| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a கிண்ணிமங்கலம் ஏகநாதர் கோயில் குருமடம் |
| 520 | : | _ _ |a மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் கிண்ணிமங்கலம் என்னும் ஊரில் உள்ள ஏகநாதர் அனந்தவள்ளி அம்மன் கோயிலில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று காலத்தால் பழமையான கல்வெட்டாகத் தமிழியில் (தமிழ் பிராமி) எழுதப்பட்டிருக்கிறது. ஒரு எண்பட்டைத் தூணில் கிடைத்திருக்கும் இந்தக் கல்வெட்டில், 'எகன் ஆதன் கோட்டம்' என்ற சொற்கள் கிடைத்துள்ளன. இதுவரை தமிழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், நடுகற்களில் சமண படுகைகளில்தான் கிடைத்திருக்கின்றன. முதல் முறையாக ஒரு தூணில் அந்த எழுத்துகள் கிடைத்திருக்கின்றன. தவிர, தமிழி எழுத்துகளில் புள்ளி வைக்கும் முறை கிடையாது. ஆனால், இங்கு கிடைத்திருக்கும் 'அதன் ஏகன் கோட்டம்' என்ற வார்த்தைகளில் நான்கு இடங்களிலுமே புள்ளிகள் இருக்கின்றன. ஆகவே இது பிற்காலத் தமிழியாக இருக்கலாம். இதுவரை கிடைத்த தமிழி கல்வெட்டுகளில் ஆனைமலை கல்வெட்டில்தான் முதன்முதலில் புள்ளி இருந்தது. 'ட்' என்ற ஒரு எழுத்தின் மேல் இந்தப் புள்ளி அமைந்திருந்தது. ஐராவதம் மகாதேவன் அதனை கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் குறிப்பிட்டார். இந்தக் கல்வெட்டும் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்" என்கின்றனர் கல்வெட்டறிஞர்கள். இதுதவிர, கோட்டம் என்ற சொல் இதில் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழி கல்வெட்டில் கோட்டம் என்ற சொல் இதுவரை இடம் பெற்றதில்லை. பூலாங்குறிச்சி வட்டெழுத்துக் கல்வெட்டில்தான் முதன்முதலாக கோட்டம் என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது. ஆகவே கோட்டம் என்ற சொல் இடம்பெற்ற முதல் தமிழி கல்வெட்டும் இதுதான் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, நடுகல் கல்வெட்டு, மதுரை, தமிழ்நாடு, மதுரை மாவட்டக் கல்வெட்டுகள், தனிக்கல் கல்வெட்டு, கிண்ணிமங்கலம், கிண்ணிமங்கலம் தமிழ்-பிராமிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, தமிழிக் கல்வெட்டு, தொல் தமிழ்க் கல்வெட்டு, பண்டையத் தமிழ்க் கல்வெட்டு, ஏகநாதர் கோயில், ஏகன் ஆதன் கோட்டம், குருமடம், பள்ளிப்படைக் கோயில், சித்தர் மரபு, பாண்டிய நாட்டுத் தமிழிக் கல்வெட்டுகள், ஏகநாதர் உடனுறை ஆனந்தவள்ளி அம்மன் கோயில் |
| 752 | : | _ _ |a ஏகநாதர் கோயில் குருமடத்தில் உள்ள உடைந்த தூண் |c கிண்ணிமங்கலம் |d மதுரை |f திருமங்கலம் |
| 914 | : | _ _ |a 9.928410640054 |
| 915 | : | _ _ |a 77.981300157653 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001918 |
| barcode | : | TVA_INS_001918 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |