| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அர்த்தநாரீஸ்வரர் |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a அம்மையப்பராய் விளங்கும் மாதொரு பாகர் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a உமையும் சிவனும் ஒன்றிணைந்த திருக்கோலம். தமிழகத்தின் முதல் அர்த்தநாரீசுவர சிற்ப வடிவம் இதுவாகும். மாதொரு பாகர் சிலம்பணிந்த பெண் பாகத்து இடது காலினை ஊன்றி, வலது காலை சற்று தளர்வாக வைத்து நின்றுள்ளார். சடை மகுடமும், கரண்ட மகுடமும் இரு பாதியாக தலைக்கோலமாயிருக்கிறது. நெற்றிப்பட்டை அணி செய்கின்றது. இடது செவியில் பத்ர குண்டலமும், வலது காதில் சங்கக்குழையும் விளங்குகின்றது. தோள்களில் வாகுமாலை காட்டப்பட்டுள்ளது. கழுத்தில் சவடி அணிந்துள்ளார். மார்பில் உரஸ்சூத்திரம் செல்கிறது. இடமார்பில் பிரம்மசூத்திரம் காணப்படுகின்றது. அரைப்பட்டிகை இடையில் காட்டப்பட்டுள்ளது. இடைக்கட்டு எனப்படும் கடி பந்தம் வளைவாக முன் தொடைகளில் அமைந்துள்ளது. இடைக்கட்டின் முடிச்சு வலது பின்புறம் காட்டப்பட்டுள்ளது. நான்கு திருக்கைகளில் சிவ பாகத்தில் மழுவும், அபய முத்திரையும் அமைந்திருக்க, இட பாகத்தில் முன் கை நீண்டு தளிர்க்கையாகவும், பின் கையில் மலரைப் பிடித்தபடியும் அமைந்துள்ளன. |
| 653 | : | _ _ |a அர்த்தநாரீசுவரர், மாதொரு பாகர், உமையொரு பாகர், அம்மையப்பர், சிவ வடிவங்கள், , மாமல்லை, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள்,பல்லவர் சிற்பங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம், சிவமூர்த்தங்கள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
| 905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
| 914 | : | _ _ |a 12.626927 |
| 915 | : | _ _ |a 80.1927109 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000422 |
| barcode | : | TVA_SCL_000422 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover images TVA_SCL_000422_மாமல்லபுரம்_அர்த்தநாரீஸ்வரர்-001.jpg | : |
|
| Primary File | : |