000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a அந்தணர்கள் |
300 | : | _ _ |a வாழ்வியல் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a மாமல்லையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவம் என்னும் புடைப்பு சிற்பத் தொகுதியில் காட்டப்பட்டுள்ள அந்தணர்கள் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a கங்கைக் கரையில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை படம் பிடித்துள்ளார் பல்லவச் சிற்பி தன் உளிகளினால். கங்கையாற்றங்கரையில் ஒருவர் கைகள் இரண்டையும் மேலே தூக்கி சூரிய நமஸ்காரம் எனப்படும் யோக முத்திரைகளுள் ஒன்றைச் செய்தபடி உள்ளார். அவர் அருகிலுள்ள மற்றொருவர் கைகளைக் குவித்து தலையைத் தாழ்த்தி வணங்குகிறார். இதுவும் அன்றாடம் காலையில் செய்யப்படும் நீர் சார்ந்த பிராமணர்களின் வழிபாடாகும். மற்றொருவர் பானையொன்றில் கங்கை நீரை முகர்ந்து தனது இடது தோளில் வைத்துள்ளார். இந்நீர் இறைவனின் திருமுழுக்கு பயன்பாட்டிற்கானது. இன்னொருவர் தனது உத்தரீயம் எனப்படும் மேலோடையை பிழிந்தபடி உள்ளார். அவர் அப்போது தான் நீராடியிருப்பார் போலும். இந்நால்வரும் கணுக்கால் வரை அணிந்துள்ள நீண்ட கீழாடையை கால்களுக்கு குறுக்கே மடித்துக் கட்டியுள்ளனர். மார்பில் முப்புரிநூல் அணிந்துள்ளனர். தலைக்கோலமும், நீள் செவிகளும் அவர்களை அந்தணர்கள் என்றே குறிப்பிட வைக்கிறது. |
653 | : | _ _ |a அந்தணர்கள், பக்தர்கள், தவசீலர்கள், அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தவம், பகீரதன் தவம், கங்கைக் கரை காட்சி, கங்கை பூமிக்கு வருதல், மாமல்லை, மாமல்லை தலைசிறந்த படைப்பு, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
914 | : | _ _ |a 12.626927 |
915 | : | _ _ |a 80.1927109 |
995 | : | _ _ |a TVA_SCL_000462 |
barcode | : | TVA_SCL_000462 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000462_மாமல்லபுரம்_அந்தணர்கள்-001.jpg | : |
![]() |
Primary File | : |