MARC காட்சி

Back
மகாவீரர்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a மகாவீரர்
300 : _ _ |a சமணம்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a 24 சமண தீர்த்தங்கரர்களில் 24-வது தீர்த்தங்கரர் மகாவீரர்
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a சமண தீர்த்தங்கரர்களில் 24-வது தீர்த்தங்கரரான வர்த்தமானர் என்ற இயற்பெயர்கொண்ட மகாவீரர் கி.மு. 599 வருடம், இந்தியாவின் பீகார் மாநிலம் வைசாலிக்கு அருகிலுள்ள குண்டா என்ற இடத்தில் சித்தார்த்தர்-திரிசலாவுக்கு மகனாக அரசக் குடும்பத்தில் பிறந்தார். சமணக் கொள்கைகளில் பற்று கொண்ட மகாவீரர் மனித வாழ்க்கையின் அர்த்தம் தேடி, சுமார் பனிரெண்டு ஆண்டுகள் தியானம் மற்றும் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டு சாலா என்னும் மரத்தடியில் ஞானம் பெற்றார். மகாவீரர் என்றால் பெரும்வீரர் என்று பொருள். தான் கண்ட உண்மைகளை உலகத்திற்கு எடுத்துரைக்க விரும்பிய மகாவீரர், இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு, தாம் அறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தார். இவரே சமண சமயத்தில் தோன்றிய கடைசி தீர்த்தங்கரும் ஆவார். தமது காலத்திற்கேற்ப சமண மத கொள்கைகளை சீர்திருத்தம் செய்தார். சிதராலில் அமைந்துள்ள சமண சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. அங்க அமைப்புகளும், ஆடை அணிகளும் மிகவும் இயல்பான நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டவை. இங்குள்ள சிற்பங்கள் யாவும் கலையழகு சொட்டும் எழில் முகத்தினைப் பெற்றுள்ளன. அசோக மரத்தின் கீழ் மகாவீரர் அர்த்த பத்மாசனத்தில் பீடத்தின் மேல் அமர்ந்துள்ளார். பீடத்தின் பின்னால் இருபுறமும் யாளிகள் தாங்கும் தூண்களையுடைய சாய்மானத்தில் திகம்பரராய், திசைகளையே ஆடையாக உடுத்து, நீள் தொள்ளைக் காதுகளுடன் யோக நிலையில் காட்சியளிக்கிறார். தலையின் மேல் முக்குடை காட்டப்பட்டுள்ளது. அவை மகாவீரர் கூறிய மூன்று ரத்தினங்கள் என்னும் சமணக் கொள்கைகளை குறிப்பிடுவனவாக காட்டப்படும் குறியீடாகும். மகாவீரர் அமர்ந்துள்ள சாய்மானத்தின் மேல் அமர்ந்த நிலையில் இரு சாமர வீர்கள் காட்டப்பட்டுள்ளனர். மகாவீரரின் தலைக்கு மேல் இடதுபுறம் ஒருவர் காட்டப்பட்டுள்ளார்.
653 : _ _ |a மகாவீரர், 24-வது தீர்த்தங்கரர், வர்த்தமான மகாவீரர், சமணர் குடைவரை, தீர்த்தங்கரர், சிதரால், சிதறால், கன்னியாகுமரி, தோவாளை, சமணர் சிற்பங்கள், சமணர் குடைவரை, சமணர் சிற்பங்கள், பாண்டிய நாட்டு சமணம், பாண்டிய நாட்டு சமண சிற்பங்கள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a சிதரால் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c சிதரால் |d கன்னியாகுமரி |f தோவாளை
905 : _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
914 : _ _ |a 8.3323779
915 : _ _ |a 77.2384304
995 : _ _ |a TVA_SCL_000285
barcode : TVA_SCL_000285
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000285_சிதரால்-_மகாவீரர்-001.jpg