| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a திருப்பரங்குன்றம் |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a மதுரை நகருக்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம். இக்குன்றின் மேற்குப் பகுதியில் உயரமான இடத்தில் இயற்கையாக அமைந்த குகைத்தளம் ஒன்று உள்ளது. அதனைச் சீராக்கி துறவியர் தங்குவதற்கு ஏற்ப கற்படுக்கைகள் அமைத்து அதன் தலைப் பகுதியிலும், பக்கவாட்டிலும் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் மூன்று கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு கற்படுக்கை ஒன்றின் தலைப்பகுதியில் வலமிருந்து இடமாக பொறிக்கப் பட்டுள்ளது. எழுத்துக்களும் தலைகீழாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் படுக்கையின் தலைப்பகுதியில் அமர்ந்து பார்ப்பவர்களுக்கு இது இடமிருந்து வலமாக வெட்டப்பட்டுள்ளது போலவே தோன்றும். இதன்காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும்.இக்கற்படுக்கையைச் செய்து கொடுத்தவன் அந்துவன் என்பதே இதன் பொருள். கொடுபிதவன் என்பதில் ‘த்’ சேர்த்து கொடுப்பித்தவன் என்று கொள்ள வேண்டும். அந்துவன் என்னும் பெயர் சங்ககாலத்தில் ஓரிரு புலவர்களுக்கும் வழங்கியுள்ளதைக் காணலாம். |
| 653 | : | _ _ |a திருப்பரங்குன்றம், தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a குகைத்தளம் |c திருப்பரங்குன்றம் |d மதுரை |f திருமங்கலம் |
| 914 | : | _ _ |a 09°52’41"N |
| 915 | : | _ _ |a 78°03’57"E |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000052 |
| barcode | : | TVA_INS_000052 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |