000 | : | nam a22 7a 4500 |
008 | : | 220829b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a திருமால் |
300 | : | _ _ |a வைணவம் |
340 | : | _ _ |a கல் |
500 | : | _ _ |a திருமால் நின்ற நிலையில் நான்கு கைகளுடன் உள்ளார். இச்சிற்பம் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. முற்காலப் பாண்டியர்களின் கலைப்படைப்பாக காட்சியளிக்கிறது. கிரீட மகுடம் தரித்து, பின்னிரு கைகளில் சங்கு சக்கரத்தைக் கொண்டுள்ளார். முன் வலது கை சிதைந்துள்ளது. முன் இடது கை கடிமுத்திரையாக இடையில் வைக்கப்பட்டுள்ளது. நீள் செவிகளில் மகரகுண்டலங்களும், மார்பில் தடிமனான யக்ஞோபவீதமும், வயிற்றில் உதரபந்தமும், மார்பில் கண்டிகை மற்றும் சரப்பளியும் அழகு செய்கின்றன. சிரித்த முகத்துடன் திருமாலின் உருவம் கலைநயம் மிக்கதாய் அமைந்துள்ளது. |
520 | : | _ _ |a 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமால் சிற்பம் முற்காலப் பாண்டியர் கலைப்பாணியைப் பெற்று விளங்குகிறது. துவரங்காடு என்னும் ஊரில் இச்சிற்பம் கண்டெடுக்கப்பட்டு குற்றாலம் அகழ் வைப்பகத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டுள்ளது. |
653 | : | _ _ |a திருமால், விஷ்ணு, வைணவம், பெருமாள், நாராயணன், கற்சிற்பம், கல், சிற்பம், பாண்டியர், கலை, முற்காலப் பாண்டியர், குற்றாலம், அகழ் வைப்பகம், தென்காசி, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
700 | : | _ _ |a திரு.தெ.பொன் கார்த்திகேயன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a குற்றாலம் அகழ் வைப்பகம் |b குற்றாலம் அகழ் வைப்பகம் |c குற்றாலம் |d தென்காசி |f தென்காசி |
905 | : | _ _ |a கி.பி.-8-ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 8.9299168790071 |
915 | : | _ _ |a 77.2690306774245 |
995 | : | _ _ |a TVA_SCL_001587 |
barcode | : | TVA_SCL_001587 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover | : |
|
Primary File | : |