MARC காட்சி

Back
திப்பு மஸ்தான் அவுலியா தர்கா
245 : _ _ |a திப்பு மஸ்தான் அவுலியா தர்கா -
300 : _ _ |a கல்லறை
500 : _ _ |a

         ஆற்காடு-கலவை செல்லும் சாலையில் திவான் பஜார் என்ற இடத்தில் திப்பு அவுலியா தர்கா அமைந்துள்ளது. ஐதர்  அலியின் மனைவிகளின் கல்லறைகள் இங்கு உள்ளன. மைசூர் படையில் பணியாற்றி வந்த ஹைதர் அலி தன் 19ம் வயதில் (கி.பி.1731) ஷாபாஸ் பேகம் என்பவரை மணந்தார்.அடுத்த ஆண்டே இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த பின் பக்கவாதத்தால் தாக்கப்பட்டு உடல் நலிவுற்றார் ஷாபாஸ் பேகம். அதனால் தன் கணவருக்கு மறுமணம் செய்து வைக்க முடிவெடுத்து அவரை வற்புறுத்தி, கடப்பா கோட்டை தலைவர் மீர் முயின் உத்தின் மகளான ஃபாத்திமா என்கின்ற பக்குனிஸ்சாவை மறுமணம் செய்வித்தார். ஹைதர் அலிக்கு ஆண் வாரிசு பிறக்க வேண்டும் என்று எதிர்பார்த்த தம்பதியருக்கு ஆண்டுகள் பல கழிந்தும் குழந்தை பேறு அமையவில்லை இந்த கவலையில் ஜந்து ஆண்டுகள் கழிந்தன. இனி இறைவனின் அருள் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வந்தனர் தம்பதியர்.

          ஆற்காட்டில் அமைய பெற்ற திப்பு மஸ்தான் அவுலியா என்ற இஸ்லாமிய துறவியின் நினைவிடம் உள்ள தர்காவில் சிறிது காலம் தங்கி மனமுருகப் பிராத்தனை செய்தனர் இருவரும். ஆண்டவன் அருளால் பக்குனிஸ்சா கருவுற்றார். பின்னர் 20-11-1750 அன்று தேவனஹள்ளி என்ற இடத்தில் ஆண் குழந்தை ஈன்றெடுத்தார்.குழந்தை பிறந்த செய்தி வந்தபோது ஹைதர் அலி ஹைதராபாத் நிஜாம் நாசர் ஜங்க்கு ஆதரவாக போரில் ஈடுபட்டிருந்தார். போர்களத்திலேயே தன் முதல் ஆண் குழந்தைக்கு,ஆற்காடு துறவியின் நினைவை போற்றும் வகையில் திப்பு சுல்தான் என்ற பெயரை தீர்மானம் செய்து அறிவிப்பை வெளியிட்டார் ஹைதர். ஆற்காடு துறவி திப்பு அருளால் பிறந்ததாக நம்பப்படும் குழந்தையே திப்பு சுல்தான்.

653 : _ _ |a ஹஸரத் திப்பு மஸ்தான் அவுலியா தர்கா, கல்லறை, ஐதர் அலி மனைவியர் கல்லறை, ஹைதர் அலி, கலவை, ஆர்க்காடு, ஆற்காடு, வேலூர், இசுலாம், இஸ்லாம், முஸ்லீம், தர்கா, பள்ளி
710 : _ _ |a திரு. சரவணன் ராஜா
752 : _ _ |a ஆற்காடு |c ஆற்காடு |d வேலூர் |f ஆற்காடு
906 : _ _ |a கி.பி.1804
914 : _ _ |a 12.90480979
915 : _ _ |a 79.32729721
934 : _ _ |a ஆற்காடு அகழ்வைப்பகம், ஆற்காடு நவாபு கோட்டை, அப்துல்லாபுரம் அரண்மனை
995 : _ _ |a TVA_MON_00043
barcode : TVA_MON_00043
book category : கல்லறைகள்
cover :
Primary File :

TVA_MON_00043_ஐதர்அலி-மனைவியர்-கல்லறை-0001.jpg

TVA_MON_00043_ஐதர்அலி-மனைவியர்-கல்லறை-0002.jpg

TVA_MON_00043_ஐதர்அலி-மனைவியர்-கல்லறை-0003.jpg

TVA_MON_00043_ஐதர்அலி-மனைவியர்-கல்லறை-0004.jpg

TVA_MON_00043_ஐதர்அலி-மனைவியர்-கல்லறை-0005.jpg