MARC காட்சி

Back
அப்துல்லாபுரம் அன்னச்சத்திரம்
245 : _ _ |a அப்துல்லாபுரம் அன்னச்சத்திரம் -
300 : _ _ |a பிற கட்டுமானம் - அன்னச்சத்திரம்
500 : _ _ |a

         பண்டையக் காலத்தில் புனித யாத்திரை செல்பவர்களுக்கும், நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கும் அன்னம் அளித்தால் புண்ணியம் என்று உருவானது அன்ன சாத்திரங்கள். பயணிகள் பயணக் களைப்பை நீக்குவதற்கும், பசியாறி செல்வதற்கும் தானமாக அளிக்கபட்ட வேலூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அப்துல்லாபுரம் அன்னசத்திரம் தற்போது இடியும் நிலையில் புதர் மண்டி கிடக்கிறது.

         சத்திரத்தின் பின்புறம் ஒரு சிவலிங்கம், மற்றும் 8 அடி உயர கல்வெட்டு இதன் சரித்திரத்தை கூறுகின்றது. கல்வெட்டும், அதன் பொருளும் பின்வருமாறு. ஸ்ரீ ராமஜெயம் விஜேயாப்துதி சாலிவாகண சக வருஷம் 1789ல், கலியுக வருஷம் 4969 ல் பிறபவாதி சென்ற வருஷம் 60 இதில் வர்த்தமான பிரபவ வருடம் வைகாசி மாசம் 29ல் காஞ்சி மண்டலத்தில் உள்ள விரிஞ்சிபுரம் க்ஷேத்திரம் அருகே சன்னதி அக்கிரகாரத்தில் சாண்டில்ய மகரிஷி கோத்திரத்தை சேர்ந்த அக்கிரவாசிகளான சங்கரநாராயண தீக்ஷ்தரின் மகனும் சுப்பிரமணிய தீக்ஷ்தரின் பெளத்திரனுமாகிய சங்கர தீக்ஷ்தரின் மகன் வித்யாபதி தீக்ஷ்தர்......வேலூரில் சோதிநகரத்தில் உள்ள முத்து செட்டியாரின் மகனும் மாறப்ப செட்டியாரின் பெளத்திரனுமான முத்தைய்யா செட்டியாரின் மகன் தாண்டவராய செட்டியார் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள மேலது தேதி அன்று முத்தைய்யா செட்டியாரின் அண்ணன் பொன்னப்ப செட்டியார் முன்னது ஆண்டு (ஆங்கிரச வருஷம்??) கட்டிய சத்திரம் நந்தவனம் இவை அவரின் இளைய சகோதரர் முத்துசாமி செட்டியார் ருத்தோத்காரி வருடம் பிரதிஷ்டை செய்து சோமயாகம் செய்து சோமபானம் அபித்தலை தானம் கொடுத்து மேல் கண்ட.... செய்வித்து அதற்கு தேவைப்பட்ட திரவியங்கள் கொடுத்து பிராமண சந்தறப்பணை** முதலான விஷயங்களுக்கு பிரமாணர்களால் சோமயாகம் பூரணம் செய்து இந்த வகையில் அவர்களுக்கு தாம்பூலம் தக்ஷ்ணை தானம் எல்லாம் கொடுத்து பூரணமாக நடத்தி வைக்கப்பட்டது பிரபவ வருஷம் வைகாசி மாசம் 29 தேதி.

520 : _ _ |a

         வேலூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அப்துல்லாபுரம் அன்னசத்திரம் தற்போது இடியும் நிலையில் புதர்மண்டி கிடக்கிறது. சத்திரத்தின் பின்புறம் ஒரு சிவலிங்கம், மற்றும் 8 அடி உயர கல்வெட்டு இதன் வரலாற்றைக் கூறுகின்றது. பொன்னப்பச் செட்டியார் கி.பி.1789-இல் இச்சத்திரத்தை கட்டியதாகவும், இவர் தம் உறவினர்கள் நந்தவனம் ஆகியவற்றை அமைத்த செய்தியையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

653 : _ _ |a அன்னசத்திரம், சத்திரம், பயணிகள் தங்குமிடம், மண்டபம், வழிப்போக்கர் மண்டபம், அப்துல்லாபுரம், வேலூர், பயணியர் விடுதி, யாத்ரீகர் சத்திரம்
700 : _ _ |a கோ.சசிகலா
710 : _ _ |a கோ.சசிகலா
752 : _ _ |a அப்துல்லாபுரம் |c அப்துல்லாபுரம் |d வேலூர் |f வேலூர்
906 : _ _ |a கி.பி.1789
914 : _ _ |a 12.9120959
915 : _ _ |a 79.0729793
934 : _ _ |a வேலூர் அருங்காட்சியகம், வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவர் கோயில்
995 : _ _ |a TVA_MON_00029
barcode : TVA_MON_00029
book category : பிற கட்டுமானங்கள்
cover :
Primary File :

TVA_MON_00029_வேலூர்-அப்துல்லாபுரம்-அன்னசத்திரம்-001.jpg

TVA_MON_00029_வேலூர்-அப்துல்லாபுரம்-அன்னசத்திரம்-002.jpg

TVA_MON_00029_வேலூர்-அப்துல்லாபுரம்-அன்னசத்திரம்-003.jpg

TVA_MON_00029_வேலூர்-அப்துல்லாபுரம்-அன்னசத்திரம்-004.jpg

TVA_MON_00029_வேலூர்-அப்துல்லாபுரம்-அன்னசத்திரம்-005.jpg

TVA_MON_00029_வேலூர்-அப்துல்லாபுரம்-அன்னசத்திரம்-006.jpg

TVA_MON_00029_வேலூர்-அப்துல்லாபுரம்-அன்னசத்திரம்-007.jpg

TVA_MON_00029_வேலூர்-அப்துல்லாபுரம்-அன்னசத்திரம்-008.jpg