MARC காட்சி

Back
திருவாதவூர்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a திருவாதவூர்
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் மதுரையிலிருந்து 20கி.மீ. தொலைவில் உள்ளது இவ்வூர். மாணிக்கவாசகர் பிறந்த ஊராகப் போற்றப்படும் பெருமை உடையது. இவ்வூரின் புறத்தே உவாமலை என்றழைக்கப்படும் குன்றுள்ளது. இக்குன்றில் உள்ள குகைத்தளத்தின் நீர்வடி விளிம்பில் கி.மு.2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு ஒரே வரியில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளை ஐ.மகாதேவன் 1996-இல் கண்டறிந்தார். பரசு என்ற உபசரால் இந்த உறைவிடம் (குகைத்தளம்) அமைக்கப்பட்டது என்பது இதன் பொருளாகும். உபசன் என்ற சொல் உபாத்யாயன், சமய ஆசிரியர் என்ற பொருள் உடையது. கல்வெட்டில் உள்ள ‘உபசன்’ என்ற சொல் கொங்கற் புளியங்குளம் தமிழ் - பிராமி கல்வெட்டிலும் காணப்படுகிறது. இச்சொல் உவச்சரையும் குறிக்கின்றது. இவர்கள் பல்லவர்காலக் கல்வெட்டுக்களில் கோயிலில் வாத்தியம் வாசிப்பவர்களாக இருந்துள்ளனர். திருவாய் மொழியில் பரசுதல் என்ற சொல், பாடுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
653 : _ _ |a திருவாதவூர், தமிழ்- பிராமி கல்வெட்டு, உவா மலை, சிவகங்கை, பண்டைய தமிழிக் கல்வெட்டு, சிவகங்கை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a உவா மலை சமண குகைத்தளம் |c திருவாதவூர் |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 09°56’43"N
915 : _ _ |a 78°18’06"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000014
barcode : TVA_INS_000014
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000014/TVA_INS_000014_திருவாதவூர்_குகைத்தளம்-001.jpg