| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200519b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a அய்யனார் |
| 300 | : | _ _ |a புடைப்புச்சிற்பம் |
| 340 | : | _ _ |a கல் |
| 500 | : | _ _ |a அய்யனார் ஒரு அரசனைப் போன்று காட்சியளிக்கிறார். நேராக நிமிர்ந்து நேர்கொண்ட பார்வையோடு, வீரக்கழல்கள் துலங்கும் வலது காலை தொங்கவிட்டு, இடது காலை பீடத்தின் மீது குத்துக்காலிட்டு மடக்கி உத்குடிகாசனத்தில் அமர்ந்துள்ளார். அய்யன் தலையில் துலங்கும் தீச்சுடர் போன்ற ஜடாபாரத்துடனும், நெற்றியில் கண்ணி மாலை, மார்பில் முப்புரிநூல் (யக்ஞோபவீதம்), நீள்காதுகளில் பத்ர குண்டலங்கள், மார்பில் உதரபந்தம், இடையில் மடிப்புகளுடன் கூடிய ஆடையை அணிந்து, வலது கையில் செண்டை ஏந்தியுள்ளார். முன்னோக்கி நீட்டி, இடது முழங்காலில் வைத்துள்ளார். கழுத்தணிகள், கையணிகள் ஆகியன அணி செய்கின்றன. அய்யன் அமர்ந்திருக்கும் பீடத்தின் கீழே வலது பாதத்தை ஊன்றி வைப்பதற்கான பாதந்தாங்கியும் காணப்படுகின்றது. |
| 520 | : | _ _ |a அய்யனார் தமிழகத்தின் வழிபாட்டு மரபுகளின் முன்னோடி கடவுள் ஆவார். தொல்பழங்காலத்திலிருந்தே வேட்டைக் கடவுளாக அய்யனார் வழிபடப்பட்டு வருகிறார். தமிழகத்தில் அய்யனார் சிற்பங்கள் பரவலாக கிடைக்கின்றன. பல அய்யனார் சிற்பங்கள் இன்றுவரை வழிபாட்டில் உள்ளன. பல குடிகளுக்கு அய்யனார் குலதெய்வமாக விளங்குகிறார். அய்யனார் வேட்டை சமூகத்தில் ஆண் தலைமையேற்ற பண்பாட்டின் முருகனுக்கு இணையான குறிஞ்சி நிலத்தின் முதல் தலைவன் ஆவார். |
| 653 | : | _ _ |a அய்யனார், ஐயனார், அய்யன், ஐயன், சாஸ்தா, சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
| 700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
| 850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
| 905 | : | _ _ |a கி.பி. 10-11 - ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 10.9604046 |
| 915 | : | _ _ |a 78.077561 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001513 |
| barcode | : | TVA_SCL_0001513 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |