MARC காட்சி

Back
வரிச்சியூர்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a வரிச்சியூர்
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a மதுரை மாவட்டம் மதுரை வடக்கு வட்டத்தில் சிவகங்கை செல்லும் சாலையில் வரிச்சியூர் அமைந்துள்ளது. இவ்வூரிலுள்ள உதயகிரி என்றழைக்கப்படும் சுப்பிரமண்ய மலையில் மூன்று தமிழ்-பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ளன. வடக்குப் பார்த்தமைந்துள்ள சிறிய குகைத்தளத்தின் புருவப் பகுதியிலும் கிழக்குப் பார்த்துள்ள குகைத்தளத்தின் புருவப் பகுதியில் வெட்டுள்ள நீர்வடிவிளிம்பின் மேலும் கீழுமாக இம்மூன்று கல்வெட்டுகளும் உள்ளன. இக்கல்வெட்டுகள் 1908இல் படியெடுக்கப்பட்டு அவ்வாண்டு இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையில் குறிப்புகளாக வெளியிடப்பட்டன. இக்குகைத்தளம், கல்வெட்டுகள் மற்றும் இங்குள்ள குடைவரைக் கோயில்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மரபுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இக்கல்வெட்டு வடக்கு நோக்கிய சிறிய குகைத்தளத்தின் நெற்றிப்பாறை முகப்பில் உள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. 2ஆம் நூற்றாண்டாகும். இப்பள்ளியை அமைத்தவரின் பெயர் சொல்லப்படுகிறது. கல்வெட்டின் இறுதிப் பகுதி சிதைந்துவிட்டதால் கொடையளித்தவரின் பெயரைத் தெரிந்து கொள்ள இயலவில்லை.
653 : _ _ |a வரிச்சியூர், உதயகிரி, அஸ்தகிரி, சுப்பிரமண்ய மலை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a உதயகிரி சுப்பிரமண்ய மலை |c வரிச்சியூர் |d மதுரை |f மதுரை வடக்கு
914 : _ _ |a 09°54’09"N
915 : _ _ |a 78°15’13"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000019
barcode : TVA_INS_000019
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000019/TVA_INS_000019_வரிச்சியூர்_குகைத்தளம்-001.jpg