000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a பல்லவ அரசனும் அரசியும் |
300 | : | _ _ |a அரச உருவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a பல்லவ அரசனும் அரசியும் நிற்கும் கோலம் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பல்லவ மன்னனும், அவன் தேவியும் பகுப்புக் கோட்டங்களில் காட்டப்பட்டுள்ளனர். சிவபெருமான் இடபாந்திகராக நடுவில் உள்ள கோட்டத்தில் உள்ளார். அக்கோட்டத்திற்கு இருபுறமும் அமைந்த இரு கோட்டங்களில் பல்லவ அரசனும், அவன் தேவியும் இணைகளாக நின்றபடி உள்ளனர். பல்லவ மன்னன் நீண்ட நெடிய உருவம் கொண்டுள்ளான். வலது கையை இடையில் வைத்தவாறும், இடது கையை கடக முத்திரை காட்டியும் நிற்கும் பல்லவனுக்கு மார்பில் உள்ள முப்புரிநூல் வலது முன் கை வழியே செல்கிறது. கழுத்தில் கண்டிகை, அரும்புச்சரம் அழகு செய்கின்றது. கைகளில் தோள்வளைகள், முன்வளைகள் அமைந்துள்ளன. தலையில் கரண்ட மகுடம் போன்ற தலைக்கோலம் காட்டப்பட்டுள்ளது. வலச்செவியில் பத்ர குண்டலம் அணிந்துள்ள மன்னனின் இடைக்கட்டு முடிச்சு இடது பின்புறம் அமைந்து நீண்டு தொங்குகிறது. பல்லவ தேவியும் தலைவனுக்கேற்றவாறு உயரத்துடனும், அங்க அமைவுகளுடனும் உள்ளாள். இருபுறமும் பூரிமம் அமைந்து தலைக்கோலத்தைக் கொண்டுள்ளாள். நீள் செவிகளில் வலதில் மட்டும் பத்ரகுண்டலம் அணிந்துள்ளாள். வலது கை மலரைப் பிடிக்கு கடக முத்திரையைக் கொண்டுள்ளது. வலது கை வலத் தொடையில் உள்ளது. இடைக்கட்டு முடிச்சு இடது பின்புறம் அமைந்து நீண்டு தொங்குகிறது. கால்களில் சிலம்பு அணிந்துள்ளாள். இறைவனுடைய கோட்டத்திற்கு தாங்களே காவலர்களாக இந்த அரச தம்பதியர் நிற்கின்றனர் போலும். |
653 | : | _ _ |a பல்லவ அரசன், பல்லவ அரசி, அரச தம்பதியர், மாமல்லை, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம், சிவ வடிவங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
914 | : | _ _ |a 12.626927 |
915 | : | _ _ |a 80.1927109 |
995 | : | _ _ |a TVA_SCL_000435 |
barcode | : | TVA_SCL_000435 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000435_மாமல்லபுரம்_பல்லவ-அரசனும்-அரசியும்-001.jpg | : |
![]() |
Primary File | : |