MARC காட்சி

Back
வேதாளை ஜூம்மா பள்ளவாசல்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a வேதாளை ஜூம்மா பள்ளவாசல்
510 : _ _ |a ஆவணம் இதழ் 4, தமிழகத் தொல்லியல் கழகம், 1994
520 : _ _ |a சேதுபதி நாட்டின் மிகச்சிறந்த வள்ளலாகத் திகழ்ந்தவர் கீழக்கரை பெரிய தம்பி மரைக்காயர் என்ற பெரு வணிகரது குமாரர் சேகு அப்துல் காதிர் மரைக்காயர் ஆவர். இவரது இளவல் சேகு இபுறாகிம் மரைக்காயரும் வணிகராவர். பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சிறந்திருந்த கிழக்குக் கடற்கரை யோர வணிக நகரமாகிய வேதாளையில் இருந்தவர். இந்த வணிகரது குடும்பத்தினர் திருப்பணியாக விளங்கும் வேதாளை ஜூம்மா பள்ளி வாசலை அடுத்த மைய வாடியில் (இடுகாடு) இந்த வணிகரது அடக்க இடம் மட்டும் கல் கட்டு அமைப்பாக அமைந்துள்ளது. காலத்தின் அழிவைத் தாங்கி அழிந்தும் அழியாமலும் உள்ள இந்த மண்டபம் 12 அடி நீளம் 10 அடி அகலம் கொண்டு செவ்வக அமைப்பில் முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. முன் பகுதியில் அழகிய மண்டபமும் அதனையடுத்து சேகு இபுறாகிம் மரைக்காயரது பூத உடலைத் தாங்கியுள்ள சிறு அறையும் அமைந்துள்ளது. இஸ்லாமியரது வழக்கப்படி இந்த அடக்க இடத்தில் இறந்தவரது தலைப் பகுதியில் (வடக்கு ஒரு கல்லும், கால் பகுதியில் (தெற்கு ஒரு கல்லுமாக அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய இரண்டு கற்கள் நாட்டப்பட்டுள்ளன. இந்தக்கற்களின் மகுடமாக திருவாசி போல அமைக்கப்பட்டு இரட்டை குடை உருவங்கள் காணப்படுகின்றன. தரை மட்டத்திற்குக் கீழே இரண்டு அடி ஆழத்தில் மணல் மூடியுள்ள அந்தக் கற்களில் வடக்குக் கல்லில் அரபி மொழித் தொடர்களும், தெற்குக் கல்லில் தமிழ்க் கல்வெட்டும் இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, பாறைக்கல்வெட்டு, பரமக்குடி வட்டம், கீழக்கரை, மரைக்காயர் வணிகர், இசுலாமியர், வேதாளை கூரைப்பள்ளிக் கல்வெட்டு, இராமநாதபுரம், சேதுபதி மன்னர், வேதாளை, ஜூம்மா பள்ளிவாசல், நடுகல், மரைக்காயர், சேது இபுராகிம் மரைக்காயர், ஆவணம் இதழ் 4
752 : _ _ |a வேதாளை ஜூம்மா பள்ளவாசல் நடுகல் |c வேதாளை |d இராமநாதபுரம் |f கீழக்கரை
914 : _ _ |a 9.268167
915 : _ _ |a 79.106719
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001895
barcode : TVA_INS_001895
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001895/TVA_INS_001895_இராமநாதபுரம்_கீழக்கரை_வேதாளை-ஜும்மா-பள்ளிவாசல்-001.jpg