000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சோமாஸ்கந்தர் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a இறைவனும் இறைவியும் இறைவி மடியில் குழந்தை முருகனுடன் அமர்ந்திருக்கும் கோலம் சிவக்குடும்பக்காட்சி. |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பீடத்தின் மேல் சிவனார் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். ஜடாமகுடம் தரித்துள்ளார். நீள் காதுகளில் மகரகுண்டலங்கள் திகழ்கின்றன. கழுத்தில் கண்டிகை விளங்குகின்றது. முப்புரிநூல் மார்பில் உடலின் பின்புறம் செல்கிறது. கேயூரம், முன்வளைகள் அணியப்பட்டுள்ளன. நான்கு திருக்கைகளில் வலது பின்கையில் இன்னதென்று அறியக்கூட வில்லை. முன்னிரு கைகளில் இடது கை யோகமுத்திரையாகவும், வலது முன்கை பிடி முத்திரையிலும் உள்ளன. உமையின் அமர்வு எழில் மிகுந்தது. உடலை இறைவன் அமர்ந்திருக்கும் பக்கம் திருப்பியும், முகம் பக்கவாட்டிலும் காட்டப்பட்டுள்ளது. வலது தொடையில் குழந்தை முருகனை இருத்தி, இடது காலை தொங்கவிட்டு இடது கையை ஊன்றிய நிலையிலும் வலது கையில் குழந்தையை அணைத்தபடியும் வைத்துள்ள தேவி கரண்டமகுடம் அணிந்துள்ளார். அன்னையின் அணிகலன்கள் ஏதும் அறியக்கூடவில்லை. சிறு குழந்தை முருகன் இருகைகளையும், கால்களையும் பரப்பியபடி கண்ணிமாலை சூடி அழகுபெற அமர்ந்துள்ளான். கீழே அமர்ந்துள்ள இடபத்தின் மீது இறைவனும் இறைவியும் தங்களின் இடது கால்களை வைத்துள்ளனர். மேலே நான்முகனும், திருமாலும் இக்காட்சியைக் கண்டு வாழ்த்தொலிக்கின்றனர். இடபத்தின் முன்னும் பின்னும் இரு கணங்கள் அமர்ந்துள்ளனர். அடியவர் ஒருவர் வணங்கிய நிலையில் உள்ளார். |
653 | : | _ _ |a சோமாஸ்கந்தர், மாமல்லை, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம், பெண் தெய்வ சிற்பங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
914 | : | _ _ |a 12.626927 |
915 | : | _ _ |a 80.1927109 |
995 | : | _ _ |a TVA_SCL_000430 |
barcode | : | TVA_SCL_000430 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000430_மாமல்லபுரம்_சோமாஸ்கந்தர்-001.jpg | : |
![]() |
Primary File | : |