| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a கொங்கற்புளியங்குளம் |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a மூன்றாவது கல்வெட்டில் பாகனூர் குறிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தினுள் சோழவந்தான் பகுதியில் பாகனூர் அமைந்திருந்தது. இக்கல்வெட்டுள்ள மலையின் மறு பக்கத்தில் வைகையாறு ஓடுகிறது. வைகையாற்றின் வளத்தில் சிறந்து விளங்கிய ஊராக பாகனூர் கூற்றம் பாண்டியரின் வேள்விக்குடிச் செப்பேட்டில் சுட்டப்படுகிறது. பிடன் என்பதில் 'ட்' மெய் சேர்த்து பிட்டன் என்று கொள்ளலாம். இத்த என்ற சொல்லை ‘ஈத்த’ என்று படித்து ‘வழங்கிய’ எனப் பொருள் கொள்ளலாம். 'வெபோன்’ என்பதை வெண்பொன் - எனப் பொருள் கொள்ளலாம். இறுதியிலுள்ள குறியீடு பொற்காசின் எடை அல்லது எண்ணிக்கையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இவ்வகைக் குறியீடுகள் முத்திரை குத்திய பழமையான காசுகளிலும் அழகன் குளத்தில் கிடைத்த பகடைக்காய் ஒன்றிலும் பானை ஒட்டிலும் காணப்படுகின்றன. மூன்று கல்வெட்டுகளில் இக்கல்வெட்டு இறுதியில் உள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். பாகனூரைச் சேர்நத் பேரதன் பிட்டன் என்பவரால் இக்கொடை நல்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். |
| 653 | : | _ _ |a கொங்கற்புளியங்குளம், பெருமாள் கோயில் மலை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a பெருமாள் கோயில் மலை |c கொங்கற்புளியங்குளம் |d மதுரை |f திருமங்கலம் |
| 914 | : | _ _ |a 09°56’43"N |
| 915 | : | _ _ |a 77°59’17"E |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000018 |
| barcode | : | TVA_INS_000018 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |