| 245 | : | _ _ |a திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு - |
| 500 | : | _ _ |a இராமநாதபுரம் மாரிதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நித்ய கட்டளை மற்றும் திருவிழா சம்பந்தமாக மன்னர் வழங்கிய உரிமை ஆவணமாக இந்தச் செப்பேடு விளங்குகிறது. “காணியாட்சியாக சேத்திரமாக சுவாத்தியமாக பூசாரிக்கு கொடுத்தது“ எனச் சொல்லுகிறது. இந்தச் செப்பேட்டில் ஆலயத்தின் பூசாரி பெயர் குறிக்கப்படாததால், அந்தப் பணி பரம்பரை பாத்ய மற்றதும் அப்பொழுதைக்கப்பொழுது மன்னரால் நியமனம் செய்யப்படத்தக்கது என்பதும் தெரிகிறது. மேலும் இந்த ஆலயத்தில் அபிஷேகம், நைவேதனம், திருமாலை, திருவிளக்கு, பரிவட்டம், சோடச உபச்சாரம் ஆகியவை நாள்தோறும் நடைபெற்று வந்ததும் அதற்காக குடிமக்களிடமிருந்தும் அரண்மனையில் இருந்தும் பலவகையான பொருட்கள் வழங்கப்பட்டதும் தெரியவருகிறது. மேலும் உப்பு முதல் கர்ப்பூரம் வரை பட்டணத்திலே விற்கப்படுகிற அனைத்துப் பொருட்களிலும் ஒரு பிடி அளவுப் பொருளை வலியப் பெறுவதற்கும், மன்னரது களஞ்சியத்தில் இருந்து கொடுக்கப்படுகிற செலவு நெல்லில் ஒரு கலத்திற்கு ஒரு படி நெல்லும், அரண்மனை சேமிப்பில் (உக்கிராணம்) இருந்து நாள்தோறும் இரண்டு படி அரிசியும், ஒரு கோழியும், அஞ்சு முட்டையும் திங்கட்கிழமை தோறும் ஒரு கிடாயும் பெற்றுக் கொள்வதற்கும் இந்தச் செப்பேட்டில் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, திருமலை ரகுநாத சேதுபதி, மன்னர், சேதுபதி |
| 752 | : | _ _ |a இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |c இராமேசுவரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் |
| 906 | : | _ _ |a கி.பி.1659 |
| 914 | : | _ _ |a 9.28821834 |
| 915 | : | _ _ |a 79.31945223 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00083 |
| barcode | : | TVA_CPS_00083 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |