| 245 |
: |
_ _ |a திருப்பைஞ்ஞீலி குடை வரை - |
| 300 |
: |
_ _ |a குடைவரை |
| 500 |
: |
_ _ |a இக்குடைவரை மேற்கு நோக்கிய நிலையில் முகப்பு மண்டபம், அந்தராளம் கருவறை ஆகியவற்றைக் கொண்டு விளங்குகிறது. கருவறை சதுர வடிவத்தில் குடையப்பட்டு பின்சுவரில் சோமாஸ்கந்தரின் புடைப்புச்சிற்பம் காணப்படுகிறது. சோமாஸ்கந்தர் புடைப்புச் சிற்பத்தில் சிவன் நான்கு கைகளுடன் காணப்படுகின்றார். பின் வலக்கையில் மானும் இடக்கையில் அக்கமாலையும் பெற்றும் முன்னிரு கைகளில் வலக்கை வியாக்கியமான முத்திரைப் பெற்றும் இடக்கை தொடைமீது இறுத்தியவாறும் காட்சி அளிக்கின்றார். சுகாசனத்தில் அமர்ந்துள்ள இறைவனின் அருகில் உமை அன்னை இரண்டு கைகளுடன் காணப்படுகிறாள். இவ்விருவருக்கும் இடையில் கந்தன் நின்ற நிலையில் உள்ளார். இறைவனின் காலடியில் சிற்பம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. இது முயலகனாக இருக்கலாம். இதனை உள்ளூரில் "யமன்" எனக் கூறுகின்றனர். எனவே இக்குடைவரையும் யமபுரி" எனப்படுகிறது. அதிகார வல்லபர் சன்னதி என்றும் இதனைக் கூறுகின்றனர். இக்குடைவரை இருக்கும் பகுதி பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடைப்பட்ட முத்தரையர் களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருப்பதால் இக்குடைவரை பல்லவர்கீழ் இருந்த முத்தரையர்களின் காலக்குடைவரையாக இருக்கலாம். பல்லவர் குடைவரைகளில் காணப்படும். சோமாஸ் கந்தரின் புடைப்புச்சிற்பம் இங்கு இருப்பது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. |
| 510 |
: |
_ _ |a தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ |
| 520 |
: |
_ _ |a திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் 18 கி.மீ. தொலைவில் திருப்பைஞ்சீலி என்னும் ஊர் அமைந்துள்ளது. இவ்வூர் மூவர் முதலிகளான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்கல் பாடல் பெற்ற திருத்தலத்தைக் கொண்டிலங்குகிறது. "பைஞ்சீலி" என்னும் ஒருவகை வாழையைத் தலவிருட்சமாக இங்குள்ள கோயில் பெற்றுள்ளதால் இவ்வூரின் பெயரே "திருப்பைஞ்ஜீலி" எனக் கூறப்படுகிறது. இவ்வூருக்கு அருகில் தான் திருவெள்ளறை வைணவத்தலமும் அமைந்துள்ளது. திருப்பைஞ்சீலியார் சிவாலயம் ஊரின் மையத்தில் மிகப்பெரிய சுற்று மாளிகையைக் கொண்டு விளங்குகிறது. இக்கோயிலின் தெற்குப் பகுதியில் திருச்சுற்று மாளிகையின் உள்பகுதியிலேயே தரைமட்டத்தை ஒட்டியவாறு சிறிய பாறை ஒன்று உள்ளது. இப்பாறையில் சிறிய குடைவரை ஒன்று குடையப்பட்டுள்ளது. |
| 653 |
: |
_ _ |a தமிழ்நாடு, குடைவரை, குடவரை, குடைவரைக் கோயில்கள், தென்னகக் குடைவரைகள், தமிழ்நாட்டு குடைவரைக் கோயில்கள், பாண்டியர் குடைவரைகள், குகை, குகைக் கோயில்,திருப்பைஞ்ஞீலி, திருப்பைஞ்ஞீலி குடைவரை, முற்காலப் பாண்டியர் குடைவரைகள், சின்னம், தமிழக வரலாற்றுச் சின்னங்கள், தமிழகத் தொல்லியல், திருச்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டத் தொல்லியல், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, கதலிவனநாதர் கோயில் |
| 700 |
: |
_ _ |a சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 752 |
: |
_ _ |a திருப்பைஞ்ஞீலி நாதர் கோயில் |c திருப்பைஞ்ஞீலி |d திருச்சிராப்பள்ளி |f மண்ணச்சநல்லூர் |
| 906 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
| 914 |
: |
_ _ |a 10.936588559734 |
| 915 |
: |
_ _ |a 78.643312454091 |
| 934 |
: |
_ _ |a துடையூர் சிவன் கோயில், திருப்பட்டூர் பிரமபுரீசுவரர் கோயில் |
| 995 |
: |
_ _ |a TVA_MON_00121 |
| barcode |
: |
TVA_MON_00121 |
| book category |
: |
குடைவரைக் கோயில்கள் |
| cover |
: |
|
| Primary File |
: |
TVA_MON_00121/TVA_MON_00121_திருச்சி_திருப்பைஞ்ஞீலி_குடைவரைக்-கோயில்-0001.jpg
TVA_MON_00121/TVA_MON_00121_திருச்சி_திருப்பைஞ்ஞீலி_குடைவரைக்-கோயில்-0002.jpg
TVA_MON_00121/TVA_MON_00121_திருச்சி_திருப்பைஞ்ஞீலி_குடைவரைக்-கோயில்-0003.jpg
|