| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a பலராமன் |
| 300 | : | _ _ |a வைணவம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a மாமல்லபுரத்தில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் அமைந்துள்ள கோவர்த்தனன் புடைப்புச் சிற்பத் தொகுதியில் ஆயனின் தோளை அணைத்தபடி ஆறுதல் கூறும் பலராமர் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a கோவர்த்தன மலையை தூக்கிப் பிடித்து ஆயர்களைக் காத்த கிருஷ்ணனின் தனயரான பலராமன் ஆயனொருவனின் தோளை ஆதுரமாக அணைத்துள்ளார். இடது காலை ஊன்றி, வலது காலை கல்லின் மீது வைத்தவாறு ஊர்த்துவஜானுவில் நிற்கிறார். பத்ர பூரிமத்துடன் கூடிய கரண்ட மகுடம் அணிந்துள்ளார். செவிகளில் அணிகள் விளங்குகின்றன. கழுத்தில் சரப்பளி அணி செய்கின்றது. மார்பில் முப்புரி நூல், கைகளில் தோள்வளை, மூன்றடுக்கு முன் வளைகள் அணிந்துள்ளார். இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய ஆடையை அணிந்துள்ளார். இடைக்கட்டின் முடிச்சு பின்புறம் அமைந்துள்ளது. அருகில் அவரது ஆறுதலில் கலக்கந்தீர்த்த இடையனோ பணிவுடன் இரு கைகளை கட்டி, பணிவில் வளைந்த உடலுடன் நிற்கிறான். தலையில் முண்டாசு கட்டியுள்ளான் போலும் மீசை உள்ளது. இடைக்கட்டுன் கூடிய அரைக்காற் சட்டை அணிந்துள்ளான். அடுத்து நிற்கும் மங்கை பலராமனின் மனைவி ரேவதியாய் இருக்கலாம். தலைமகளுக்குரிய அணி வகைகளுடன் காட்டப்பட்டுள்ளாள். இருபுறமும் பூரிமத்துடன் கூடிய அளக சூடம் என்னும் தலைக்கோலத்தைக் கொண்டுள்ளாள். கழுத்தில் கண்டிகையும், நீண்ட ஆரமும் அணி செய்கின்றன. காதுகளில் அணிகள் விளங்குகின்றன. இடது கையை தொடையில் வைத்தவாறும், வலது கையை கடக முத்திரை காட்டியவாறும் கிருஷ்ணர் மலையைத் தூக்கி நிற்கும் காட்சியையும், ஆயர்களும், ஆநிரைகளும் அடைக்கலம் புகும் நிகழ்ச்சியையும் காண்கிறாள். |
| 653 | : | _ _ |a பலராமன், முல்லைத் திணை வாழ்க்கை, கிருஷ்ண மண்டபம், கோவர்த்தனன், கிரிதரன், கோவர்த்தனதாரி, ஆயர் வாழ்க்கை, ஆயர்பாடி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆநிரை, மாமல்லை, மாமல்லை தலைசிறந்த படைப்பு, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
| 905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
| 914 | : | _ _ |a 12.626927 |
| 915 | : | _ _ |a 80.1927109 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000469 |
| barcode | : | TVA_SCL_000469 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |