிறார்.
653 : _ _ |a கோயில், வைணவம், திவ்யதேசம், மங்களாசாசனம், 108 திருப்பதி, வைணவத்தலம், திருக்காவளம்பாடி, கோபாலகிருஷ்ணப் பெருமாள் கோயில்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பாண்டிய, சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 108- திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட தலம்.
914 : _ _ |a 11.1920923
915 : _ _ |a 79.7961399
916 : _ _ |a கோபாலகிருஷ்ணன்
917 : _ _ |a (ராஜகோபாலன்) ருக்மணி, சத்தியபாமா
918 : _ _ |a மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார்
923 : _ _ |a தடமலர்ப் பொய்கை
925 : _ _ |a நான்கு கால பூசை
928 : _ _ |a இல்லை
930 : _ _ |a கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசூரனை அழித்தான். இந்திரன், வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்கட்கே மீட்டுக்கொடுத்தான். வெகுநாளைக்குப் பின்பு இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன் இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் கொடுக்க மறுத்தான். எனவே சினங் கொண்ட கண்ணன் அவனோடு பொருது அவனது காவளத்தை (பூம்பொழிலை) அழித்தான். எம்பெருமான்களில் ஒருவனாக துவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான் (சிவனை ஒன்றாக்கி முடிந்தபின்) தான் இருக்க காவளம் போன்ற பொழிலைத் தேடினான். இந்தக் காவளம் பாடியில் நின்றுவிட்டான்.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a திருநாங்கூர்
935 : _ _ |a ‘திருநாங்கூர் திருப்பதிகளுள் ஒன்று சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது. திருநாங்கூரிலிருந்து 1 1/2 மைல் திருநகரியிலிருந்தும் நடந்தே வரலாம்.
936 : _ _ |a காலை 6.00 -12.30 முதல் மாலை 5.00-8.30 வரை
937 : _ _ |a திருக்காவளம்பாடி
938 : _ _ |a சீர்காழி
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a சீர்காழி வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000149
barcode : TVA_TEM_000149
book category : வைணவம்
cover images TVA_TEM_000149/TVA_TEM_000149_திருக்காவளம்பாடி_கோபாலகிருஷ்ணப்பெருமாள்-கோயில்-0004.jpg :
Primary File :

TVA_TEM_000149/TVA_TEM_000149_திருக்காவளம்பாடி_கோபாலகிருஷ்ணப்பெருமாள்-கோயில்-0001.jpg

TVA_TEM_000149/TVA_TEM_000149_திருக்காவளம்பாடி_கோபாலகிருஷ்ணப்பெருமாள்-கோயில்-0002.jpg

TVA_TEM_000149/TVA_TEM_000149_திருக்காவளம்பாடி_கோபாலகிருஷ்ணப்பெருமாள்-கோயில்-0003.jpg

TVA_TEM_000149/TVA_TEM_000149_திருக்காவளம்பாடி_கோபாலகிருஷ்ணப்பெருமாள்-கோயில்-0004.jpg

TVA_TEM_000149/TVA_TEM_000149_திருக்காவளம்பாடி_கோபாலகிருஷ்ணப்பெருமாள்-கோயில்-0005.jpg

TVA_TEM_000149/TVA_TEM_000149_திருக்காவளம்பாடி_கோபாலகிருஷ்ணப்பெருமாள்-கோயில்-0006.jpg

cg103v034.mp4