| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a சந்திரசேகரர் |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a தட்சனின் சாபத்தால் தன் கலைகளை இழந்த சந்திரனை தலையில் சூடிய சந்திரசேகரர் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a சமபாதத்தில் நிற்கும் சந்திரசேகர் மூர்த்தி 64 சிவ வடிவங்களுள் ஒன்றானவர். சடை மகுடமாக தலைக்கோலத்தைக் கொண்டுள்ள சந்திரசேகர மூர்த்தி நெற்றிப் பட்டை அணிந்துள்ளார். நீள் செவிகளில் வலதில் சங்கக்குழையும், இடதில் மகரக் குழையும் அணிந்துள்ளார். கழுத்தில் சரப்பளி அழகு செய்கின்றது. மார்பில் உத்தரீயம் எனப்படும் துணியாலான முப்புரி நூல் காட்டப்பட்டுள்ளது. வயிற்றில் உதரபந்தம் அமைந்துள்ளது. அரைப்பட்டிகையுடன் கூடிய கணுக்கால் வரையிலான நீண்ட ஆடை அணிந்துள்ளார். இடைக்கட்டு (கடி பந்தம்) முன்புறம் தொடைகளில் வளைவாகக் காட்டப்பட்டுள்ளது. இடைக்கட்டின் முடிச்சு வலது பின்புறம் அமைந்துள்ளது. நான்கு திருக்கைகளில் வலது முன் கை அபய முத்திரையாகவும், இடது முன் கை ஊரு முத்திரையாக தொடையில் வைத்தவாறும் அமைந்துள்ளன. பின் வலது கையில் மழு ஏந்தியுள்ளார். இடது பின் கையில் உள்ளது இன்னதென்று அறியக்கூடவில்லை. பல்லவ சிற்பியின் கைவண்ணத்தில் புன்னகைத்த முகமாய் நிற்கிறார். |
| 653 | : | _ _ |a சந்திரசேகரர், சந்திரசேகரமூர்த்தி, சிவ வடிவங்கள், , மாமல்லை, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம், சிவமூர்த்தங்கள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
| 905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
| 914 | : | _ _ |a 12.626927 |
| 915 | : | _ _ |a 80.1927109 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000421 |
| barcode | : | TVA_SCL_000421 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |