000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a வேட்டுவர் தலைவன் |
300 | : | _ _ |a வாழ்வியல் |
340 | : | _ _ |a தந்தம் |
500 | : | _ _ |a ஓங்கி உயர்ந்த தோற்றத்துடன் வீரனாய் நிற்கும் வேடர் குலத் தலைவன் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a வேடர் குலத் தலைவன் வேட்டையில் சிறந்தவன் போலும். அவன் தோளில் வேட்டையாடப்பட்ட மான் போடப்பட்டுள்ளது. வலது கையில் நீண்ட வில்லினைப் பிடித்து ஊன்றியுள்ளான். அவன் வலது காலருகே நாய் ஒன்று அமர்ந்துள்ளது. வேடனின் நண்பனல்லவா நாய். தன் தலைவனை ஏறிட்டு நோக்குகிறது. வேடர் தலைவனின் வலது காலில் முள் தைத்து விட்டது போலும். அம்முள்ளினை அகற்றும் பணியில் ஒரு வேடன் ஈடுபட்டுள்ளான். இடது காலை ஊன்றி, வலது காலை மடக்கி ஏக பாதத்தில் நின்றுள்ள வேடர் தலைவன், உடலை சமநிலைப்படுத்தி நிற்கிறான். தழையாடை உடுத்தியுள்ளான். முறுக்கிய மீசையும், வெருட்டிய விழிகளும் கொண்டவனாய், நீள் செவிகள் உடையவனாய் விளங்கும் வீரனுக்கு தலையில் உச்சிக் கொண்டைக் காட்டப்பட்டுள்ளது. கழுத்து, கைகள், கால்கள் ஆகியவற்றில் மணிகளால் ஆன அணிகள் அழகு செய்கின்றன. தன் தலைவனின் காலில் தைத்த முள்ளை அகற்றும் வேடனும் தழையாடை அணிந்துள்ளான். தலைவனின் வலது பாதத்தை தன் உள்ளங்கையில் தாங்கி, இடது கையில் உள்ள ஒரு கருவியால் முள்ளை நீக்குகிறான். |
653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், வேடன், வேடுவன், மான் வேட்டை, திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சியகம் தந்த சிற்பங்கள் |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
914 | : | _ _ |a 12.00275101 |
915 | : | _ _ |a 79.06188179 |
995 | : | _ _ |a TVA_SCL_000534 |
barcode | : | TVA_SCL_000534 |
book category | : | தந்தச் சிற்பங்கள் |
cover images TVA_SCL_000534_திருவரங்கம்_வேட்டுவர்-தலைவன்-001.jpg | : |
![]() |
Primary File | : |