| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a திருத்தங்கல் |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1992 |
| 520 | : | _ _ |a திருத்தங்கல் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசிக்கு அருகில் அமைந்த ஊராகும். இதன் பழம் பெயர் தங்கால் என்பதாகும். பழந்தமிழ் இலக்கிய காலத்திலிருந்தே இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராக விளங்கி வந்திருக்கின்றது. இவ்வூர்க் குன்றின் மீதுள்ள நின்றநாராயணப் பெருமாள் கோயில் முதலாழ்வார்களாலும் திருமங்கையாழ்வாராலும் பாடப்பெற்ற சிறப்புடையது. வைணவப்பதிகள் நூற்றியெட்டில் இதுவும் ஒன்றாகும். நின்றநாராயணப் பெருமாள் கோயிலில் சோழர், பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. இக்கோயிலில் இருந்து இதுவரை படியெடுத்து வெளியிடப் பெற்ற கல்வெட்டுகளில் பழமையானது முதல் பாரந்தக சோழனின் கல்வெட்டேயாகும். இக்கோயிலில் நடைபெற்ற களஆய்வின் போது பெருமாள் திருமுன்னில் முன்மண்டபத்திற்கு வெளிப்புறத்தில் நுழைவாயிலுக்கு அருகில் தரையில் தளமாகப் போடப்பட்ட கருங்கல் ஒன்றில் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று இருப்பது கண்டறியப்பெற்றது. இக்கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இதில் குறிக்கப்பெறும் மாறஞ்சடையன் என்ற முற்காலப் பாண்டிய மன்னன் கி. பி. 768 முதல் 815 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த பராந்தக நெடுஞ்சடையனாக இருக்கவேண்டும் என்று கூறலாம். இக்கல்வெட்டு இம்மன்னனின் முப்பத்தெட்டாவது ஆட்சியாண்டில் பொறிக்கப் பட்டிருக்கின்றது. கல்வெட்டில் திருத்தங்கலின் பழைய பெயர் வடிவமான திருத்தங்கால் என்பதைக் காணமுடிகின்றது. கோயிலுக்குத் தானமாக அளிக்கப்பட்ட ஊரானதால் இவ்வூர் ' தேவதானந்திருத்தங்கால்' என்ற அடைமொழியுடன் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றது. இக்கல்வெட்டில் குறிக்கப்பெறும் திருவேங்கடநிலைப் பெருமாளையே இன்று நின்றநாராயணப் பெருமாள் என்ற பெயரில் அழைக்கின்றனர். இப்பெருமாளுக்குத் திருநந்தாவிளக்கு எரிப்பதற்கு ஆடுகள் தானமளித்த அளற்றுநாட்டு நல்லூர்க்கிழவன் பாண்டி நாட்டில் இருந்த ' அளற்றுநாடு' என்ற நாட்டுப்பகுதிக்கு உரிமையுடைய நாட்டுத்தலைவனாக விளங்கியிருக்கின்றான். அளற்றுநாட்டு நல்லூர்க்கிழவன் பெரும்பாலும் பராந்தக நெடுஞ்சடையனின் அரசியல் அதிகாரியாகவும் விளங்கியிருக்க வேண்டும். அரசியல் பணியாகவும் வழிபாட்டு நோக்கத்தோடும் இவன் திருத்தங்கால் வந்த போது மேற்படி கொடையை அளித்திருக்கலாம். |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, திருத்தங்கல், வட்டெழுத்து, சிவகாசி, விருதுநகர், மாறஞ்சடையன், பாண்டியர் கல்வெட்டு, முற்காலப்பாண்டியர், பராந்தகநெடுஞ்சடையன், ஆவணம் இதழ் 2 |
| 752 | : | _ _ |a திருத்தங்கல் |c திருத்தங்கல் |d விருதுநகர் |f சிவகாசி |
| 914 | : | _ _ |a 9.47853 |
| 915 | : | _ _ |a 77.814275 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001856 |
| barcode | : | TVA_INS_001856 |
| book category | : | வட்டெழுத்து |
| cover | : |
|
| Primary File | : |