MARC காட்சி

Back
நந்தி
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a நந்தி
300 : _ _ |a சைவம்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a சிவபெருமானின் வாகனமாயும், கைலாயத்தின் காவலுமாய் அமைந்துள்ள நந்தி
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a தருமநெறியில் நின்ற, சாஸ்திர ஞானம் மிகுந்த ஷிலாதர் என்ற முனிவர் ஆயிரம் ஆண்டுகள் சிவனை நோக்கித் தவம் செய்ய சிவபெருமான் அவர் முன் தோன்றி வேண்டிய வரம் யாது? என்று கேட்க, அம்முனிவர் தாயிடம் பிறக்காத ஒரு புதல்வனைத் தனக்கு அருளுமாறு வேண்டினார். சிவன் அவ்வாறே வரம் அளித்தார். ஸ்ரீசைலம் மலையில் சிலாதர் வசித்தாக கூறப்படுகிறது. ஷிலாதர் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது ஓர் அழகிய பையன் ஏரியின் மீது திடீரென்று தோன்றினான். அவனைச் சுற்றி நான்கு பக்கமும் பேரொளி வீசியது. அவன் ஷிலாதரைத் தந்தையே என்று கூப்பிட்டான். அவனுக்கு நந்தி எனப் பெயரிடப்பட்டது. ஷிலாதர் தன்னுடைய காளைகளின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தமையால் நந்தி தேவரும் காளையைப் போலவே பிறந்தார். அவன் கல்வி கற்க ஆரம்பித்து சகல சாஸ்திர சம்பன்னன் ஆனான். நந்தி சிவதரிசனம் பெறவும், தான் மரணமின்றி இருக்கவும் சமுத்திர தீர்த்தத்தில் ஓரிடத்தில் கோடி சிவ நாமம் ஜபித்துத் தவம் செய்தான். சிவபெருமான் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க இன்னும் கோடி சிவநாமம் ஜபிக்க ஆயுள் வேண்டும் என்றான். அவ்வாறே வரம் அளித்தார் பரமசிவன். இம்மாதிரி மும்முறை நிகழ கடைசியில் சிவபெருமான் தோன்றி சிவநாம ஜபம் போதும். மேலும் தவம் வேண்டாம். உனக்கு மரணம் ஏற்படாது. நீ ஒரு கணநாதன் ஆகி கணங்களுக்கெல்லாம் நாயகனாக விளங்குவாய், என்னை விட்டுப் பிரியாத தோழனாவாய் என்று வரமளித்தார். மருத்தின் புதல்வியாகிய சுயாஷாவை நந்திக்குச் சிவபெருமான் மணம் செய்து வைத்தார். நந்தி எப்போதும் சிவ சந்நிதியில் பரமனைப் பிரியாமல் இருந்தார். நந்தி என்றால் பேரானந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். கழகுமலை வெட்டுவான் கோயிலில் விமானத்தின் கழுத்துப் பகுதியில் நந்தி காட்டப்பட்டுள்ளது. முன்னங்கால்களை மடக்கி அமர்ந்துள்ள நந்தியின் கழுத்தில் பட்டையான அணிகலனுடன் கூடிய மணி ஒன்று தொங்குகிறது. விடைத்த சிறிய காதுகள், வெருட்டும் கண்கள் கொண்டுள்ளது. முதுகில் பெரிய திமில் காட்டப்பட்டுள்ளது.
653 : _ _ |a நந்தி, நந்தியெம்பெருமான், நந்தி தேவர், நந்தீசர், காளை வாகனம், ரிஷபம், இடபம், பாண்டியர் குடைவரை, கழுகு மலை, கழுகு மலை வெட்டுவான் கோயில், முற்காலப் பாண்டியர் கலைப்பாணி, பாண்டியர் ஒற்றைத் தளி, பாண்டியர் கலைகள், பாண்டிய நாடு, பாண்டியர், பாண்டிய மண்டலம்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கழுகு மலை |d தூத்துக்குடி |f கோவில்பட்டி
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
914 : _ _ |a 9.15296112
915 : _ _ |a 77.70432074
995 : _ _ |a TVA_SCL_000199
barcode : TVA_SCL_000199
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000199_கழுகு-மலை-வெட்டுவான்-கோயில்_நந்தி-001.jpg