MARC காட்சி

Back
திருவழுந்தூர் ஆமருவியப்பப் பெருமாள் கோவில்
245 : _ _ |a திருவழுந்தூர் ஆமருவியப்பப் பெருமாள் கோவில் -
246 : _ _ |a அழுந்தை, அழுந்தூர். திருவழுந்தூர்
520 : _ _ |a கவிச் சக்ரவர்த்தி கம்பன் பிறந்தது இந்த தேரழுந்தூரேயாகும். இப்பெருமான் மீது கம்பன் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். கம்பருக்கும் அவர் மனைவிக்கும் இக்கோவிலில் சிலைகள் உள்ளன. “கம்பன் பிறந்தவூர், காவிரி தங்குமூர் கும்பமுனி சாபம் குலைந்தவூர் செம்பதுமத் தாதகத்து நாண்முகனும் தாதையும் தேடிக் காணா ஓதகத்தார் வாழும் அழுந்தூர்” என்பது புலவர் புராணம் என்னும் நூலில் வரும் செய்தியாகும். இங்கு கம்பர் மேடு என்றழைக்கப்படும் பகுதியே கம்பன் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது. இப்போது அழகான கம்பன் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களில் தேரழுந்தூர் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. முதற் கரிகாலனின் தலை நகரமாக இவ்வூர் விளங்கியது. நீடாமங்கலத்துக்கு அருகில் உள்ள வெண்ணியென்னும் ஊரில் (வெண்ணிப் பறந்தலை) கரிகாலன் பதினொரு குறு நில மன்னரையும், சேர, பாண்டியரையும் ஒருங்கே முறியடிக்க அந்த ஆரவாரம் அழுந்தூரில் கொண்டாடப்பட்ட செய்தியை புறநானூற்றின் 65, 325, 395 ஆம் பாடல்கள் விளக்குகின்றன. இரண்டாம் கரிகாலன் காலத்தே இத்தலைநகர் உறையூருக்கு மாற்றப்பட்டது. அழுந்தை, அழுந்தூர். திருவழுந்தூர், என்பன தமிழிலக்கியம் சூட்டும் பிற பெயர்கள். மார்க்கண்டேயன் கதை அனைவரும் அறிந்தவொன்றாகும். இத்தலத்துப் பெருமாளைச் சேவித்து மார்க் கண்டேயர் மோட்சம் பெற்றார் என்பதும் ஒரு வரலாறு. பிரகலாதன் நரசிம்ம அவதாரத்தைக் கண்டு பயந்து பெருமானின் சாந்த சொரூபத்தைக் காட்ட வேண்டுமென்று வேண்டிய போது, சினம் அடங்கப்பட்ட சிங்கமாகப் பெருமாள் காட்சி தந்தும், பிரகலாதனின் அச்சம் குறையாதிருக்க இத்தலத்தில் அமர்ந்துள்ள ஆமருவியப்பனாக காட்சி தந்தார் என்பதும் ஒரு பெருஞ் சிறப்பு நிகழ்ச்சியாகும். இத்தலத்தில் பிரகலாதனும் இடம் பெற்று நித்திய பூஜைகள் பெறுகிறான். அகத்திய மாமுனிவர் ஒரு சமயம் காவிரித் தாயை அணுகி தன்னை மணந்து கொள்ள விண்ணப்பிக்க, காவிரி மறுக்க, இதனால் கோபமுற்ற அகத்தியர் காவிரியைக் குடத்திலடைக்க, ஒரு சமயம் தரையில் வைக்கப்பட்ட அக்குடத்தைக் காகம் சாய்க்க, காவிரி வழிந்தோடியது. இதனால் மீண்டும் சினமுற்ற முனிவர் காவிரியால் வளம் பெறும் பகுதியில் உள்ளோர் அனைவரும் துன்புற்று வறுமையுறட்டும் என்று சாபமிட, இச்சாபத்தை போக்க தேரழுந்தூரில் தேவாதிராஜனைக் குறித்து தவமிருந்து காவிரி சாபம் துடைத்தாள் என்பதும் வரலாறு. இப்பெருமானை நோக்கித் தவமிருந்த நிலையில் காவிரித் தாயாரும் இச்சந்நிதியில் இடம் பெற்றுள்ளாள். தேவேந்திரன் ஒரு சமயம் கருடனை அழைத்து, ஒரு வைர முடியினையும் ஒரு விமானத்தையும் தந்து, அவைகள் எந்தப் பெருமாளுக்கு உகந்தவைகளோ அவ்வவரிடம் சேர்ப்பிக்குமாறு வேண்ட, திருநாராயண புரத்தில் உள்ள (மைசூர்) செல்லப் பிள்ளை பெருமாளுக்கு வைரமுடியினையும், இந்த தேவாதிராஜனுக்கு விமானத்தையும் அளித்தார். இதனால் இப்பெருமாள் கருடனைத்தன் பக்கத்திலேயே அமர்த்திக் கொண்டார். “திருவுக்கும் திருவாகிய செல்வா” என்பது இப்பெருமானுக்குத் திருமங்கை சூட்டியுள்ள செல்லப் பெயராகும், திருமங்கையால் மட்டும் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். 45 பாசுரங்களில் பாடித்துதித்துள்ளார். இதற்கருகில் உள்ள வேறு ஒரு கோவிலும் பாடல் பெற்ற ஸ்தலமென்று கூறுகின்றனர். மணவாள முனிகளும் தேவாதி ராஜனை மங்களாசாசனம் செய்துள்ளார்.
653 : _ _ |a கோயில், பெருமாள், திவ்யதேசம், மங்களாசாசனம், வைணவம், விஷ்ணு, தேரழுந்தூர், தேவாதிராஜன், ஆமருவியப்பன், நாகப்பட்டினம், குத்தாலம்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 04364-237 952
905 : _ _ |a கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பல்லவ, பாண்டிய சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 108- திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் பாடப்பெற்ற திருத்தலம்.
914 : _ _ |a 11.0465133
915 : _ _ |a 79.57721659
916 : _ _ |a தேவாதிராஜன், ஆமருவியப்பன், கோசகன்
917 : _ _ |a ஆமருவியப்பன்
918 : _ _ |a செங்கமல வல்லி
923 : _ _ |a தர்சன புஷ்கரிணி, காவேரி
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நவராத்திரி
928 : _ _ |a இல்லை
930 : _ _ |a இத்தலத்தைப் பற்றி விஷ்ணு புராணம் மிகவும் சிலாகித்துப் பேசுகிறது. இதைப்பற்றி பல புராண வரலாறுகள் இருப்பினும் விஷ்ணு புராணத்தில் வரும் கீழ்க்கண்ட கதையே பிரதானமாக எடுக்கப்பட்டுள்ளது. கோகுலத்தில் கோபாலர்களுடன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த கண்ணன். ஒரு நாள் பசுமந்தையை, ஓரிடத்தில் நிறுத்தி விட்டு யமுனை நதிக்குச் சென்றிருந்த போது, அப்பசுமந்தையை பிரம்மா தேரழுந்தூருக்கு ஓட்டி வந்து விட்டதாகவும், இச்செயல் அறிந்த மாயக்கண்ணன். உடனே அதே போன்ற பசுமந்தையை அவ்விடத்திலே படைத்து விட, தன் தவறை உணர்ந்த பிரம்மா கண்ணன் முன் தோன்றி, தேரழுந்தூரில் கோயில் கொள்ள வேண்டுமென்று விண்ணப்பிக்க, அதையேற்று “ஆமருவி நிரை மேய்க்கும் அமரர் கோமானாக” வந்தமர்ந்தான் என்பது வரலாறு. இதற்குச் சான்றாக இங்குள்ள உற்சவப் பெருமாளுக்கு முன்புறம் கன்றும் பின்புறம் பசுவும் அமைந்துள்ள பேரழகும் எழுத்தில் அடக்கும் தன்மை பெற்றதல்ல.
932 : _ _ |a வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் வலப்புறம் கம்பர் சன்னதியில் கம்பரும் அவருடைய மனைவியும் உள்ளனர். அடுத்து ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. அருகே பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்துள்ள கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது திருச்சுற்றில் வலது புறத்தில் தேசிகர் மடப்பள்ளி, ஆழ்வார் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. இடது புறம் ஆண்டாள் சன்னதி உள்ளது. சற்று உயர்ந்த தளத்தில் மூலவர் தேவாதிராஜன் நின்ற நிலையில் கிழக்கு நோக்கி உள்ளார். இடது புறம் கருடாழ்வாரும், வலப்புறம் பிரக்லாதாழ்வாரும் உள்ளனர். இடது கையில் ஊன்றிய கதை உள்ளது. இடது புறம் காவிரித்தாய் மண்டியிட்ட நிலையில் உள்ளார். கோயிலின் எதிரே குளம் உள்ளது. பெரிய திருமொழி ஏழாம் பத்து ஐந்தாம் திருமொழி கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில்
935 : _ _ |a இத்திருவழுந்தூர்    தஞ்சை    மாவட்டத்தில் மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் இருக்கிறது. (மாயவரம் - கும்பகோணம் பாதையில் இரண்டாவது ரயில் நிலையம்)
936 : _ _ |a காலை 5.00 -12.30 முதல் மாலை 4.30-9.30 வரை
937 : _ _ |a தேரழுந்தூர்
938 : _ _ |a மயிலாடுதுறை
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a குத்தாலம், நாகப்பட்டினம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000136
barcode : TVA_TEM_000136
book category : வைணவம்
cover images TVA_TEM_000136/TVA_TEM_000136_நாகப்பட்டினம்_திருவழுந்தூர்-தேவாதிராஜன்-பெருமாள்-கோயில்-மூலவர்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000136/TVA_TEM_000136_நாகப்பட்டினம்_திருவழுந்தூர்-தேவாதிராஜன்-பெருமாள்-கோயில்-மூலவர்-0001.jpg