| 245 |
: |
_ _ |a அருள்மிகு சந்திரசூடேசுவரர் கோயில் - |
| 246 |
: |
_ _ |a சந்திரசூடேசுவரர் கோயில் |
| 520 |
: |
_ _ |a ஒசூரின் மலையுச்சியில் சந்திர சூடேசுவரர் கோயில் உள்ளது.காவிரிக் கரையிலுள்ள தலைக்காட்டை தலைநகராகக் கொண்டு ஆண்ட கங்க மன்னர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக செவிடபாடி (ஒசூர்) பகுதி இருந்துள்ளது. இக்கோயில் இவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இராசராச சோழனின் ஆட்சிக்காலத்தால் செவிடபபாடியை உள்ளடக்கிய கங்க நாட்டை சோழர்கள் கைபற்றி தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்தார்கள். இக்கோயில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இரு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது. இக்கோயில் மூலவர் ஒரு சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார். கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், உற்சவர் மண்டபம் என இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் மரகதாம்பிகை சிற்றாலயம், வள்ளி-சண்முகர்- தெய்வானை, இராச கணபதி, சப்தமாதர் ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனியே சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் சிலைகள் உள்ளன. இக்கோயிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மாசிமாதம் பௌர்ணமி அன்று நடக்கிறது. அதையொட்டி 13 நாட்கள் திருவிழா நடக்கிறது. இத்திருவிழாவின் போது தமிழகம் தவிர கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் திருவிழாவில் கூடுவது சிறப்பு. |
| 653 |
: |
_ _ |a ஓசூர், மலைக்கோயில், சிவன், சந்திரசூடேசுவரர், கிருஷ்ணகிரி, சோழர் கற்றளி, தமிழ்நாடு, சிவாலயங்கள் |
| 700 |
: |
_ _ |a தாமஸ் அலெக்சாண்டர் |
| 710 |
: |
_ _ |a தாமஸ் அலெக்சாண்டர் |
| 902 |
: |
_ _ |a 04344-652172 |
| 905 |
: |
_ _ |a கி.பி.10-17-ஆம் நூற்றாண்டு |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 1000 ஆண்டுகள் பழமையானது. |
| 914 |
: |
_ _ |a 12.7487272 |
| 915 |
: |
_ _ |a 77.8024932 |
| 916 |
: |
_ _ |a சந்திரசூடேசுவரர் |
| 917 |
: |
_ _ |a செவிடநாயனார் |
| 918 |
: |
_ _ |a மரகதாம்பாள் |
| 922 |
: |
_ _ |a செண்பகம், வில்வம் |
| 923 |
: |
_ _ |a பச்சைக்குளம், பிரம்ம, பர்வத, மரகத, சாம்பவ, மச்ச, ராம, பாண்டவ, அனும, ருத்ர, விஷ்ணு, சிவகங்கை தீர்த்தங்கள் |
| 926 |
: |
_ _ |a மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், ஆருத்ரா தரிசனம் |
| 927 |
: |
_ _ |a சோழர்களின் ஆட்சி காலமான கிபி 11, 12-ம் நூற்றாண்டுகளில் இத்தல இறைவன் செவிடநாயனார், உடையார் செவிடநாயனார், செவிடையாண்டார் என அழைக்கப்பட்டார். 13-ம் நூற்றாண்டுவரை இப்பெயரால் அழைக்கப்பட்டுள்ளார். 14-ம் நூற்றாண்டில் விசயநகர ஆட்சிகாலத்தில் சூடநாதா எனவும் சூடலிங்கையா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். ஊர் பெயர் செவிடபாடி-செவிடவாடி-சூடவாடி என மருவியிருக்கிறது. அதைப் போல செவிடநாயனார்-சூடநாதர்-சூடநாதேசுவரர்-சூடேசுவரர் என்றாகி சந்திர சூடேசுவர் என அழைக்கப்பட்டுவருகிறார். சோழர்கால கல்வெட்டுகளும் கோயிலில் உள்ளன. கிபி 1261-ல் ஒய்சாலர்கள் ஆட்சி காலத்தில், திரிபுவனமல்ல பூர்வாதிராச அத்தியாழ்வார் மகன் தர்மத்தாழ்வார் இக்கோயிலின் நம்பிராட்டியை (மரகதம்மாள்) எழுந்தருளச் செய்தார். |
| 928 |
: |
_ _ |a சித்தர்களின் ஓவியங்கள் முகப்பில் வரையப்பட்டுள்ளன. |
| 929 |
: |
_ _ |a கோயிலில் உள்ள கணபதிச் சிற்றாலயம் கங்கர்களின் சிற்பக்கூறுகளை கொண்டுள்ளது எனவும், உள் திருச்சுற்றில் உள்ள சப்தமாதர்கள், சூரியன் திருவுருவங்கள் கங்கர்கள் காலத்தவை என்றும் கருதப்படுகிறன. மேலும் மரகதாம்பிகை சிற்றாலயம், வள்ளி-சண்முகர்- தெய்வானை, இராச கணபதி, சப்தமாதர் ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனியே சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் சிலைகள் உள்ளன. |
| 930 |
: |
_ _ |a கௌடபர்வதம் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. மேலும் இம்மலை நந்தி வடிவம் பெற்றுள்ளதால் விருஷபாத்ரி என்றும், உமையாள் இங்கு மரகதவண்ணம் பெற்றதால் மரகதாத்ரி என்றும், செண்பக மரங்கள் நிறைந்ததால் செண்பகாத்ரி என்றும் அழைக்கப்படுகின்றது. முத்கலர், உச்சாயினர் முனிவர்கள் இங்கு தவம் புரிந்துள்ளனர். எனவே இம்மலைக்கோயில் பத்ராத்ரி எனவும், உடும்பு வடிவில் ஈசன் நிலை இங்கு நிலை பெற்றதால் கௌதேயாத்ரி என்றும் வழங்கப்படுகின்றது. பிறவியிலே செவித்திறனின்றி இருந்த உச்சாயினர் பொன் உடும்பை பார்த்து முத்கலர் கூவியது கேட்டார். பொன் உடும்பை உமை தொட்டவுடன் மேனி பச்சை மரகத மேனியானது என்று தலபுராணம் கூறுகின்றது. |
| 932 |
: |
_ _ |a இக்கோயில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இரு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது. ஐந்து நிலை கொண்ட இராஜகோபுரம் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர் ஒரு சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார். கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், உற்சவர் மண்டபம் என இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் மரகதாம்பிகை சிற்றாலயம், வள்ளி-சண்முகர்- தெய்வானை, இராச கணபதி, சப்தமாதர் ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனியே சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் சிலைகள் உள்ளன. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a ஓசூர் மாரியம்மன் கோயில், இலட்சுமி நரசிம்மர் கோயில் |
| 935 |
: |
_ _ |a ஓசூர் நகர் சென்னை நகரில் இருந்து மேற்கே 306 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூர் நகரத்தில் இருந்து 40 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த நகரின் மத்தியிலேயே கோயில் அமைந்துள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 7.30 மணி முதல் 12.30 மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 வரை |
| 937 |
: |
_ _ |a ஓசூர் |
| 938 |
: |
_ _ |a ஓசூர் |
| 939 |
: |
_ _ |a கோயம்புத்தூர் |
| 940 |
: |
_ _ |a ஓசூர் நகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000127 |
| barcode |
: |
TVA_TEM_000127 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-கல்வெட்டு-0011.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-கோயில்-தோற்றம்-0001.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-கோயில்-தோற்றம்-0002.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-கோபுரம்-0003.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-கருவறை-விமானம்-0004.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-கோயில்-முழுத்தோற்றம்-0005.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-கோயில்-மலைப்பாதை-0006.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-நந்தி-0007.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-கல்வெட்டு-0008.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-கல்வெட்டு-0009.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-கல்வெட்டு-0010.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-கல்வெட்டு-0011.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-கல்வெட்டு-0012.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-சிதிலமடைந்த-சிற்பங்கள்-0013.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-சிதிலமடைந்த-சிற்பங்கள்-0014.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-சிதிலமடைந்த-சிற்பங்கள்-0015.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-வீரன்-0016.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-சிதிலமடைந்த-சிற்பங்கள்-0017.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-கல்வெட்டு-0018.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-அனுமன்-0019.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-பிராம்மி-0020.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-சிதிலமடைந்த-மண்டபம்-0021.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-சிதிலமடைந்த-மண்டபம்-0022.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-சிதிலமடைந்த-விமானம்-0023.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-சிறுகோயில்-0024.jpg
TVA_TEM_000127/TVA_TEM_000127_ஓசூர்_சந்திரசூடேசுவரர்-கோயில்-கோயில்-பொதுத்தோற்றம்-0025.jpg
|