MARC காட்சி

Back
நார்த்தாமலை சிவன் குடைவரை
245 : _ _ |a நார்த்தாமலை சிவன் குடைவரை -
300 : _ _ |a குடைவரை
500 : _ _ |a நார்த்தாமலையில் திருமால் குடைவரைக் கோயிலுக்குத் தெற்குப்புறத்தில் மற்றொரு குடைவரை காணப்படுகிறது. முகப்பில் முற்றுப்பெறாத இரு அரைத்தூண்கள் காணப்படுகின்றன. இது சிவபெருமானுக்குரியது. சதுர ஆவுடையாருடன் இலிங்கம் கருவறையில் காணப்படுகிறது. இவை தாய்ப்பாறையில் அமைக்கப்படவில்லை வாயிற்காவலர் இருவர் தனியாகக் காணப்படுகின்றனர். திரிபங்க நிலையில் கதையின் மீது சாய்ந்தவாறு இவர்கள் காட்சி அளிக்கின்றனர். இக்குடைவரை மண்டபத்தின் முன்புள்ள இடிந்த மண்டபத்தின் அடிப்பகுதியில் காணப்படும் பல்லவர் கல்வெட்டு கோவிசையை நிருபதுங்க விக்ரமர்க்கு யாண்டு ஏழாவது விடேல் விடுகு முத்தரையன் மகன் சாத்தன் பழியிலி குடைந்தெடுத்த ஸ்ரீகோயில் எனக் குறிப்பிடுகின்றது. இக்கோயிலுக்கு முக மண்டபம் முதலியன பிற்காலத்தில் சேர்க்கப் பட்டுள்ளன. மலையடிப்பட்டி சிவன் குடைவரையை அமைத்த விடேல் விடுகு முத்தரையனின் மகன் சாத்தன் பழியிலி இக்கோயிலை நிருபதுங்க பல்லவன் காலத்தில் குடைந்தமைத்தமையால் அவன் பெயரிலேயே இது (பழியிலிஈசுவரம்) என அழைக்கப்படுகிறது. சாத்தன் பழியிலியின் மகளும் மீனவன் தமிழதரையன் மனைவியுமாகிய பழியிலி சிறிய நங்கை இக்குடைவரையின் முன்பு, முகமண்டபம் அமைத்த செய்தியும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனின் காலத்தில் இக்குடைவரையின் திருமால், திருமேற்கோயில் கருமாணிக்கத் தேவர் என்று குறிக்கப்பட்டுள்ளார். மேலும் மலையடிப்பட்டி சிவன் குடைவரைக்கு சிறிது பிற்பட்ட காலமாக இவை விளங்குகின்றன.
510 : _ _ |a தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
520 : _ _ |a நார்த்தாமலையில் திருமால் குடைவரைக் கோயிலுக்குத் தெற்குப்புறத்தில் மற்றொரு குடைவரை காணப்படுகிறது. முகப்பில் முற்றுப்பெறாத இரு அரைத்தூண்கள் காணப்படுகின்றன. இது சிவபெருமானுக்குரியது. சதுர ஆவுடையாருடன் இலிங்கம் கருவறையில் காணப்படுகிறது. இக்குடைவரை பழியிலிஈச்சுவரம் என்றழைக்கப்படுகிறது. இக்குடைவரை முத்தரையர் காலத்தியது. கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
653 : _ _ |a தமிழ்நாடு, குடைவரை, குடவரை, குடைவரைக் கோயில்கள், தென்னகக் குடைவரைகள், தமிழ்நாட்டு குடைவரைக் கோயில்கள், பாண்டியர் குடைவரைகள், குகை, குகைக் கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் சமணம், சமணர், சமணம், சமணர் குடைவரை, மலையடிப்பட்டி, மலையடிப்பட்டி சிவன் கோயில், மலையடிப்பட்டி விஷ்ணு குடைவரை, மரபுச் சின்னம், தொல்லியல் சின்னம், வரலாற்றுச் சின்னங்கள், சமணர் வழிபாட்டுத்தலங்கள், சமணர் கோயில்
700 : _ _ |a சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a மலையடிப்பட்டி குன்று |c மலையடிப்பட்டி |d புதுக்கோட்டை |f குளத்தூர்
906 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 10.654387108867
915 : _ _ |a 78.896813438683
934 : _ _ |a விஷ்ணு குடைவரைக் கோயில்
995 : _ _ |a TVA_MON_00088
barcode : TVA_MON_00088
book category : குடைவரைக் கோயில்கள்
cover :
Primary File :

TVA_MON_00088/TVA_MON_00088_புதுக்கோட்டை_நார்த்தா-மலை_சிவன்-குடைவரைக்-கோயில்-0001.jpg