000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a வீரபத்திரர் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a தந்தம் |
500 | : | _ _ |a தன்னை அழைக்காமல் அவமதித்து யாகம் செய்த தட்சனின் யாகத்தை அழிக்க சிவபெருமானால் படைக்கப்பட்ட வீரபத்திரர். |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தட்சனின் வேள்வியை அழிக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் வீரபத்திரர். வீரபத்திரர், சிவனினின் சம்ஹார திருக்கோலம் அல்லது அழிவு திருக்கோலங்களில் ஒன்றாகும். சிவபுராணம், மகாபாரதம், வாயு புராணம் போன்ற புராணங்கள், வீரபத்திரர் சிவனிடமிருந்து எவ்வகையில் தோன்றியது என்பதை விளக்கியுள்ளன. சிவனின் சதியான தாட்சியாயிணியின் தந்தை தட்சன் ஆவார். தட்சன் சில வரங்களைப் பெறுவதற்காக வேள்வி ஒன்றினை மேற்கொண்டான். இவ்வேள்விக்குச் சிவனைத் தவிர அனைத்து கடவுளர்களும் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இதனை அறிந்த தாட்சியாயினி தனது தந்தை தட்சனால் சென்று நீதி கேட்க முற்படுகையில் தட்சனால் அழிக்கப்படுகிறான். இதனால் சிவன் சினம் கொண்டு வேள்வி நடைபெறும் இடத்திற்கு சென்றார். கோபத்தில் தட்சனை அழிப்பதற்காகத் தமது சடாமுடியை விரித்துச் சுழற்றிய நிலையில் அம்முடி இரு பகுதிகளாகப் பிரிந்து, ஒரு பகுதியிலிருந்து வீரபத்திரரும், மற்றொரு பகுதியிலிருந்து மகா காளியும் தோன்றினர். ‘பத்ரா’ என்ற சொல்லுக்கு ஆசிர்வதிக்கப்பட்டவன் அல்லது மேன்மை பெற்றவன் என்று பொருளாகும். சிவனின் வியர்வைத் துளியிலிருந்து தோன்றியதால் வியர்வைப் புத்திரன் என்று பெயர் பெற்று, பின்பு வீரபத்திரன் ஆனான் என்றும் கூறப்படுகிறது. அக்னி வீரபத்திரர் தீச்சுவாலையை மகுடமாகக் கொண்டு, முக்கண்ணனாக, ஒலியெழுப்பும் மணிமாலையும் அணிந்துள்ளார். நான்கு திருக்கரங்கள் கொண்டுள்ளார். முன்னிரு கைகளால் நீண்ட சூலாயுதத்தை ஓங்கி இடது காலடியில் கிடக்கும் தட்சனின் தலையைக் கொய்கிறார். பாதுகைகளை அணிந்துள்ளார். பின்னிரு கரங்களில் மான், மழுவைப் பற்றியுள்ளார். முகத்தில் முறுக்கிய மீசையுடனும், வெளியில் நீண்டுள்ள கோரைப் பற்களுடனும், அரைக்காற் சட்டை அணிந்து காணப்படுகிறார். செவிகள், கழுத்து, கை, கால்களில் அணிகலன்களைப் பூண்டுள்ளார். |
653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், வீரபத்திரர், அக்னி வீரபத்திரர், திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சியகம் தந்த சிற்பங்கள் |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
914 | : | _ _ |a 12.00275101 |
915 | : | _ _ |a 79.06188179 |
995 | : | _ _ |a TVA_SCL_000543 |
barcode | : | TVA_SCL_000543 |
book category | : | தந்தச் சிற்பங்கள் |
cover images TVA_SCL_000543_திருவரங்கம்_வீரபத்திரர்-001.jpg | : |
![]() |
Primary File | : |