MARC காட்சி

Back
கருங்காலக்குடி
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a கருங்காலக்குடி
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a “எழைய் ஊர் அரிதின் பளி“ என்பது கல்வெட்டின் வாசகமாகும். பளி என்பதில் ‘ள்’ மெய் சேர்த்து பள்ளி என்று கொள்ள வேண்டும். இப்புனித இடம் மற்றும் கல்படுக்கை எழையூரைச் சேர்ந்த அரிதி என்பவரால் வழங்கப்பட்டது என்பதே இக்கல்வெட்டின் பொருளாகும். எழைஊர் என்பது இடையூர் என்பதின் திரிபு என்பர். இடையர்கள் (கால் நடை மேய்ப்புச் சமூகத்தினர்) வாழும் இடமாக இருந்தமையால் இடையூர் எனப்பட்டிருக்கலாம். ஏடகம்-ஏழகம், நாடி-நாழி என்பது போல இடையூரே மக்கள் வழக்கில் எழையூர் என மரூவி வழங்குகிறது. இக்கல்வெட்டின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். குற்றெழுத்தில் நெடிலைக் குறிக்கும் பக்கக்கோடு இருப்பினும் இதனை மாங்குளம், அரிட்டாபட்டி கல்வெட்டுகளை ஒப்ப நெடிலையும் குறிலாகப் படித்துப் (பட்டிபுரோலு முறைப்படி) பொருள் கொள்ள வேண்டும். எனவே இக்கல்வெட்டின் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.
653 : _ _ |a கருங்காலக்குடி, மேலூர், பஞ்சபாண்டவர் குகை, குட்டு, உசிலம்பட்டி, பேரனை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a பஞ்சபாண்டவர் குட்டு |c கருங்காலக்குடி |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 10°08’35"N
915 : _ _ |a 78°21’16"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000038
barcode : TVA_INS_000038
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000038/TVA_INS_000038_கருங்காலக்குடி_குகைத்தளம்-001.jpg