| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a கொடிப்பெண் |
| 300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
| 340 | : | _ _ |a தந்தம் |
| 500 | : | _ _ |a யானைத் தந்தத்தினால் ஆன கொடிப் பெண் சிற்பம் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a விசயநகர கலைப்பாணியில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றான கொடிப்பெண் திருவரங்கத்தில் தந்தச் சிற்பமாக உள்ளது. கொடிப் பெண் வலது காலை ஊன்றி, இடது காலை குறுக்காக வைத்து குஞ்சித பாதமாக ஸ்வஸ்திகாசனத்தில் நிற்கிறாள். இடது கையால் உடலைச் சுற்றி வளைந்து செல்லும் கொடியைப் பிடித்தபடியும், வலது கையை வலது தொடையில் வைத்தபடியும். ஒயிலாக, சாய்வாக நிற்கிறாள். கொடிப்பெண்ணின் வலது தோளில் கிளி ஒன்று அமர்ந்துள்ளது. அக்கிளியை நோக்குகிறாள். நீண்ட சடைப்பின்னல் பின்னால் முழங்காலுக்கு கீழே தொங்குகிறது. நேர்வகிட்டின் இருபுறமும் சூரிய, சந்திரஅணிகளும், செவிகளில் செவிப்பூ, தாடங்கம் என்னும் தோடு அணிந்துள்ளாள். கழுத்தில் நீண்ட ஆரமும், அட்டிகையும் அழகு செய்கிறது. முத்தாலான தோள்வளைகளும், முன்வளைகளும், இடையில் மேகலையும் பெண்ணவளின் எழிலைக் கூட்டுகிறது. இடையாடையின் நீண்ட மடிப்புகள் கால்களுக்கிடையே காட்டப்பட்டுள்ளது. கொடியே அலங்கார வளைவாய் அமைய, அதன் நடுவே இப்பெண் நிற்கிறாள். |
| 653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், கொடிப்பெண்-தந்த சிற்பம், திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் தந்த சிற்பங்கள், பெண் மடந்தை, ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சிய தந்த சிற்பங்கள் |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
| 905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
| 914 | : | _ _ |a 12.00275101 |
| 915 | : | _ _ |a 79.06188179 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000507 |
| barcode | : | TVA_SCL_000507 |
| book category | : | தந்தச் சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |