MARC காட்சி

Back
மேட்டுப்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a மேட்டுப்பட்டி
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a சமண சமயத்தில் உயர்கதி அடைந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் அவர்கள் வாழ்ந்த மலைகளைச் சித்தர்மலை என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது. சித்தர்மலைக்கு அருகிலுள்ள குகைத்தளத்தில் உள்ள பத்து கல்வெட்டினுள் முதலாவது கல்வெட்டில் சிரமணர் என்ற சொல் மொழி முதல் சகரம் நீக்கப்பட்டு அமணன் என்று குறிப்பிடப்படுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு புகளூர் கல்வெட்டிலும் இச்சொல் (அமண்ணன்) வருகிறது. இக்கல்வெட்டு குகைத் தளத்தின் முகப்புப் பாறையில் தென்புறம் உள்ளது. ஐந்து சொற்களுடன் ஒரு மீட்டர் நீளத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். மதுரையைச் சார்ந்த அமணன் (சமண முனிவர்) அத்திரனுடைய அல்லது அத்திரன் உறைவிடம், இது உதயனனின் கொடை என்று இதற்குப் பொருள் கூறலாம். மதுரை என்ற சொல் இக்கல்வெட்டில் ‘மதிரை’ என்று குறிப்பிடப்படுகிறது. அழகர் மலை தமிழ்-பிராமி கல்வெட்டுகளிலும் ‘மதிரை’ என்ற சொல் வருகிறது. இக்கல்வெட்டில் 'உதயனஸ’ என்ற சொல்லின் இறுதியில் ‘உடையது’ என்ற பொருளில் வரும் ‘ஸ’ என்ற வேற்றுமை உருபு காணப்படுகிறது. தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் வேறு எங்கும் இது காணப்படவில்லை. சாதவாகனர் வெளியிட்ட இருமொழி வாசகங்கள் உடைய காசுகளில் மேற்சொன்ன ‘ஸ’ என்ற வேற்றுமை உருபு காணப்படுகிறது.
653 : _ _ |a மேட்டுப்பட்டி, வைகை தென்கரை கல்வெட்டுகள், பஞ்சபாண்டவர் குகை, உசிலம்பட்டி, பேரனை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a சித்தர்மலை-மகாலிங்க மலை |c மேட்டுப்பட்டி |d மதுரை |f உசிலம்பட்டி
914 : _ _ |a 09°54’03"N
915 : _ _ |a 77°53’01"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000028
barcode : TVA_INS_000028
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000028/TVA_INS_000028_மேட்டுப்பட்டி_குகைத்தளம்-004 (1).jpg

TVA_INS_000028/TVA_INS_000028_மேட்டுப்பட்டி_குகைத்தளம்-004 (2).JPG

TVA_INS_000028/TVA_INS_000028_மேட்டுப்பட்டி_குகைத்தளம்-004 (3).JPG

TVA_INS_000028/TVA_INS_000028_மேட்டுப்பட்டி_குகைத்தளம்-004 (4).JPG

TVA_INS_000028/TVA_INS_000029_மேட்டுப்பட்டி_குகைத்தளம்-001.jpg