| 245 |
: |
_ _ |a திருச்சுழி-பாறைக்குளம் குடைவரை - |
| 300 |
: |
_ _ |a குடைவரை |
| 500 |
: |
_ _ |a குன்றின் அடிவாரத்திலேயே மேற்கு நோக்கி குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. இது கருவறையை மட்டும் கொண்டுள்ள சிறிய கோயிலாகும். இதன் நுழைவாயிலையொட்டி உருவாக்கப் பெற்றுள்ள தூண்கள் முற்றுப் பெறாத நிலையில் உள்ளன. கருவறையின் உள்ளே தாய்ப்பாறையிலேயே சதுர ஆவுடையாருடன் இலிங்கத் திருவுரு உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இறைவனின் திருநாமம் "பன்னத் கிரிஸ்வரர்" என்பதாகும். அபிஷேக நீர் வடக்காக செல்லக் கால் ஒன்றும் தரையில் குடையப்பட்டுள்ளது. இக்குடைவரைக் கோயிலையொட்டி பிற்காலத்தில் அமைக்கப்பட்ட மண்டபம் ஒன்றும் காணப்படுகிறது. இக்குடைவரை பாண்டியர் கால குடைவரைக் கோயிலாகும். |
| 510 |
: |
_ _ |a தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ |
| 520 |
: |
_ _ |a விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக் கோட்டையினின்றும் ஏறக்குறைய 14 கி.மீ. தொலைவில் திருச்சுழி என்னும் ஊர் குண்டாறு நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற பதினான்கு திருத்தலங்களில் இது சுந்தரமூர்த்தி நாயனாரால் திருப்பதிகம் பெற்ற தலம். மேலும் இது பகவான் இரமண மகரிஷி பிறந்த புண்ணிய பூமியும் ஆகும். இங்கிருந்து பாறைக்குளம் என்ற சிற்றூருக்குச் செல்லும் வழியில் ஏறக்குறைய 2 கி.மீ. தொலைவில் இருப்புப்பாதையை அடுத்துள்ள குன்றின் மீது குடைவரைக் கோயில் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குன்றின் அடிவாரத்திலேயே மேற்கு நோக்கி குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. இது கருவறையை மட்டும் கொண்டுள்ள சிறிய கோயிலாகும். இதன் நுழைவாயிலையொட்டி உருவாக்கப் பெற்றுள்ள தூண்கள் முற்றுப் பெறாத நிலையில் உள்ளன. |
| 653 |
: |
_ _ |a தமிழ்நாடு, குடைவரை, குடவரை, குடைவரைக் கோயில்கள், தென்னகக் குடைவரைகள், தமிழ்நாட்டு குடைவரைக் கோயில்கள், பாண்டியர் குடைவரைகள், குகை, குகைக் கோயில், பாறைக்குளம், பாறைக்குளம் குடைவரைக் கோயில். விருதுநகர் தொல்லியல் சி்ன்னம், முற்காலப் பாண்டியர் குடைவரைகள், சின்னம், தமிழக வரலாற்றுச் சின்னங்கள், தமிழகத் தொல்லியல், விருதுநகர் மாவட்டத் தொல்லியல், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 700 |
: |
_ _ |a சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 752 |
: |
_ _ |a பாறைக்குளம் |c பாறைக்குளம் |d விருதுநகர் |f திருச்சுழி |
| 906 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
| 914 |
: |
_ _ |a 9.5352388116377 |
| 915 |
: |
_ _ |a 78.187533111479 |
| 934 |
: |
_ _ |a கமுதிக் கோட்டை, பந்தல்குடி சிவன் கோயில் |
| 995 |
: |
_ _ |a TVA_MON_00103 |
| barcode |
: |
TVA_MON_00103 |
| book category |
: |
குடைவரைக் கோயில்கள் |
| cover |
: |
|
| Primary File |
: |
TVA_MON_00103/TVA_MON_00103_விருதுநகர்_பாறைக்குளம்_குடைவரைக்-கோயில்-0001.jpg
|