MARC காட்சி

Back
பொற்குணம்-கூட்டுறவு அங்காடி
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a பொற்குணம்-கூட்டுறவு அங்காடி
520 : _ _ |a இக்கல்வெட்டு பொ.ஆ. 869 முதல் 901 வரை ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் கம்பவர்மனுடைய 25ஆவது ஆண்டுக் (பொ.ஆ. 894) கல்வெட்டு ஆகும். பல்லவ மன்னன் கம்பபோத்தரைய விக்கிரமன் என்று இதனில் குறிக்கப்படுகின்றான். பல்லவர்களது சிற்றரசர்களாக இப்பகுதியில் கங்கர்கள் இருந்தார்கள். பொற்குணம் என்று அழைக்கப்படும் இவ்வூர் பொற்குன்றம் என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. அது மண்டைக்குள நாட்டின் ஒரு ஊராக முன்பிருந்தது. இதனை கங்கமன்னரில் பிருதிகங்கரைசர் என்பவர் தன் முன்னோர் வழி மரபுரிமையில் (பிரிதிவிராச்சியம்) ஆட்சி செய்து வந்தார்.அவர் இவ்வூரில் ஏற்கெனவே பல்குன்றக் கோட்டத்து கீழ் வேணாட்டுக் காந்தளூர் கூற்றத்து புதனாட்ப்பாடியைச் சேர்ந்த பூதியூர் உடைய கோ என்பவரால் அமைக்கப்படிருந்த ஏரியின் பராமரிப்புக்காக இந்த ஏரியின் கிழக்குத் தூம்பின் நீரோடும் பாதையில் இருந்த இடத்தை பண்படுத்தி (திருத்தி) விளை நிலமாக்கிக் கொடுத்ததை இக்கல்வெட்டு சொல்கிறது. அப்படி திருத்தி விளை நிலமாக்கப்பட்ட நிலத்திற்கு கல்கிலியேரிச் செறு என்று பெயரும் கொடுத்துள்ளார். இந்தக் கொடையான ஏரிபராமரிப்பு நிலத்தை என்றென்றும் பாதுக்காத்து நிலைக்கச் செய்பவர்களின் கால்களைத் தன் தலை மீது வைத்துப் போற்றுவதாகவும் அந்த பிரிதிகங்கரையர் குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியில் ஏரி போன்ற நீர்நிலைகளை காக்க அக்காலத்து மன்னர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுத்ததைப் பற்றி கூறும் வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டு என்றும் கல்வெட்டு ஆய்வறிஞர் சு. இராஜகோபால் அவர்கள் தெரிவித்துள்ளார்.
653 : _ _ |a திருவண்ணாமலை, பொற்குணம், துரிஞ்சாபுரம், ஏரிக் கல்வெட்டு, கல்வெட்டு, பல்லவர், கம்பவர்மன், கங்கரையர், பிருதிவிகங்கரையர், கல்கிலியேரிச் செறு, நீர்நிலை, நீர் மேலாண்மை, தமிழகம்
752 : _ _ |a பொற்குணம் |c பொற்குணம் |d திருவண்ணாமலை |f துரிஞ்சாபுரம்
914 : _ _ |a 12.380052264544
915 : _ _ |a 79.122584331345
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001350
barcode : TVA_INS_001350
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001350/TVA_INS_001350_திருவண்ணாமலை_பொற்குணம்-005.jpg

TVA_INS_001350/TVA_INS_001350_திருவண்ணாமலை_பொற்குணம்-001.jpg

TVA_INS_001350/TVA_INS_001350_திருவண்ணாமலை_பொற்குணம்-002.jpg

TVA_INS_001350/TVA_INS_001350_திருவண்ணாமலை_பொற்குணம்-003.jpg

TVA_INS_001350/TVA_INS_001350_திருவண்ணாமலை_பொற்குணம்-004.jpg