| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a குடுமியான்மலை |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீட்டர் தொலைவில் குடுமியான்மலை உள்ளது. இவ்வூரில் உள்ள குடைவரைக் கோயில் 7 ஆம் நூற்றாண்டு இசைக்கல்வெட்டால் வரலாற்றுப் புகழுடையது. இம்மலையின் தென்மேற்கே பாறைச் சரிவில் இயற்கையான குகைத்தளம் உள்ளது. இங்குள்ள கல்வெட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அலுவலர்கள் பொ.இராசேந்திரன் சொ. சாந்தலிங்கம் ஆகியோரால் 1991 ல் கண்டறியப்பட்டது. தமிழ்நாடுஅரசு தொல்லியல் துறையினர் ஐராவதம் மகாதேவனுடன் மீளாய்வு செய்தபோது கல்வெட்டு முழுமையாகப் படிக்கப்பட்டது. மேற்சொன்ன குகைத்தளக் கற்படுக்கையில் இக்கல்வெட்டுள்ளது. மிகவும் தெளிவில்லாமல் எழுத்துக்கள் உள்ளன. இதன் காலம் சுமார் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகும். ள், ந் எழுத்துக்கள் புள்ளியுடன் உள்ளன. ‘கொ' எழுத்தில் ஒகரக் குறிலைக் குறிக்கவும் புள்ளியுள்ளது. “நாழன் கொற்றந்தய் பளிய்“ என்பது இதன் வாசகம். நாழள் என்ற ஊரைச் சேர்ந்த கொற்றந்தை செய்த பள்ளி என்று பொருள்படும். ஞாழல் என்ற மலர் சங்க இலக்கியங்களில் பரவலாகக் குறிக்கப்பட்டுள்ளது. இம்மலரின் பெயரில் அமைந்த ஊரே இங்கு நாழள் என்று குறிக்கப்பட்டுள்ளது எனலாம். இம்மலர் உடைய மரம் புலிநகக் கொன்றை, மயில் கொன்றை என்று தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. அந்தை மரியாதைக்குரிய சொல். கொற்றந்தை மரியாதைக்குரியவராக இங்கு காட்டப்பட்டுள்ளார். |
| 653 | : | _ _ |a குடுமியான்மலை, தமிழ்- பிராமி கல்வெட்டு, குடைவரை, குகைத்தளம், பண்டைய தமிழிக் கல்வெட்டு, புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a குகைத்தளம் |c குடுமியான் மலை |d புதுக்கோட்டை |f புதுக்கோட்டை |
| 914 | : | _ _ |a 10.4182382 |
| 915 | : | _ _ |a 78.6583124 |
| 995 | : | _ _ |a TVA_INS_000077 |
| barcode | : | TVA_INS_000077 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |