கல்வெட்டு
மூத்தானூர்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | மூத்தானூர் |
|---|---|
| ஊர் | மூத்தானூர் |
| வட்டம் | அரூர் |
| மாவட்டம் | தருமபுரி |
| அமைவிடத்தின் பெயர் | பொன்னேரியின் கரை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இக்கல்வெட்டில் சகஆண்டு 847 குறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீரநுளம்பனின் ஆட்சி ஆண்டு (இரண்டு)ம் குறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வீரநுளம்பன் ஆட்சிக் கட்டிலேறியது சகஆண்டு 845 (கி.பி. 923) என்பதை தெரிந்துக் கொள்ள முடிகிறது.கி.பி. 925 இல் வல்லவரையர் நாட்டார் ஆநிரைகளைக் கவர்ந்து சென்ற செய்தியும், கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்கும் பணியிலீடுபட்டு பலான்னையூர் காமுண்டர் மணியர் மணியமனார் இறந்த செய்தியும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. காமுண்டர் என்பது கவுண்டர் என்பதன் தொன்மை வடிவு. மணியர் என்பது உட்குலப்பெயராய மணியங்குலம் அல்லது மணியங்கூட்டத்தைக் குறிப்பதாகும். வலக்கையில் குறுவாளும், இடக்கையில் வில்லுமேந்திய நிலையில் காட்சியளிக்கும் வீரனின் கால்புறத்தே இரண்டு ஆக்களும். ஒரு கெண்டியும் காணப்படுகின்றன. வீரனின் தலைக்கு மேலும், வலஇடப்புறங்களிலும் கல்வெட்டு வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 48 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |