MARC காட்சி

Back
நெகனூர்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a நெகனூர்பட்டி
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a இக்கல்வெட்டு நான்குவரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டைச் சுற்றிலுமாக சதுரக்கட்டம் வெட்டப்பட்டுள்ளது. மெய் எழுத்துக்கள் புள்ளி பெற்றுள்ளன. எழுத்துக்களுக்குத் தலைக் கோடு உள்ளது. மழை, வெய்யிலால் கல்வெட்டு தேய்ந்துள்ளது. எனினும் படிப்பதற்கு இயலுமாறுள்ளது. இதன்காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டாகும். “1. பெரும் பொகழ் 2. சேக்கந்தி தாயியரு 3. சேக்கந்தண்ணி செ 4. யி வித்த பள்ளி’ என்பது கல்வெட்டு வாசகமாகும். பெரும் பொகழ் என்ற ஊரைச் சேர்ந்த சேக்கந்தி என்பவரின் தாயான சேக்கந்தண்ணி என்பவர் இந்த பள்ளியைச் செய்வித்தார் என்பது இதன் பொருளாகும். முதல்வரி கடைசி எழுத்து 'ழ்' சு. இராசவேலுவால் ‘ய்‘ என்று படிக்கப்பட்டது. இரண்டாம் வரி கடைசி எழுத்து ‘ரு’ எம்.டி. சம்பத்தால் 'உ' என்று படிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் சேக்கந்தண்ணி என்பதை சேக்கந் அண்ணி என்று பிரித்துப் படிக்க வேண்டும். இவரைச் சமணப் பெண்துறவியாகக் கொள்ளலாம். சேக்கிழார் என்பதில் ‘சே’ குடிப் பெயராக இருப்பது போல இங்கும் குடிப்பெயர் எனக்கருதலாம். 'சே' என்பது காளை என்ற பொருளில் அகப்பாடலில் (அகம் 36 'கயிறு இடு கதச் சேப்போல) குறிக்கப்படுகிறது. கந்தி என்ற சொல் சீவக சிந்தாமணியில் (26:49 கறந்த பால் அணைய கந்தி) பெண் துறவி என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. சூடாமணி கந்தி, கெளந்தி என்ற சொற்களுக்கும் பெண் துறவி என்று பொருள் சொல்கிறது. தாயியரு என்பது தற்காலக் கன்னட மொழியில் தாயாருக்கு வழக்கு சொல்லாக உள்ளது. அண்ணி என்பது மரியாதைச் சொல்லாகப் பயன்பட்டுள்ளது. பெரும்புகை என்றொரு ஊர் அருகில் உள்ளது. அங்குள்ள குன்றிலும் கற்படுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் சொல்லப்படும் பெரும்பொகல் இன்றைய ‘பெரும்புகை’ யாக இருக்கலாம்.
653 : _ _ |a நெகனூர்பட்டி, செஞ்சிக் கல்வெட்டு திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டு, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a அடுக்கன் கல் - குகைத்தளம் |c நெகனூர்பட்டி |d திருச்சி |f செஞ்சி
914 : _ _ |a 12.2865482
915 : _ _ |a 79.4447209
995 : _ _ |a TVA_INS_000079
barcode : TVA_INS_000079
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000079/TVA_INS_000079_நெகனூர்பட்டி_குகைத்தளம்-001.jpg